தமிழ்நாடு அரசு சட்டமன்றப் பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்தது உச்சநீதிமன்றம்
தமிழ்நாடு அரசு சட்டமன்றப் பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்தது உச்சநீதிமன்றம்.
குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்த 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிப்பதாக
உச்சநீதிமன்றத்திற்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கும் சட்டப்பிரிவு 142 ன் படி உச்சநீதிமன்றம் உத்தரவு .
"எங்களுக்கு இதை விட்டால் வேறு வழி தெரியவில்லை” என குறிப்பிட்டு மசோதாக்களுக்கு உடனடி ஒப்புதல் வழங்கியது.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்.
ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது; மாநில அரசின் ஆலோசனைப்படியே செயல்பட வேண்டும் - உச்சநீதிமன்றம்.
பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்க வேண்டும்.
மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது சட்டவிரோதம்.
மசோதாக்கள் மாற்றப்பட்டிருந்தால் மட்டுமே குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியும், தமிழ்நாடு அரசு தொடந்த வழக்கில் உச்ச நீதிமன்றம். உத்தரவு. ஆளுநர் திருப்பி அனுப்பி, இன்று நீதிமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள 10 மசோதாக்களின் விவரம் ~
1) சென்னை பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா,
2) தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக திருத்த மசோதா
3) தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா
4) தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா
5) தமிழ்நாடு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக திருத்த மசோதா
6) தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா
7) தமிழ் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா
8) தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக மசோதா
9) அண்ணா பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா
10) அத்துடன் தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்டத் திருத்த மசோதாவாகும்
அரசியலமைப்பு சாசனம் 200-வது பிரிவின் படிதான் ஆளுநர் செயல்பட வேண்டும். அரசியலமைப்பு படியே ஆளுநர் ர் செயல்பட வேண்டுமே தவிர அரசியல் சார்போடு செயல்படக்கூடாது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து ஆளுநர்கள் ஒரு மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.கவர்னருக்கு என தனிப்பட்ட (VETO) அதிகாரமில்லை. பொதுவான விதியின் படி, மாநில அரசின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரையின்படியே ஆளுநர் செயல்பட முடியும். ஆளுநர் தனது விருப்பப்படி செயல்பட முடியாது,
அதற்கு அரசியலமைப்பு இடமளிக்கவில்லை. தமிழ்நாடு ஆளுநர் செயல்பாடுகள் அரசியலமைப்பு சட்டப்படி வரையறுக்கப்பட்ட நோக்கத்துக்கு எதிரானதாக உள்ளது. இந்த நிலையில் பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து ஆளுநர் விடுவிக்கப்பட்டிருப்பதாக திமுகவின் மூத்த வழக்கறிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வில்சன் கூறியுள்ளார். இதையடுத்து
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருந்தது சட்டவிரோதமானது; அந்தச் சட்டமுன்வடிவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகக் கருதப்பட வேண்டுமென்றும்உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறித்து சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்தோடு உரையாற்றினார். இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று திமுக மூத்த வழக்குரைஞர் வில்சன் செய்தியாளர்களைச் சந்தித்தார், அப்போது உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து விளக்கமளித்தார்."வேந்தர் பதவியில் இனி ஆளுநர் நீடிக்க வேண்டிய அவசியமில்லை. பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து ஆளுநர் நீக்கப்பட்டார். இனி, பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்களை நியமிப்பதில் தமிழ்நாடு அரசுக்கே அதிகாரம் கிடைத்திருக்கிறது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் காலம் தாழ்த்தக் கூடாது எனவும், மீண்டும் அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒரு மாதத்தில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சென்னை அருகே புதிய சித்த மருத்துவப் பல்கலைக்கழகம். அமைக்கும் மசோதாவுக்கும், தமிழ்நாடு மீன் வளப் பல்கலைக்கழகத்தை ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம். என பெயர் மாற்றம் செய்யும் மசோதாவுக்கும் தற்போது ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது" என வில்சன் கூறினார்.
ஒரு மாநில அரசு அரசியலமைப்பு சட்டத்திற்க்கு விரோதமான தீர்மானங்களை சட்டமன்றத்தில் இயற்றும் போது ஒரு ஆளுநராக ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைக்கும் போது அதே ஒரு மாநில ஆளுநருக்கு எதிராக அந்த சட்டவிரோத தீர்மானத்திற்க்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளிக்குமானால் அந்த மாநிலத்திற்க்கு ஆளுநர் என்பவர் எதற்கு எல்லாத்தையும் உச்ச நீதி மன்றமே செல்படுத்தலாமென்றால் மத்தியிலும், மாநிலத்திலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசுகள் எதற்கு என்பதுதான் தற்போது அரசியல் கட்சிகள் மத்தியில் எழும் கேள்வியாக உள்ளது? மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி ஏற்றதிலிருந்து நிர்வாக ரீதியிலான மசோதாக்கள் 48 க்கு ஒப்புதல் வழங்கியுள்ளார், 3 மசோதாக்கள் ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது
தேங்கி இருந்து தற்போது உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வந்த பத்து மசோதா ( 11 ல்) மசோதாக்கள் அனைத்தும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் உரிமை மற்றும் துணை வேந்தர்கள் நியமனம் குறித்துத் தான், இது UGC வகுத்துள்ள விதிகளின் படி தான் நிறுத்தப்பட்டுள்ளது, இதில் சட்ட மீறல் எதுவும் இல்லை என விவாதம் வந்ததா? என்பதும் அல்லது பிரிவு 142 ன் படி மட்டுமே தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் ஆளுநரிடம் விளக்கம் அவர் தரப்பில் கேட்ட விபரம் என்ன என்பதை இனி அரசியல் சாசன அமர்வுக்கு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யப்படுமா ? என்பது குறித்தும் தகவல் வந்தால் தான் தெரியும் இதுவரை விபரம் தெரியவரவில்லை.
கருத்துகள்