ஒரு காணொளியால் வீழ்ந்த தர்பூசணி விலை
2 ரூபாய்க்கு கேட்பதாக விவசாயிகள் வேதனை.
குளிர்பானங்கள் விற்பனை குறைந்து கோடைக்காலத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் தர்பூசணியில் இரசாயனம் ஊசி மூலமாக ஏற்றப்படுகிறது என வெளியான காணொளியைத் தொடர்ந்து, உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலியில் உள்ள அனைவரும் பாதிக்கப்பட்டனர்.
தர்பூசணியில் நிறமிகள் சேர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக சமீபத்தில் உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர் வெளியிட்ட காணொளி தான் காரணம் என்கிற விவசாயிகள். இழப்பிற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென்று அரசுக்குக் கோரிக்கை வைக்கும் விவசாய சங்கத்தினர்.
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இத்தகைய நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகிறது. நாங்கள் விவசாயிகளுக்கு எதிரானவர்களல்ல என விளக்கம் அளிக்கிற உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள். பணியிட மாற்றம் செய்யப்பட்ட அலுவலரின் விளக்கம்
சென்னை மண்டல உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலராக இருந்த சதீஷ்குமார் மார்ச் மாதம் 21-ஆம் தேதி தனியார் செய்தி நிறுவன பேட்டியில், " தர்பூசணிப் பழங்களில் நிறம் மற்றும் சுவைக்காக இரசாயனங்கள் ஏற்றப்படுகிறது" என்றார் .
அதை 'டெமோவாக' செய்துக் காட்டியவர், பழத்தில் நிறம் மற்றும் சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டிருக்கும் போது, அதில் 'டிஸ்யூ' காகிதம் ஒன்றை வைத்துத் தேய்த்தால், அடர் சிவப்பு நிறத்தில் அந்த காகிதம் மாறிவிடும் என்றார்.
இதற்கு முன்னதாகவும் இது போன்ற அவரின் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில், மக்கள் மத்தியில் பீதியானது. இந்த ஆண்டில் தர்பூசணிக்கு பெரிய அளவில் விலை ஏதும் கிடைக்காததற்கு இது தான் காரணமென்று விவசாயிகள் தங்களின் குற்றச்சாட்டை முன்வைத்து இது குளிர் பானம் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த ஊழல் அலுவலர்களைப் பயன்படுத்தி விவசாய இயற்கை உற்பத்தி தர்பூசணி வீழ்ச்சி அடையக் காரணமாக உள்ளது எனப் போராட்டத்தில் இறங்கினர்.
சென்னை மண்டல உணவுப் பொருட்கள் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறை உத்தரவிட்டதற்கு.
வதந்தி ஏற்படுத்திய பரபரப்பு தான் காரணம், கடந்த ஆண்டு கிலோ ரூபாய்.14 வரை கொள்முதல் செய்த தா்பூசணி இந்த ஆண்டில் ரூபாய்.6-க்கு வீழ்ச்சி அடைய வைத்தது. காரணம் ஒரு காணொளி காட்சி தான். உதய கீதம் திரைப்படத்தில் வரும் நகைச்சுவை காட்சியில் தேங்காய் வாங்க விலை அதிகம் என்ற நிலையில் தேங்காயில் பாம் எனும் வதந்திகள் பரவிய காரணமாக தேங்காய் விலை சரிவு ஏற்படும் -நன்றி (ராஜ் டிஜிட்டல்)
அதேபோல் தற்போது நிஜத்தில் தர்பூசணி கலர் மாற்றம் என குளிர் பானம் விற்பனை வீழ்ச்சி அடைய தர்பூசணி தான் காரணம் என தயாரிப்பு நிறுவனங்கள் தான் தாசி செய்து விலை வீழ்ச்சி என விவசாயிகள் குற்றம் சாட்டும் நிலையில் இதனால், ஏக்கருக்கு ரூபாய்.50 ஆயிரம் வரை செலவு செய்து, அறுவடைக்குக் காத்திருந்த விவசாயிகள் இழப்பை மட்டுமன்றி, மன ரீதியான நெருக்கடியையும் எதிா்கொண்டனா்.
இதனிடையே, தா்பூசணிப் பழங்களில் ரசாயனம் கலக்கப்பட்டதாக பரப்பப்படும் உண்மையற்ற செய்திகளால் பொதுமக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும், உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் வெளியிட்ட விழிப்புணா்வுக் காணொலி தான் அனைத்துக் குழப்பங்களுக்கும் காரணம் என்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவா் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியிருந்தாா்.
மேலும், தா்பூசணி பழங்களை சாப்பிட மக்கள் தயங்குவதால், அதன் விற்பனை பெருமளவில் குறைந்து விட்டதாகவும், சில வாரங்களுக்கு முன் ஒரு டன் ரூபாய். 14 ஆயிரமும், கிலோ ரூபாய் 25 வரை விற்பனை செய்யப்பட்ட தா்பூசணி பழங்களை, தற்போது ரூபாய் டன் 3 ஆயிரத்துக்கும் கிலோ ரூபாய் 6 க்குக் கூட வாங்க யாரும் முன்வருவதில்லை என்றும் தெரிவித்திருந்தாா்.
இந்த நிலையில், உணவு பாதுகாப்புத் துறை அலுவலரின் கருத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும், அலுவலர்களைக் கண்டித்தும், சென்னை கோயம்பேட்டில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் ஒருங்கிணைப்பாளா் அருண்குமாா் தலைமையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பழ வியாபாரிகள், தா்பூசணி பழங்களை கீழே போட்டு உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து ‘ஒரு டன் தா்பூசணி ரூ. 10,000-க்கு மேல் விற்பனையான நிலையில், உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்களின் தவறான தகவல்களால், தற்போது ஒரு டன் தா்பூசணி ரூபாய். 2,000-க்கு விற்பனை ஆகிறது. முதல்வா் இந்தப் பிரச்சினை மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தினர். -விளம்பரம்-
-விளம்பரம்-இதனைத் தொடர்ந்து சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் சதீஷ்குமாா், சென்னையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இரசாயனம் கலந்த கலப்படமிக்க தா்பூசணிப் பழங்கள் (அடா்சிவப்பு பழங்கள்) கண்டுபிடிக்கப்படவில்லை. அதே நேரம், சோதனையின்போது பல கடைகளில் கெட்டுபோன, எலி கடித்த, அழுகிப்போன பழங்கள் ஏராளமாகக் கிடைத்தன. அவற்றையெல்லாம் பறிமுதல் செய்து அப்போதே அழித்து விட்டோம். எனவே பொதுமக்கள் பயப்படத் தேவையில்லை என விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில், தா்பூசணியில் செயற்கையாக ஊசி மூலம் ரசாயனம் செலுத்தப்படுவதாக கூறியிருந்த உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் சதீஷ்குமாரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் போஸ் சென்னையை கூடுதலாக கவனிப்பார் என தெரிவித்தது.
சதீஷ்குமார், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்கத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். -விளம்பரம்-
-விளம்பரம்- அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் யாரோ ஒரு சிலர் செய்கின்ற தவறுகளுக்கு ஒட்டுமொத்த விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனர் என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலரும் கவலை தெரிவித்தனர்.இந்தக் காணொளி பெரும் சர்ச்சையை ஏற்படுத்த, ஏப்ரல் 3-ஆம் தேதி இந்த விவகாரம் தொடர்பாக மற்றொரு விளக்கமளித்தார் சதீஷ்குமார். அதில், "தர்ப்பூசணிகள் சாப்பிடுவதால் ஒரு சிலருக்கு வாய்களில் புண்கள் வருகிறது என்ற புகார்கள் ஆங்காங்கே வருகிறது. யாரோ ஒரு சிலர் செய்த தவறு மூலமாக ஒட்டுமொத்தமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல," என்றார்.
மேலும், அவர் ஆய்வு செய்த பகுதியில், எலிக்கடித்த பழங்களை மட்டுமே அழித்ததாகவும், அந்த பழங்களில் எந்தவிதமான நிறமூட்டிகளும் சேர்க்கப்படவில்லை என்றும் உறுதியளித்தார். மக்கள் எந்த விதமான அச்சமுமின்றி இப்பழங்களை உட்கொள்ளலாம் என்றும் கூறினார் அவர். இது இவரது இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியது. இவர் குளிர்பான நிறுவனங்களின் ஆதரவாளர் என்பதை வெளிப்படுத்தும் நடவடிக்கை என்பதை அணைவரும் அறிய வாய்ப்பாக அமைந்தது.
"இரசாயனமேற்றப்பட்ட பழங்கள் அடர் சிவப்பு நிறத்திலும் அதீத இனிப்பு சுவையும் கொண்டிருக்கும் என்றார். அதை உட்கொண்ட சில மணி நேரத்திற்குள் வாய்ப்புண், வயிற்றெரிச்சல், வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகளை மக்கள் சந்திப்பார்கள்," என்றும் விளக்கமளித்திருந்தார்.
ஏப்ரல் மாதம் 5-ஆம் தேதி, சதீஷ்குமாரை தமிழ்நாடு மருந்து நிர்வாக துறைக்கு பணியிட மாற்றம் செய்தது தமிழ்நாடு அரசு. திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் போஸ் சென்னை மண்டலத்தை கூடுதலாக இனி கவனிப்பார் . -விளம்பரம்-
. -விளம்பரம்-இந்த நிலையில் குடும்பத்தில், நான்கு பேரும் சேர்ந்து விவசாயம் செய்து உரம், மருந்து, மின்சாரம் என்பதை யெல்லாம் கணக்கில் கொண்டால் ஒரு ஏக்கருக்கு (ஒரு விளைச்சலுக்கு) ரூபாய். 15 ஆயிரம் வரை இரண்டு மாதங்களுக்கு செலவு மட்டுமாகும். நல்ல விளைச்சலும் நல்ல விலையும் இருந்தால், ஒரு ஏக்கருக்கு எங்களால் ரூபாய்.15 முதல் 20 ஆயிரம் வரை லாபம் பார்க்கலாம்," இதுவே விவசாயிகள் நிலை.
"தமிழ்நாடு மற்றும் கேரளாவிலிருந்து வியாபாரிகள் தர்பூசணிகளை வாங்கிச் செல்வதுண்டு. இந்தக் காணொளி வெளியாவதற்கு முன்பு வியாபாரிகள் விவசாயிகளிடம் ஒரு கிலோ பழத்தை ரூபாய். 7-க்கு வாங்கிச் சென்றனர். ஆனால் தற்போது 2 ரூபாய்க்கு தர முடியுமா எனக் கேட்கின்றனர். கடந்த ஒரு வாரத்தில் 3 டன் எடை கொண்ட பழங்கள் தேக்கமடைந்து நிலத்திலேயே வெடித்து அழுகிப்போனது," என்கிறார் ஒரு விவசாயி.
சுட்டெரிக்கும் பங்குனி சித்திரை மாதங்களில் கோடை காலத்தில் விற்பனைக்கு தயாரான நிலையில் இருந்த பழங்களை அறுவடை செய்யாததால் வெடித்தும், வெம்பியும் வீணாகிப் போவதாக ஒட்டன்சத்திரம் விவசாயிகளிடமிருந்து பழங்களை வியாபாரிகளுக்கு கைமாற்றிவிடும் இடைத்தரகராக கமிஷன் கடையில் பணியாற்றி வரும் நபர் ஒருவர்
அந்த காணொளியால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்துப் பேசும் போது, "இந்த சுற்றுவட்டாரப் பகுதியில் பழங்களை விவசாயம் செய்யும் விவசாயிகளின் நிலங்களுக்கு வாரம் ஒரு முறை சென்று விற்பனைக்கு தயார் நிலையிலிருக்கும் இடத்தை அறிந்து வியாபாரிகளுக்கு தகவல் தெரிவிக்க.
அவர்கள் வண்டிகளில் வந்து பழங்களை வெட்டி எடுத்துச் செல்வார்கள். ஒரு கிலோவுக்கு ஐம்பது காசுகள் கமிஷனாக வருவதாகவும் வாரத்திற்கு இரண்டு முறை அல்லது மூன்று முறை இந்தப் பணி செய்தவர். தற்போது காணொளி வெளியான நிலையில், கடந்த சில நாட்களாக எந்த வியாபாரிகளும் அவரிடம் பழங்கள் இருப்பு குறித்து கேள்வி அவரிடம் எழுப்பவில்லை என்கிறார்.
வருகின்ற காலங்களிலும் தர்பூசணிக்கு நல்ல விலை இருக்குமா என்ற சந்தேகம் நிலவுகிறது. எனவே அடுத்த சில வாரங்களுக்கு வேலை ஏதும் இல்லாமல் வருமானமின்றி இருக்க நேரிடும்," என்கிறார். சென்னையில் சந்தைப்படுத்துவதற்காக கொண்டு வரப்படும் தர்பூசணிகளில் 5 முதல் 10 சதவிகித பழங்கள் மட்டுமே நேரடியாக கோயம்பேடு சந்தைக்கு வருகிறது. மீதமுள்ள பழங்கள் அனைத்தும் ஒவ்வொரு வார்டிலும் உள்ள உள்ளூர் வியாபாரிகளிடம் கொடுத்து சந்தைப்படுத்துகின்றனர் விவசாயிகள்," என்கிறார் மற்றொருவர்.
பழத்தின் தரத்திற்கு ஏற்ற வகையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என்பவர், உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்களின் காணொளி வருவதற்கு முன்பு, முதல்நிலை தரம் கொண்ட பழங்கள் கிலோ ஒன்று ரூபாய்.20-க்கும், மத்திய தரம் கொண்ட பழங்கள் ரூபாய்.15-க்கும், சிறிய ரக பழங்கள் ரூபாய். 10-க்கும் விற்பனை செய்யப்பட்டது என்கிறார்.
"காணொளி வெளியான பின்னர் பழங்களின் விற்பனை மந்தமடைந்துள்ளது. வியாபாரிகள் ஏற்கனவே வாங்கிய பழங்களை குப்பையில் கொட்டுகின்றனர். அறுவடை செய்யப்பட்ட பழங்களை, விலை போகவில்லை எனத் தெரிந்தும், விவசாயிகள் நேரடியாக வந்து வியாபாரிகளிடம் இலவசமாகக் கொடுத்துச் செல்கின்றனர். அந்த பழங்களும் தற்போது குப்பைக்குச் செல்கிறது,"
வெயில் காலத்தில் அதிக காலம் பழங்களை பாதுகாத்து வைப்பது கடினம். பழத்திற்கான விலை வருங்காலங்களில் அதிகரிக்கலாம் அல்லது குறையலாம் ஆனால் அத்தனை காலம் வரை இருப்பிலிருக்கும் பழங்கள் தாக்குபிடிக்குமா என்பது எழு வினா. தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசிய போது, இந்த இழப்பீட்டிற்கு தமிழ்நாடு அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
முறையான ஆய்வுகள் மற்றும் ஆதாரங்கள் ஏதுமின்றி இத்தகைய காணொளியை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் எவ்வாறு வெளியிட முடியும் எனக் கேள்வி எழுப்பியவர், "பொறுப்பற்ற வகையில் இவர்கள் காணொளி வெளியிட்டதன் பின்னணியில் ஏதேனும் ஆதாயம் இருக்கிறதா என்பதை அரசு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்," என்றார்.
தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கை மீது அதிருப்தி தெரிவித்தவர்,"சம்பந்தப்பட்ட அலுவலர்களைப் பணியிட மாற்றம் செய்தால் அனைத்தும் சரியாகிவிடுமா? தமிழ்நாட்டில் மொத்தமாக 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தர்பூசணி விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் இதனால் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு, ஒரு ஏக்கருக்கு ரூபாய். 2 லட்சம் வரை இழப்பீடு வழங்க வேண்டும்," என்றார் பாண்டியன்.
விவசாயிகள் அடைந்த நஷ்டம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பழங்கள் சாப்பிட பாதுகாப்பானவையாகவே இருக்கிறது என்றார். மேலும், "விவசாயிகள் இத்தகைய கலப்படத்தால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது," என்றார். இழப்பீடு குறித்து எந்த விதமான அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை.சென்னை மவுண்ட் ரோட்டில் பிலால் ஹோட்டலுக்கு ஆய்வுக்கு சென்றவர் அபோது வந்த தொலைபேசி அழைப்பு காரணமாக சட்டென ஆய்வை நடத்தாமலேயே திரும்பியவர் உணவு பாதுகாப்பு அலுவலர் சதீஷ். கார்பொரேட் குளிர்பான விற்பனையைப் பெருக்குவதற்கு, தர்பூசணி பழம் குறித்து ஊசி - வண்ணம் என வதந்தி பரப்பியவர் தான் சென்னை மண்டல உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் சதீஷ் குமார் இடமாற்றம்.
கோடிக் கணக்கான மக்களுக்கு அதுவும் ஒரு அரசு உணவுப் பாதுகாப்புத் துறையில் அமர்ந்து கொண்டு பொது ஊழியர் பொய்த் தகவல் - வதந்தி பரப்பி லட்சக் கணக்கான விவசாயிகளுக்குக் கோடிக் கணக்கில் இழப்பை ஏற்படுத்தியவருக்கு வெறும் இடமாற்றம் மட்டும்தானா தண்டனை ? இது மிஸ்டர் பொதுஜனம் கேட்கும் வினா?
இதில் பொது நீதி யாதெனில் .:- ஓவ்வொரு தர்பூசணி உற்பத்தி செய்யும் விவசாயி அணைவரும் அரசுக்கு நிலவரி செலுத்தும் நபர்கள் ஆவர் ஆகவே அரசு பணியாளர்கள் மக்கள் வரிப்பணத்தை ஊதியமாகப் பெறும் நிலையில் அவர்கள் சேவைக் குறைபாடு தான் இந்த உணவுப் பாதுகாப்பு அலுவலர் செயல் ஆகவே உரிய நுகர்வோர் பாதுகாப்பு நீதிமன்றத்தில் இவர் மீது வழக்குத் தொடர்ந்தாலும் உரிய இழப்பீடு பெறலாம்.
கருத்துகள்