பாகிஸ்தானுக்கு பதிலடி தருவதில் இந்திய முப்படைகளுக்கு முழு சுதந்திரம்: பிரதமர் நரேந்திர மோடி உறுதி பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி தருவதற்கான உயர்மட்ட ஆலோசனை கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டில்லியில் இன்று நடந்த கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், முப்படை தளபதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, எதிரிகள் மீது எந்த இடத்தில், எந்த நேரத்தில் எந்த இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதில் முப்படைகள், தாங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றார். இன்று டில்லியில் உள்துறை அமைச்சகத்தில் பாதுகாப்பு தொடர்பான முக்கியக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன்,எல்லைப் பாதுகாப்புப் படை, அசாம் ரைபிள்ஸ் மற்றும் தேசிய பாதுகாப்புப் படையின் இயக்குநர் ஜெனரல்கள், மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை மற்றும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து டில்லியில் ...
RNI:TNTAM/2013/50347