முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜம்மு காஷ்மீர் பெகல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 27 பேர் பலி.

ஜம்மு காஷ்மீர் பெகல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 27 பேர் பலி.




உள்துறை அமைச்சர் அமித்ஷா சம்பவ இடத்திற்கு விரைந்தார்

இராணுவம் மிக தீவிரமாக தீவிரவாதிகளைத் தேடுகிறது.    காஷ்மீரின் பஹல்காம் பகுதியின் காஷ்மீரில் '27' அப்பாவி சுற்றுலா சென்ற மக்கள்  பாக்கிஸ்தான் பயங்கரவாதிகளால் கொள்ளபட்டுள்ளனர்.  



பலி மேலும் அதிகரிக்கும் எனத் தகவல் பைசாராம் பகுதியில் 40க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கூடியிருந்த போது, அங்கு வந்த பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் 2 அல்லது 3 பேர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.  இதில், 27 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.கர்நாடகாவைச் சேர்ந்த பல்லவி என்பவர் தெரிவித்த போது "கணவர் மஞ்சுநாத், மகன் உடன் சுற்றுலா சென்றோம். பயங்கரவாதிகள் தாக்குதலில் எங்கள் கண் முன்னர் கணவர் உயிரிழந்தார். என்னையும் கொன்று விடும்படி கூறியபோது, உன்னைக் கொல்ல முடியாது. போய் மோடியிடம் கூறு என்றனர். எங்களை உள்ளூர் மக்கள் தான் காப்பாற்றினர்" என பகுதி பத்திரிகைமாளரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா தனி விமானம் மூலம் காஷ்மீர் புறப்பட்டார். 




இந்தத் தாக்குதலுக்கு, பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) எனும் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.


அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் வந்துள்ள நிலையில், நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல், ஒரு திட்டமிட்ட தாக்குதலாகக் கருதப்படுகிறது. பயங்கரவாதிகளின் தாக்குதலைத் தடுக்கவே காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் 10,000 ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் காஷ்மீரில் மிகப்பெரிய தாக்குதலை நடத்தத் திட்டம் என்ற உளவுத்துறையின் தகவலையடுத்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆலோசனை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 30 கிலோ மீட்டர் தூரம் உள்ளே சென்று பயங்கரவாதிகள் முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி முற்றிலுமாக அழித்தது. பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 27 அப்பாவி இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் ஐவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், மஹாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் என்றும் தகவல் வருகிறது.


1947 ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் பெற்றபோது, காஷ்மீர் மாநிலத்தை இணைப்பதில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்தன. அந்த மாநிலத்தில் வாழ்கிற 80 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட மக்கள் இஸ்லாமியர்களாக இருந்ததால் அந்த பகுதி பாகிஸ்தானுடன் இணைவதா ? இந்தியாவுடன் இணைவதா ? என்ற சிக்கலான நிலைமை ஏற்பட்டது. இந்தச் சூழலில் முதல் பிரதமர்  ஜவகர்லால் நேருவோடு பணியாற்றிய ஷேக் அப்துல்லா காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவுடன் இணைக்க வேண்டுமென்று விரும்பினார். முஸ்லிம் நாடான பாகிஸ்தானுடன் இணைய அவர் விரும்பவில்லை. அப்போது காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தது அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஷேக் அப்துல்லாவுக்கும் இடையே இருந்த நட்பு தான். அந்த நட்பின் காரணமாகவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, பிரிவு 370 அரசமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டு, சிறப்புச் சலுகையுடன் காஷ்மீர் மாநிலம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.




இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்த  பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் பிரிவு 370-ஐ ரத்து செய்து, அந்த மாநிலத்தை அம்மாநில மக்களின் ஒப்புதல் உள்ளதாக மூன்று பிரிவுகளாகப் பிரித்தது.

இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370 ஐ ரத்து செய்யும் போது பாஜக 'காஷ்மீர் பைல்ஸ்' என்கிற திரைப்படம் தயாரிக்கப்பட்டு, வெளியிடப்பட்டது. பிரிவு 370 ஐ ரத்து செய்வதன் மூலம் தீவிரவாத தாக்குதல்கள் குறையும் என்றனர். ஆனால் இன்று நிலைமை ?

அதிகரிக்கும் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு   என்ன பதில் கூறப்போகிறார்கள்? மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான இடம் என காஷ்மீரில் கருதப்பட்ட பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் , பயணிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தி 

27 க்கும் மேற்பட்ட நபர்கள் கொல்லப்பட்டனர்!காஷ்மீர் மாநிலம், பகல்காம் பகுதியிலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் மலையின் உச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற புல்வெளி உலக அளவில் போற்றப்படும் சுற்றுலாத்தலமான சுவிட்சர்லாந்துக்கு ஒப்பானது ஆகும். கோடை விடுமுறை என்பதால் இந்திய நாடெங்கெங்கிலும் இருந்து காஷ்மீர் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் திரளாகச் செல்கின்றனர். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25-க்கும் மேற்பட்ட நிராயுதபாணிகளான சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்து உள்ளதாகவும்; எண்ணற்றோர் காயமற்றுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. சுற்றுலாப் பயணிகளைச் சுற்றி வளைத்து ஆடவர் ஆடைகளை அகற்றி, இந்து என அடையாளம் கண்ட பின்னரே கொன்றிருக்கிறார்கள். இது கொடூரத்தின் உச்சக்கட்டம்; மனிதநேயமற்ற செயல்; முழுக்க முழுக்க மத ரீதியான தாக்குதல். தீவிரவாதிகளின் கொடுஞ்செயல்

அமெரிக்க துணை ஜனாதிபதி வான்ஸ் இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள நேரத்தில் 

பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள் ISI, Lasker e Teiba எனும் தீவிரவாதிகளை அனுப்பி இந்தக் கோரச் செயலை நடத்தியுள்ளது!

இந்தியாவின் காஷ்மீரில் அமைதி திரும்பவில்லைன்னு அமெரிக்காவுக்கு காட்டிட இந்த  தாக்குதலை நடத்தியிருக்கிறது!ஜம்முவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோர் விபரம் வெளியீடு

16 நபர்கள் இறந்தனர் எனவும் 10 நபர்கள் காயமடைந்தனர் எனவும் தகவல் வந்துள்ளது

முழு அமைதிக்கு காஷ்மீர் மீண்டும் திரும்பிட மக்கள் மத்தியில் வேண்டுதல்கள் அதிகம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...