கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி கே. பழனிச்சாமியின் முதன்மைப் பாதுகாப்பு அலுவலருக்கு சம்மன்
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டுமென்று, செல்வி.ஜெ.ஜெயலலிதா மற்றும் எடப்பாடி கே. பழனிசாமியின் முதன்மை பாதுகாப்பு அலுவலராக இருந்த வீரபெருமாளுக்கு சம்மன் வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட்டில் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. தொடர்பாக சயான், வாளையார் மனோஜ், ஜிதின் ஜாய், ஜம்ஷேர் அலி, மனோஜ் சாமி உள்பட 10 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர். வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்தக் கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை உதகமண்டலம் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. கோயம்புத்தூரிலுள்ள அலுவலகத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் 250-க்கும் மேற்பட்டவர்களை நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தொடர்ந்து, அவர்களது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. கோடநாடு எஸ்டேட்டில் பல ஆண்டுகளாக மேலாளராகப் பணியாற்றி வந்தவர் நடராஜன். இந்தக் கொலை, கொள்ளை தொடர்பாக அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கும் என்பதால் கோயம்புத்தூர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நடராஜனிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர் நடராஜனிடம் 8 மணி நேரம் காவல்துறையினர் விசாரணை செய்தனர். காவல்துறை கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் அவர் அளித்த பதிலை வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர். மேற்கொண்டு விசாரணைக்கு அழைத்தால் தவறாமல் ஆஜராக வேண்டுமென்றும் அவரிடம் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து
நடராஜனிடம் 8 மணி நேரம் காவல்துறையினர் விசாரணை செய்சதனர். கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் அவர் அளித்த பதிலை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். மேற்கொண்டு விசாரணைக்கு அழைத்தால் வராமல் ஆஜராக வேண்டும் என்றும் அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் 11 ஆம் தேதியன்று வீரபெருமாள் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டுமென்று சிபிசிஐடி காவல்துறையினர் சம்மன் அனுப்பினர்
இந்த சம்பவத்தின்போது பாதுகாப்புப் பிரிவின் ஆய்வாளராக இருந்தவர் கனகராஜ். இறுதியாக விபத்தில் உயிரிழந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜுக்கு குறுஞ்செய்தி அனுப்பியது மற்றும் இதுவரை தனது சொல்போனை ஒப்படைக்காதது குறித்தும் வீரபெருமாளிடம் சிபிசிஐடி காவலர்கள் விசாரணை நடத்தப்படவுள்ளதாககா கூறப்படுகிறது.
கருத்துகள்