மாவட்ட ஆட்சியரின் உறவினர் என பட்டயக் கணக்காளரிடம் ரூபாய்.1 கோடி லஞ்சம் வாங்கிய காவல்துறை ஆய்வாளர் கைது; காவல்துறை பணியிலிருந்து ஓய்வு பெற்ற சைலேந்திரபாபு DGP யாக இருந்த போது, DGP வேலையைத் தவிர, மற்ற "வேலைகளைத்" தான் பார்த்ததாக மக்கள் மத்தியில் அப்போது பரவலாகப் பேசிக் கொண்டிருந்தார்களே ஏன் தெரியுமா?
இவரால், பாராட்டுப் பெற்றவராம் இந்த 1 கோடி லஞ்சம் வாங்கிய ஆய்வாளர் நெப்போலியன். இப்போது புரிகிறதா... உண்மை! கும்பகோணம், குடந்தை ராமசுவாமி கோவில் பகுதி பட்டயக் கணக்காளர் ரவிச்சந்திரன் (வயது 68) க்குச் சொந்தமாக குலசேகரநல்லூர் கிராமத்திலுள்ள 80 சென்ட் நிலத்தை அவருடைய மருமகன் வெங்கடேஷூக்கு 2020 ஆம் ஆண்டு விற்பனை செய்த நிலத்தை நீர்வளத்துறையினர் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டும் பணிக்காக நில ஆர்ஜிதம் செய்து கையகப்படுத்தி, அதற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய்.54 லட்சம் வழங்கினர்
பின் இரவிச்சந்திரன், நீர்வளத்துறையினர் கையகப்படுத்திய நிலத்திலிருந்த 30 தேக்கு மரங்களை யாருக்கும் தெரியாமல் சட்டவிரோதமாக வெட்டியுள்ளதையறிந்த நீர்வளத் துறை அலுவலர்கள், வருவாய்த்துறைக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திலிருந்து 30 தேக்குமரங்களையும். கைப்பற்றி, கும்பகோணம் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அது பற்றி பந்தநல்லூர் காவல் நிலையத்தில் வருவாய்த் துறையினர் கொடுத்த புகாரில் காவல் துறை விசாரணை மேற்கொண்டதையறிந்த அரியலூர் மாவட்டம் திருமாந்துறையைச் சேர்ந்த தற்போது தர்மபுரி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப்பிரிவில் பணியாற்றி வரும் காவல்துறை ஆய்வாளர் தெப்போலியன் மார்ச் மாதம் 8 ஆம் தேதி பட்டயக் கணக்காளர் இரவிச்சந்திரனைத் தொடர்பு கொண்டு, தேக்கு மரங்கள் வெட்டியது தொடர்பாக பந்தநல்லூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப் போவதாகவும், தான் வழக்குப்பதிவு செய்யாமலிருக்க வேண்டுமானால் ரூபாய். ஒரு கோடியைத் தனக்கு வழங்குமாறும் அதிகாரத் தோரணையில் மிரட்டி லஞ்சம் கேட்டுள்ளார்.
மேலும் மாவட்ட ஆட்சியருக்கு உறவினர் என்றும் நம்ப வைத்ததையடுத்து பந்தநல்லூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க, பட்டயக் கணக்காளர் இரவிச்சந்திரன், காவல்துறை ஆய்வாளர் நெப்போலியனிடம் ரூபாய்.25 லட்சம் ரூபாய். 55 லட்சம், ரூபாய். 20 லட்சம் என தர்மபுரி உள்ளிட்ட பல இடங்களுக்குச் சென்று ரூபாய். ஒரு கோடியைக் கொடுத்துள்ளார்.
இதையடுத்து காவல்துறை ஆய்வாளர் நெப்போலியன் மீண்டும் இரவிச்சந்திரனைத் தொடர்பு கொண்டு, மேலும் ரூபாய் ஒரு கோடி வழங்க வேண்டும் என மிரட்டியுள்ளதால் மனமுடைந்த இரவிச்சந்திரன், தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில், காவல்துறை ஆய்வாளர் நெப்போலியன் மீது புகார் செய்தார் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறை கண்காணிப்பாளர் இராஜா ராமன் உத்தரவிட்டதையடுத்து தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவுக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்தனர். கடந்த 3 ஆம் தேதி தர்மபுரி தொப்பூர் சுங்கசாவடி பகுதியில் ஆடிட்டர் இரவிச்சந்திரனிடமிருந்து காவல்துறை ஆய்வாளர் நெப்போலியன் ரூபாய். 5 லட்சம் வாங்கிய போது மறைந்திருந்த தனிப்படைக் காவல்துறையினர், நெப்போலியனைக் கைது செய்து, தஞ்சாவூர் மாவட்டக் குற்றப்பிரிவுக் காவல் நிலையத்தில் கொண்டு வந்து தீவிரமாக விசாரணை நடத்தினர். பின்னர் கும்பகோணம் முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் முன் ஆஜர்படுத்தி நெப்போலியனை புதுக்கோட்டை சிறைச்சாலையில் அடைத்தனர்.
கருத்துகள்