வெளிநாடுகளில் இருந்து FCRA அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக ரூபாய்.1.5 கோடி நிதி பெற்றது தொடர்பான வழக்கில்
மனித நேய மக்கள் கட்சியின் பாபநாசம் சட்ட மன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா மற்றும் ஹைதர்அலி உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. உடந்தையா இருந்த ஹைதர் அலிக்கும் ஒரு ஆண்டு சிறை வெளிநாட்டில் இருந்து அனுமதியின்றி நிதி பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
1997 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 20 ஆம் தேதி, 2000 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து FCRA அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக ரூபாய்.1.5 கோடி பெற்றது தொடர்பான வழக்கில் மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோருக்கு ஓராண்டு காலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
அந்த உத்தரவை எதிர்த்து ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் சென்னை மாவட்ட 6-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை 6-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கே.தனசேகரன் நேற்று விசாரித்து, ஜவாஹிருல்லா உள்ளிட்ட 5 பேருக்கும் விதிக்கப்பட்ட தண்டனை மற்றும் அபராதத்தை உறுதிசெய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்திலா மேல்முறையீடு செய்தனர்.
இந்த நிலையில், மனித நேய மக்கள் கட்சி சட்ட மன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை சென்னை உயர் நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.
அதன்படி ஜவாஹிருல்லா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஹைதர்அலி, சையது நிஷார் அகமது, ஜி.எம்.சேக் மற்றும் நல்ல முகமது களஞ்சியம் ஆகியோரின் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார்.
மேலும் ரம்ஜான் நோன்பு காலம் என்பதால் உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, தீர்ப்பை ஒரு மாதத்துக்கு நிறுத்தி வைப்பதாக நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.கரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி,
திருக்கோவிலூர் சட்ட மன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் க.பொன்முடி
ஶ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர்- பழனியாண்டி அடுத்து
பாபநாசம் சட்ட மன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா என திமுக சார்ந்த பலர் தண்டனை பெறுவது சமீபத்தில் அதிகரித்துள்ளது.
கருத்துகள்