திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான நிறுவன அலுவலகத்தில் அமலாக்கத்துறை யினர் சோதனை
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான நிறுவன அலுவலகத்தில் அமலாக்கத்துறை யினர் சோதனை.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபானங்கள் விற்பனை நிறுவன அலுவலகத்தில் அமலாக்கத்துறை யினர் சோதனை. தியாகராயநகர் பாண்டி பஜார் திலக் தெருவில் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான அக்கார்டு டிஸ்டில்லரீஸ் நிறுவனம் உள்ளது. ஸ்ரீ நிஷா ஜகத்ரட்சகன்,, மற்றும்
சந்தீப் ஆனந்த் ஜெகத்ரட்சகன் இயக்குனராக உள்ள அக்கார்டு ப்ரூவரீஸ் அண்ட் டிஸ்டில்லரீஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை, தமிழ்நாடு, ஏஎம் ப்ரூவரீஸ் பிரைவேட் லிமிடெட் என பதிவான நிறுவனம் மதுபானங்களை உற்பத்தி செய்வதிலும் விற்பனை செய்வதிலும் ஈடுபட்டுள்ள நிறுவனம் சென்னையை ஸ்தளமாகக் கொண்ட அக்கார்டு குழுமத்தின் ஒரு பகுதியாகும், இது திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்
ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களால் நிர்வகிக்கப்படுகிறது. ஜனவரி 2018 ல் அக்கார்டு டிஸ்டில்லரீஸ் & ப்ரூவர்ஸ் பிரைவேட் லிமிடெட் என பெயர் மாற்றப்பட்டது. எலைட் டிஸ்டில்லரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை ஏடிபிபிஎல் நிறுவனத்துடன் இணைப்பது அக்டோபர் 2018 ல் மாநில கலால் துறையால் அங்கீகரிக்கப்பட்டது. இங்கு தற்போது அமலாக்கத் துறையினர் சோதனை நடத்துகிறார்கள்.
சென்னை எழும்பூரில் தாளமுத்து நடராசன் மாளிகையிலுள்ள தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும், SNJ நிறுவனத்திலும் அமலாக்கத் துறையின் சோதனை நடத்தி வருகிறது. நாடு முழுவதுமுள்ள SDPI அலுவலகத்திலும் சோதனை சென்னையில் 4 இடங்களில் சோதனை நடக்கிறது.காலை முதல் கரூர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களான கரூர் ராயனூரில் கொங்கு மெஸ் மணி மற்றும் கரூர் ஆத்தூர் பிரிவு கோதை நகரில் சக்தி மெஸ் சக்திவேல்,
செந்தில் பாலாஜியின் ஆதரவாளரும் பொதுப் பணித் துறை ஒப்பந்ததாரருமான M.C.S.சங்கரின் வீடு உள்ள கரூர் பழனியப்பா நகரிலும் அமலாக்கத் துறையினர் காலை முதல் 5 கார்களில் வந்த 20 அலுவலர்கள் சோதனை நடத்துகிறார்கள்.கேரளா, தெலுங்கானா மாநிலங்களைச் சேர்ந்த அமலாக்கத்துறை அலுவலர்கள், மத்தியப் பாதுகாப்புப் பணியின் காவலர்கள் உதவியுடன் சோதனை நடத்துகின்றனர்.
கரூரைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த். இவருக்கு செங்குந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் வீடு உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மிகவும் நெருக்கமான நண்பர். ஏற்கனவே செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்ற போதெல்லாம்
சங்கர் ஆனந்த் வீடு, மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
கருத்துகள்