நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
மன்னிப்புக் கேட்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் வாசலில் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை ‘ஜனநாயகமற்றவர்கள்’ ‘அநாகரிகமானவர்கள்’-என்று பேசிய விவகாரம் குறித்து இன்று
மக்களவையில் ஒத்திவைப்புத் தீர்மானம் நாடாளுமன்ற உறுப்பினர் சார்பில் தாக்கல் செய்தனர்.
அதேபோல் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதானைக் கண்டித்து திமுக சார்பில் தேனி மாவட்டத்தில் நடத்திய உருவ பொம்மை எரிப்புப் போராட்டங்களில் பங்கு பெற்ற திமுக நிர்வாகிகள் இருவேறு இடங்களில் நடத்திய நிகழ்ச்சியில் இருவர் மீது தீப்பற்றியது. நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாகரிகமற்றவர்கள் எனப் பேசியதாகவும் அதற்கு கண்டனம் தெரிவித்து,
தேனி நகரில் நேரு சிலை அருகில் மத்திய அமைச்சர் கொடும்பாவி எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர் பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் தலைமையில் தேனி நகரச் செயலாளர் நாராயண பாண்டியன் முன்னிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானைக் கண்டித்து திமுக சார்பில் தேனி மாவட்டத்தில் நடத்திய உருவ பொம்மையான கொடும்பாவி எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்
திமுகவின் நிர்வாகிகள் பங்கேற்றதில், மத்திய அமைச்சர் உருவ பொம்மை (கொடும்பாவி) எரித்த போது தேனி நகர திமுகவின் நெசவாளர் அணி அமைப்பாளர் ராஜகண்ணன் மீதும் தீபற்றியது. அதை அணைத்தனர் அவரது கையில் தீக்காயம் ஏற்பட்டது. தர்மேந்திர பிரதான் உருவ பொம்மையை திமுகவினர் எரித்த போது எதிர்பாராமல் -விளம்பரம்- -விளம்பரம்-
போடிநாயக்கனூர் 1-வது வார்டு செயலாளர் சந்திரசேகர் மீது தீ பற்றியது. சுதாரித்த சந்திரசேகர் அவரதுது வேட்டியை அவிழ்த்து வீசிய நிலையில் தற்காத்துக் கொண்டார். அருகிலிருந்தவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். பிறகு மீண்டும் போராட்டத்தை போடிநாயக்கனூர் நகர் திமுகவின் நிர்வாகிகள் தொடர்ந்ததால் போடிநாயக்கனூர் நகர் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்து தீக்காயம் ஏற்பட்ட சந்திரசேகரை மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று முதலுதவி செய்தனர்.
கருத்துகள்