முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மலை வாசல் சுற்றுலா ஸ்தலங்களில் பயணிகளுக்கு பல விதமான கட்டுப்பாடுகள் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு

கோடைக்காலத்தில் மலை வாசல் ஸ்தலங்களுக்கு கட்டுப்பாடு நீலகிரி மலை உதகமண்டலம் (ஊட்டி),


கொடைக்கானல் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பகுதிகளில் 28 வகையான தடை செய்யப்பட்ட நெகிழி அல்லது பிளாஸ்டிக் எனப்படும் பாலிதீனால் செய்த பொருட்களைப் பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது.


தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை பறிமுதல் செயயும் நடவடிக்கைகள் எடுக்கவும், மேலும் ஊட்டி, கொடைக்கானல், ஏறகாடுக்கு எத்தனை சுற்றுலா பயணிகளை அனுமதிக்கலாம் என்பது குறித்து சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் சார்பில் ஆய்வுகள் மேற்கொண்ட நிலையில், கோடைகால விடுமுறை காரணமாக ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு வருகைதரும் பிற பகுதி சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து




உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவின் படி ஊட்டிக்கு வார நாட்களில்  ஆறாயிரம் வாகனங்களையும், வார இறுதி நாட்களில்  எட்டாயிரம் வாகனங்களையும் அனுமதிக்கலாம் என்றும் கொடைக்கானலில் வார நாட்களில் நான்காயிரம் வாகனங்களையும் வார இறுதி நாட்களில் ஆறாயிரம் வாகனங்களையும் அனுமதிக்கலாம் என்றும் உத்தரவிடப்பட்டிருருந்த நிலையில் நீலகிரி மாவட்டத்துக்குள் பெட் பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சுப்பிரமணிய கௌசிக் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற , நீதிபதிகள் இந்த உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளனர்.

அதன்படி, "தமிழ்நாட்டில் 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில், நீலகிரி முதல் கன்னியாகுமரி அகத்தியர் மலை வரையிலான மேற்குத் தொடர்ச்சி மலை முழுவதும் 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த, இருப்பில் வைக்க, கொண்டு செல்ல, உற்பத்தி செய்ய தடை விதிக்கப்படுகிறது. வாகனங்களுக்கு அனுமதி வழங்கும் போது நீலகிரி மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்லக்கூடாது என மோட்டார் வாகன சட்டத்தில் நிபந்தனையை சேர்த்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிடுதல் கட்டாயம் எனவும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பகுதிக்கு கொண்டு செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்வதுடன், அவர்கள் மீது வழக்கு தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும். மலைப்பகுதிகளில் உள்ள கடை வியாபாரம் செய்து வரும் நபர் பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்பனைக்கு வரும் ரொட்டி உள்ளிட்ட  உணவுப் பொருட்களை, பிரித்து இலை, காகிதம் போன்ற மட்கும் தன்மையுடைய பொருட்களில் வைத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கலாம். உணவுப்பொருட்கள் எடுத்து வரப்படும் பிளாஸ்டிக் பைகளை, வனப்பகுதியில் போடாமல், மீண்டும் உணவு பொருட்கள் உற்பத்தியாளர்களிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும். (அதற்கு உற்பத்தி செய்யும் போதே தடை விதித்தால் பிரச்சினைகள் முடிந்துவிடும் அதை விடுத்து) மஞ்சள் பை திட்டத்தின் விரிவாக்கமாக சுற்றுலா பயணிகளுக்கு தேவையான குடிநீர் போத்தல்கள், குடுவைகள் (பாட்டில்கள்), பைகள் உள்ளிட்ட அன்றாடம் தேவைப்படும் பொருட்கள் அடங்கிய சுற்றுலா பைகளை வாடகைக்கு விடுவதும்


அந்தத் திட்டத்தை ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் அமல்படுத்தலாம்.பொது இடங்களில் குப்பைகளை சேர்வதைத் தடுக்க வியாபாரிகளுக்கு அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது குறித்து சென்னை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,"என உத்தரவிட்ட நிலையில்



இந்த வழக்கின் விசாரணையை கோடைக்கால விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 6 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.  இதில் பொது நீதி யாதெனில் மலை வாழிடங்கள் ஆக்கிரமிப்பு செய்து அக்கிராமப் பிரவேசம் காரணமாக வீடுகள் நட்சத்திரக் கட்டுமான ஹோட்டல்கள் பெருகியதை யாரும் தடுக்க வில்லை. இந்த கட்ப்பாடுகள் காரணமாக ஏழைகள் யாரும் சுற்றுலா செல்வதில்லை நடுத்தர வர்க்கம் மலை வாழிடங்களில் சுற்றுலா செல்வதை தடுக்கும் நடவடிக்கைகளாகவே பார்க்க முடிகிறது. மேலும் அதற்கு காரணம் பல அதை இந்த தளத்தில் பேசமுடியாது என்பதே இங்கு பொது நீதி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...