சிவகங்கையில் மருதுபாண்டியர் நல அறக்கட்டளை சார்பில் போட்டித் தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பினை வழங்க புதிய பயிற்சி வகுப்புகளை துவங்கியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் டி.என்.பி.எஸ்.சி. உள்ளிட்ட போட்டித் தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் சென்னை அகமுடையார் வளர்ச்சி சங்கம் மற்றும் மருது பாண்டியர் நல அறக்கட்டளை சார்பில் துவங்கப் பட்டன. கல்வி நிறுவனங்களில் பணம் செலுத்த இயலாத நிலையிலுள்ள மாணவர்களுக்காக அகமுடையார் வளர்ச்சி கல்வி சங்கம் மருதுபாண்டியர் நல அறக்கட்டளை சார்பில்
2025-ஆம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியாகும் நிலையில், இந்த மையத்தில் டி.என். பி.எஸ்.சி. குரூப் 4 தேர்விற்கு காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சி மையத்தில் மருதுபாண்டியர் அறக்கட்ட ளை சங்க தலைவர் அறிவு திலகம் தலைமையில் அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்க தலைவர் இராவணன் ஞானசுந்தரம் குத்து விளக்கேற்றித் துவங்கி வைத்தார். மூத்த வழக்கறிஞர் எம்.மோகனசுந்தரம், பொருளாளர் சுந்தரமாணிக்கம் வாழ்த்துரை வழங்கினர். நிர்வாகிகள் குமரேசன், சுபாஷ் சந்திரபோஸ், சுகுமாரன், நாராயணமுர்த்தி, பஞ்சாட்சரம், செல்வராஜ், சரவணன், விக்னேஸ்வரன், இளங்கோவன், மகேந்திரன், சுரேஷ்குமார் ஆகியோர் உரையாற்றினர். கணேசன் நன்றி கூறினார்.
கருத்துகள்