SDPI தலைவர் எம்.கே.ஃபைசி கைது!
பாப்புலர் ஃபிரண்ட்_ஆப் இந்தியா அமைப்பை மத்திய அரசு 2022 ஆம் ஆண்டு தடை செய்த நிலையில் அந்த அமைப்பின் தலைவர்களையும் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்தது சிறை வைத்தது. பி.எஃப்.ஐ. தொடர்பான வழக்கு என்ற பெயரில் நாடெங்கும் அவ்வப்போது தீவிரவாத தடுப்பு நடவடிக்கையாக சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பி.எஃப்.ஐ. அமைப்பின் நிதி குறித்த விசாரணை வழக்கில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசியத் தலைவர் எம்.கே.பைஃசியை டெல்லி விமான நிலையத்தில் வைத்து அமலாக்கத்துறை யினர் கைது செய்தனர். கடந்த பிப்ரவரி மாதம்.28 ஆம் தேதி கேரளாவில் உள்ள அவரது வீட்டில் அமலாக்கத்துறை யினர் சோதனை நடத்திய நிலையில், நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.
கருத்துகள்