இராமாயணத்தில் ஸ்ரீ இராமரின் நண்பனான குகனின் பிறந்தநாளை முன்னிட்டு பிரயாக்ராஜ் நகரில் ஸ்ரீ ராமர் மற்றும் குகன் தொடர்பான கண்காட்சியை
உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் துவங்கி வைத்தார். பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார் முதல்வரின் மீனவர் திட்டத்தின் கீழ் 1,400 மீனவர்களுக்கு ரூபாய். 20 கோடி மதிப்பிலான உதவிகளையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், “பிரயாக்ராஜ் போன்ற புராண இடங்கள் அதன் முக்கியத்துவத்தைப் பெறுவதை சிலர் விரும்புவதில்லை. ஏனென்றால் அவர்களின் வாக்கு வங்கி அவர்களுக்கு முக்கியம். வக்ஃபு வாரியம் என்ற பெயரில், பிரயாக்ராஜ் நகரிலும், பிற நகரங்களிலும் உள்ள நிலங்களை அவர்கள் கைப்பற்ற முயன்றனர். நாங்கள் மஹா கும்பமேளாவுக்கு ஏற்பாடு செய்த போது, பிரயாக்ராஜில் உள்ள கும்பமேளாவும் வக்ஃபு நிலம் என்று வக்ஃப் வாரியம் தன்னிச்சையாக அறிக்கை வெளியிட்டு உரிமை கோரியது. அது வக்ஃபு வாரியமா அல்லது ‘நில மாஃபியா’ வாரியமா?
இராமாயணத்தில் ஸ்ரீ ராமரின் நண்பனான குகனின் பிறந்தநாளை முன்னிட்டு பிரயாக்ராஜ் நகரில் ஸ்ரீ ராமர் மற்றும் குகன் தொடர்பான கண்காட்சியை முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கிவைத்தார். மேலும், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது
நிகழ்ச்சியில் பேசிய யோகி ஆதித்யநாத், “பிரயாக்ராஜ் போன்ற புராண இடங்கள் அதன் முக்கியத்துவத்தைப் பெறுவதை சிலர் விரும்புவதில்லை. ஏனென்றால் அவர்களின் அரசியல் வாக்கு வங்கி அவர்களுக்கு முக்கியம்.
வக்ஃபு என்ற பெயரில், பிரயாக்ராஜ் நகரிலும், பிற நகரங்களிலும் உள்ள நிலங்களை அவர்கள் கைப்பற்ற முயன்றனர்.
உத்தரப் பிரதேசத்திலிருந்த மாஃபியாக்களை நாங்கள் ஏற்கெனவே அழித்துவிட்டோம். வக்ஃபு வாரியத்தின் தன்னிச்சையான போக்கைக் கட்டுப்படுத்தும் விதமாக, தற்போது வக்ஃபு திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். இந்த மசோதா இன்று மாநிலங்களவையிலும் நிறைவேறும்.” எனத் தெரிவித்தார். வஃக்ப் வாரியப் பிரச்னையில் சிக்கிய 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ்நாடு திருச்செந்துறை கோவில் என நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு
வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா குறித்த விவாதத்தின் மீது பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்தின் திருச்செந்துறை கிராமத்தில் நடந்த நிகழ்வை மேற்கோள் காட்டினார். பிரச்னையில் சிக்கிய 1,800 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் குறித்துக் குறிப்பிட்டார்.
வஃக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா மீதான விவாத்தில் "தமிழகத்தில் 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த சந்திரசேகர சுவாமி கோவில் ஸ்ரீ ரங்கம் வட்டம் திருச்செந்துறையில் உள்ளது. இங்கு தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழ்ந்து வந்தனர். 408 ஏக்கர் நிலம் தொடர்பாக பிரச்னைகள் இருந்து வந்தது. இக்கிராம மக்கள், தங்களுக்குள் நிலங்களை வாங்கும் போதும், விற்பனை செய்யும் போதும், வக்ஃப் வாரியத்திடம் தடையில்லாச் சான்று பெற்று வர வேண்டும் என அவர்களிடம் கூறப்பட்டது டிஜிட்டல் மயமாக்கல் காரணமாக, மாவட்ட ஆட்சியர் தவறான தகவல்களைப் பதிவு செய்ததால், முழு கிராமமும் தவறான பதிவில் சேர்க்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிராமவாசியும் தனது நிலம் தொடர்பாக ஏதேனும் செய்ய வேண்டி இருந்தால், அதற்கு வக்ஃப் வாரியத்திடம் தடையில்லா சான்று பெற வேண்டுமா?
விஷயம் உண்மையாக இருந்தும், அலுவலர்கள் தவறாகப் பதிவு செய்யாமல் உண்மையாகப் பதிவு செய்ததால், கிராம மக்கள் ஏன் அங்கு வருகிறார்கள், தங்களுக்கும் இதற்கும் எந்தத் தொடர்புமில்லை என வக்ஃப் வாரியத்தால் கூற முடியாதா?ஆனால், அப்படி ஏதுவும் நடக்கவில்லை. ஏழை மக்கள் தலைமுறை தலைமுறையாக அங்கு வசிக்கும் போதும், அந்த நிலம் வேறு ஒருவருக்குச் சொந்தமானது எனக் கூறிக் கொண்டே இருந்தார்கள். கோவிலின் நிலை என்ன? வஃக்ப் வாரியத்தால் கோவில் கட்டப்பட்டதா? வரலாறு என்ன அது தெரியும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார். இந்த நிலையில் உத்திரப் பிரதேசத்தில் ரம்ஜான் விழா அன்று முஸ்லிம்கள் சாலைகளில் தொழுகை நடத்த பல இடங்களில் முயற்சித்தனர். முராதாபாத்தில் கல்சஷீத் பகுதியிலுள்ள முஸ்லிம்களின் ஈத்கா மைதானத்தில் தொழுகை நடத்தச் சென்றவர்களை காவல் துறையினர் தடுத்தனர். அங்கு இருதரப்பினர் இடையே மோதல் சூழ்நிலையும் உருவானது. இந்த ஈத்காவில் ஒரே நேரத்தில் 30 ஆயிரம் பேர் தொழுகை நடத்தும் வசதியுள்ளது. இதற்கும் அதிகமான எண்ணிக்கையில் அங்கு முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்க்குத் திரண்டதால் அவர்களை அங்கு பாதுகாப்பிற்கு இருந்த காவல்துறையினர் தடுத்தனர். ஈத்கா வில் இடமில்லாத நிலையில் மற்றொரு ஷிப்டாக மேலும் ஒரு சிறப்புத் தொழுகை நடத்தும் படி காவல் துறையினர் கூறினர் சஹரன்பூரில் ஈத் தொழுகைக்கு வந்தவர்கள் பாலஸ்தீன நாட்டின் கொடிகளையும் கைகளில் கொண்டு வந்தனர். மேலும் பலர் கைகளில் கருப்பு பட்டை அணிந்து வந்தனர். தொழுகைக்குப் பின் சிலர் எதிர்ப்புக் கோஷங்களையும் எழுப்பினர். இதில் தலையிட்டு உத்திரப் பிரதேச காவல் துறை முஸ்லிம்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதேபோல், மீரட்டின் சில மசூதிகளிலும் முஸ்லிம்கள் இடமின்மையால் சாலைகளில் தொழுகை நடத்த முயற்சித்தனர்.
சாலைகளில் ரம்ஜான் தொழுகைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் உத்திரப் பிரதேசத்தில் காவல்துறையைக் கண்டித்து முஸ்லிம்கள் கோஷம் எழுப்பினர்.
இந்நிலையில், சாலைகளில் தொழுகை நடத்த விதிக்கப்பட்ட தடையை கண்டித்து, மீரட் நகர தெருக்களில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
அவற்றில், “முஸ்லிம்கள் மட்டும் தெருக்களில் தொழுகை நடத்த வில்லை. இந்துக்கள் தெருக்களில் ஹோலி கொண்டாடு கிறார்கள், சிவராத்திரியும் தெருக்களில் கொண்டாடப்படுகிறது. காவடிகளுடன் தெருக்களில் வலம் வருகிறார்கள். ராமநவமி யாத்திரையும் தெருக்களில் நடத்தப்படுகிறது. தீபாவளியன்று தெருக்களில் பட்டாசு வெடிக்கப்படுகிறது, விநாயகர் சதுர்த்தி தெருக்களில் கொண்டாடப்படுகிறது. இந்த நல்ல சூழ்நிலையை காவல் துறையினர் கெடுக்க முயற்சிக்கக் கூடாது” என்ற வாசகங்கள் இருந்தன.
இதற்கிடையில், முஸ்லிம்கள் சாலைகளில் தொழுகை நடத்த பல இடங்களில் முயற்சித்தனர். முராதாபாத்தில் கல்சஷீத் பகுதியிலுள்ள முஸ்லிம்களின் ஈத்கா மைதானத்தில் தொழுகை நடத்த சென்றவர்களை காவல்துறையினர் தடுத்தனர். அங்கு இருதரப்பினர் இடையே மோதல் சூழல் உருவானது.
இந்த ஈத்காவில் ஒரே நேரத்தில் 30 ஆயிரம் பேர் தொழுகை நடத்தும் வசதி உள்ளது. இதற்கும் அதிகமான எண்ணிக்கையில் அங்கு முஸ்லிம்கள் தொழுகைக்கு திரண்டதால் அவர்களை அங்கு பாதுகாப்பிற்கு இருந்த காவல்துறையினர் தடுத்தனர்.
டெல்லியின் ஜாமியா மசூதியிலும் ரம்ஜான் சிறப்புத்தொழுகை அமைதியாக நடைபெற்றது. அப்போது வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், முஸ்லிம்கள் கைகளில் கருப்பு பட்டை அணிந்து வந்தனர். இந்த நிலையில் பிஹார் மாநிலத்தின் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவளித்த நிலையில், அக்கட்சியின் இஸ்லாமியப் பிரமுகர்கள் இருவர் ராஜினாமா செய்தனர்.
மக்களவையில் நடந்த காரசார விவாதத்துக்குப் பிறகு வக்ஃபு திருத்த மசோதா நிறைவேறியது. ஆதரவாக 288 உறுப்பினரும், எதிராக 232 உறுப்பினரும் வாக்களித்தனர். அதிகாலை 2 மணியளவில் மசோதா நிறைவேறியது. தற்போது மாநிலங்களவையில் விவாதம் நடைபெறுகிற நிலையில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பிரமுகர்களான முகமது காசிம் அன்சாரி, முகமது நவாஸ் மாலிக் இருவரும் அக்கட்சியிலிருந்து விலகுவதாக பிஹார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு கடிதம் எழுதினர். அதில், “ எங்களைப் போன்ற லட்சக்கணக்கான இந்திய முஸ்லிம்கள், நீங்கள் முற்றிலும் மதச்சார்பற்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் செயல்படக்கூடியவர் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்பதை நான் உரிய மரியாதையுடன் கூற விரும்புகிறேன். ஆனால் இப்போது அந்த நம்பிக்கை உடைந்து விட்டது. இந்திய முஸ்லிம்களும் எங்களைப் போன்ற தொண்டர்களும் கட்சியின் நிலைப்பாட்டால் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த மசோதா அரசியலமைப்பின் பல அடிப்படை உரிமைகளை மீறுகிறது. இந்த மசோதாவின் மூலம், இந்திய முஸ்லிம்கள், அவமதிக்கப்படுகிறார்கள். நீங்களோ அல்லது உங்கள் கட்சியோ இதை உணரவில்லை. என் வாழ்நாளில் பல வருடங்களை கட்சிக்காகக் அர்ப்பணித்ததில் நான் மிகவும் வருத்தப்படுகிறேன்” எனக் கூறப்பட்டுள்ளது.
மசோதாவின் திருத்தங்கள் மத்திய வக்ஃபு கவுன்சிலில் 22 உறுப்பினர்களில் 2 பேர் முஸ்லிம் அல்லாதவர்களைச் சேர்க்க வேண்டும். மாநில வக்ஃபு கவுன்சிலில் 11 உறுப்பினர்களில் 2 பேர் முஸ்லிம் அல்லாதவர்களாக இருக்க வேண்டும்.
தொடர்ந்து 5 ஆண்டுகளாக முஸ்லிம்களாக உள்ளவர்கள் மட்டுமே தங்கள் சொத்துகளை வக்பு வாரியத்துக்கு தானமாக வழங்க முடியும். 2013-ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த நிலை மீட்கப்படும். வக்பு வாரியம் உரிமை கோரும் நிலங்கள் தொடர்பான புகார்களை வருவாய் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களும் விசாரணை நடத்த முடியும்.
வக்ஃபு தீர்ப்பாயத்தின் முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடியும். வக்ஃபு வாரியத்துக்கு நிலம் தானமாக அளிக்கப்பட்டிருந்தால் மட்டுமே அந்த நிலம் சட்டப்பூர்வமானது. வேறு இடத்தில் மசூதி கட்டப்பட்டிருந்தால், அந்த இடம் வக்ஃபு வாரியத்தின் சொத்தாகக் கருதப்படாது.
வக்ஃபு வாரியத்தில் 2 பெண்கள் மற்றும் இதர மதங்களைச் சேர்ந்த 2 பேர் உறுப்பினராக இணைக்கப்படுவர். தாவூதி போரா உள்ளிட்ட பிரிவினருக்காக தனி வக்ஃபு வாரியம் அமைக்கப்படும். வக்பு சொத்துகளை முறைப்படி பதிவு செய்ய வேண்டும். வக்ஃபு சொத்து விவரங்கள் மாவட்ட வருவாய்த்துறை துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். என்பதாகும். "வக்ஃப் மசோதா - அஇஅதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் எதிர்ப்பு"
சிறுபான்மையினர் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது அஇஅதிமுகவின் அடிப்படைக் கொள்கை. மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு அஇஅதிமுக உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர். இந்த நிலையில், ஹைதராபாத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான அசாதுதின் ஒவைசி வக்ஃபு வாரியத் சட்டத்திருத்த மசோதா மீதான விவாதத்தில் பேசியதாவது:
"வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா அரசியலமைப்பிற்கு விரோதமானது. தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையர் சட்டங்களை ஏற்றுக் கொள்ளாமல் அதனை மகாத்மா காந்தி கிழித்தெறிந்தார். அதுபோலவே, நானும் இந்தச் சட்டத்தைக் கிழிக்கிறேன்.
கோவில்கள் மற்றும் மசூதிகளின் பெயரால் இந்த நாட்டில் பிரிவினையை உருவாக்க பாரதிய ஜனதா கட்சி விரும்புகிறது. இதை நான் கண்டிக்கிறேன். மேலும் பத்து திருத்தங்களை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.வக்ஃப் வாரியத்தின் சொத்து என அறிவிக்கும் சட்ட அதிகாரம் பிரிவு 40 நீக்கம் . வக்ஃப் திருத்த மசோதா மக்களவையில் 288 வாக்குகள் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது . ஆதரவு : 288 , எதிர்ப்பு : 232,
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு நிறைவேற்றி உள்ளது .பாஜக தேர்தல் அறிக்கையில் கூறியபடி ஸ்ரீ ராமர் கோவில், ஜம்மு காஷ்மீர் ஆர்டிகிள் 370, CAA, முத்தலாக், Waqf Amendment, ஆகிய பல நிறைவேற்றப்பட்ட நிலையில் இனி பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல், தான் பாக்கி, இவை எல்லாம் கடந்த தேர்தலில் அறிக்கை தகவல், தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் நிறைவேற்றாத மற்ற கட்சிகள் இதைப் போல பேச முடியாது என்பதே இங்கு பொது நீதி
கருத்துகள்