வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் வேப்பூர் ஆர்.எஸ் கிராமத்தில்
வசிப்பவர் 40 வயதுள்ள நிஜாமுதீன் ஆட்டோ ஓட்டுனர் அவரது தாயார் பரிதா பேகத்தின் பெயரில், வீட்டுக்கு அருகிலுள்ள 639 சதுரடி காலிமனை இடத்தை மகன் நிஜாமுதீன் பெயருக்கு 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தான செட்டில்மென்ட் பதிவு பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளார்.
பள்ளிகொண்டா பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு முடிந்த நிலையில் பரிதா பேகத்தின் பெயரிலுள்ள பட்டாவின் பெயரை மாற்றம் செய்ய ஆன்லைனில் பத்திரப் பதிவு அலுவலகத்தில் இருந்து நேரடியாக விண்ணப்பம் மூலம் வேப்பூர் ஆர்.எஸ் கிராம நிர்வாக அலுவலர் கோபியிடம் பரிந்துரை செய்திருந்ததை வேப்பூர் கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்கும் போது, அவரிடம் லஞ்சம் கேட்டதாகவும்.
இதையடுத்து கிராம நிர்வாக அலுவலகத்துக்குச் சென்ற நிஜாமுதீன், "ஏன் இதுவரை பட்டாவில் பெயர் மாறவில்லை" என கிராம நிர்வாக அலுவலர் கோபியிடம் கேட்டுள்ளார். அதற்கு கோபி, "என்னைக் கேட்காமல் எப்படி நீங்கள் தான செட்டில்மென்ட் பதிவு செய்து கொடுக்கலாம்" எனக் கேட்டுள்ளார்.. இதையடுத்து, ஆன்லைனில் பட்டா மாற்றம் கோரி 2 முறை நிஜாமுதீன் மனு செய்துள்ளார்.அப்போதும் பரிதா பேகத்தின் பெயரிலேயே பட்டா மாறாமல் இருந்துள்ளது. வேறு வழியில்லாமல் மறுபடியும் கிராம நிர்வாக அலுவலர் கோபியிடம் இதுகுறித்து நிஜாமுதீன் கேட்டிருக்கிறார்.
அப்போது தான், ரூபாய்.15 ஆயிரம் லஞ்சமாகத் தந்தால் தான் பட்டா மாற்றம் செய்யப்படும் எனக் கூறினார் அதைக்கேட்டு அதிர்ந்த நிஜாமுதீன், அவ்வளவு பணம் என்னால் கொடுக்க முடியாத நிலைமையில் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். அப்போதும் கிராம நிர்வாக அலுவலர் விடாமல், "ரூ.10 ஆயிரம் கொடுத்தால் பட்டா பெயர் மாற்றம் செய்து தருகிறேன்" என்றாராம். அந்த லஞ்சப் பணத்தைக் கொடுக்க விரும்பாத நிஜாமுதீன், வேலூர் மாவட்டம் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்சஒழிப்புத் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் புகார் தந்ததன் பேரில், அவரிடம் ரூபாய்.10 ஆயிரம் பெற்ற பணத்தில் பினாப்தலின் இரசாயனப் பொடி தடவியதை திரும்ப அரசு சாட்சிகள் முன்னிலையில் கொடுத்து அனுப்பி வைத்திருந்த பணத்தை கிராம நிர்வாக அலுவலர் கோபி பெற்ற போது மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்சஒழிப்புத் துறை அலுவலர்கள் கிராம நிர்வாக அலுவலர் கோபியை லஞ்சம் பெற்ற கையுடன் பிடித்துக் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். இதில் பொது நீதி யாதெனில் இது தான் அரசு online மூலம் தானாகவே மாற்றம் செய்யும் பட்டா அதன் நிலை தற்போது இந்த வழக்கு உணர்த்தும்.
கருத்துகள்