தமிழ்நாட்டின் மிக முக்கியமான அரசியல் சக்தியாக
1990 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை உள்ள காலத்தில் பிரபலமாகத் திகழ்ந்த பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைக்க திமுக, அதிமுக இடையே கடும் மோதலே நடக்கும் அளவுக்கு பாமகவின் செல்வாக்கு அப்போதிருந்தது. பாமகவின் நிறுவனராக மட்டுமல்லாமல் கட்சியை மருத்துவர் ச. ராமதாஸ் வழி நடத்திய காலகட்டம். வட தமிழகத்திலுள்ள திருவள்ளூர் துவங்கி நாகபட்டினம் வரை மற்றும் கிருஷ்ணகிரி துவங்கி திண்டுக்கல் வரை உள்ள தொகுதிகளில் வெற்றி பெற வேண்டுமென்றால் அதற்கு, வட தமிழகத்தில் செல்வாக்கு மிகுந்த வன்னியர் கட்சியாக இருக்கும் பாமகவின் உதவி இல்லாமல் தனித்து நின்று எந்த கட்சியும் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்று விட முடியாது என்ற நிலை.
ஆனால் தனது வயது முதிர்வின் காரணமாகவும், மருத்துவர் அன்புமணியை கட்சியில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் டாக்டர் ராமதாஸ் படிப்படியாக தனது செயல்பாடுகளைக் குறைத்துக் கொண்டு மருத்துவர் அன்புமணிக்கு அதிக அதிகாரங்கள் பதவிகளை வழங்கினார். அதுவும் இயற்கை தான் தான் சேர்ந்த சொத்துக்களை வாரிசு அடிப்படையில் தருவது போல இந்தியா முழுவதும் உள்ள பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் அரசியலில் வாரிசுகளைத்தான் முன் நிறுத்தும் நிலையில் ஆனால் மருத்துவர் அன்புமணி தலைமையிலான பாமகவுக்கு பெரிய அளவிலான வெற்றிகளைப் பெற முடியவில்லை.
மருத்துவர் ச. ராமதாஸ் இருந்து வழிநடத்திய போது பழைய பாமக எப்படி ஆக்ரோஷமாக இருந்ததோ, அதே அளவிலான செயல்பாடுகள் உள்ள தலைவர்கள் குறைந்த நிலையில் புதியவர்கள் மருத்துவர் அன்புமணி தலைமையில் இல்லை என்பது மருத்துவர் ராமதாஸுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்ததாகத் தெரிகிறது. மேலும் கூட்டணி தொடர்பாக மருத்துவர் அன்புமணி எடுத்த முடிவுகளிலும் அவருக்குத் திருப்தி இல்லை என்று சொல்கிறார்கள்.
பாமக தலைவராக பேராசிரியர் தீரனுக்குப் பின்னர் இருந்து வந்த தொடக்கப்பள்ளி ஆசிரியரை நான்கு முறை சட்ட மன்ற உறுப்பினர் ஆக்கிய மருத்துவர் ச.ராமதாஸ் ஜி.கே.மணியை அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கி அவரை கெளரவத் தலைவராக மாற்றியது கூட கட்சிக்குள் அவர் மகன் திமுக ஆதரவாளராக முழு நேரம் திரைப்பட பணி செய்து வரும் தமிழ் குமரன் மூலம் ஜி.கே.மணிக்கு திமுகவின் ஆதரவாளர் என்ற முத்திரை பதித்த நிலையில் முனுமுனுப்பு எழுந்ததாகக் கூறப்பட்டது. மருத்துவர் அன்புமணி தலைவரான பிறகு பாமக அடுத்தடுத்து பல தோல்விகளைச் சந்திக்க வேண்டிய நிலை வந்ததற்கு ஜி.கே.மணி பேச்சைக் கேட்டு பல முக்கிய நிர்வாகிகளை ஓரம் கட்டியதும் ஒரு காரணம். கட்சியின் ஓட்டு வங்கியும் சரிந்ததால், தங்களைத் தேடி கூட்டணி கட்சிகள் வந்த நிலை மாறி, தாங்கள் வெற்றி பெற பெரிய கட்சிகளின் கூட்டணியை பாமக தேடிப் போக வேண்டிய நிலை உருவானது.
பாஜக.,கூட்டணியில் தான் இருக்க வேண்டும் என மருத்துவர் அன்புமணி விரும்புகிறார். ஆனால் அதிமுக., கூட்டணிக்கு சென்றால் தான் தங்களுக்கு பலம் என ஜி.கே.மணி போதனை காரணமாக மருத்துவர் ராமதாஸ் நினைக்கிறார். கடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் எடப்பாடி தலைமையில் ஆன அதிமுகவுடன் கூட்டணி வைக்க மருத்துவர் ராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தினார். ஆனால் பாஜக பக்கம் போக வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தால் மருத்துவர் அன்புமணி. இவர்கள் இருவர் இடையேயான குழப்பம் காரணமாகத் தான் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் இணையப் போவதாக முடிவு செய்து, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அனைத்தும் முடிந்து இறுதி செய்யப் போகும் நேரத்தில் கடைசி நிமிடத்தில் பாஜக கூட்டணிக்கு, பாமக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும்.
பாஜக கூட்டணிக்கு வந்த பிறகு எதிர்பார்த்த படி பெரிய அளவில் முன்னேற்றம், பலன்கள் எதுவும் கட்சிக்கு ஏற்படாததால் மருத்துவர் ராமதாஸ் கடும் அதிருப்தி அடைந்தார். இந்த நிலையில் தான் 2026 ஆம் ஆண்டு வருகிற சட்டசபைத் தேர்தலில் திமுக., கூட்டணிக்குத் திரும்ப ஜி.கே.மணி கூறிய நிலையில் மருத்துவர் ராமதாஸ் முடிவு செய்துள்ளதாகவும், இதற்கு அன்புமணி ராமதாஸ் ஒப்புக் கொள்ளாமல் போனதே இந்த மோதலுக்குக் காரணமென்றும் சொல்லப்படுகிறது. அது மட்டுமல்ல, தற்போது மருத்துவர் ராமதாசின் மகள் வழிப் பேரனான முகுந்தனுக்கு கட்சியில் மாநில இளைஞரணித் தலைவர் பதவி கொடுத்தால் கட்சி மெல்ல மெல்ல முகுந்தனின் பக்கம் சென்று விடும். அதைத் தான் ஜி.கே.மணியும் விரும்பும் நிலையில் இதனால் மகனான மருத்துவர் அன்புமணி பதவிக்கு சிக்கல் ஏற்பட்டு விடலாம் என்பதாலும் முகுந்தனை கட்சியில் முன்னிலைபடுத்துவதை மருத்துவர் அன்புமணி விரும்பவில்லை.
1989 ஆம் ஆண்டு நாம் மருத்துவர் ச.ராமதாஸின் மருத்துவமனை அமைந்த திண்டிவனம் மைலம் சாலையில் சந்தித்த போது ஒரு வெளிர் மஞ்சள் அம்பாசிடர் கார் மட்டுமே இருந்தது அப்போது குடும்பம் உள்ளே வரவில்லை ஆனால் இரண்டு முறை மத்திய ஆட்சி அதிகாரத்தில் வந்த போது அள்ளிக் குவித்த பலநூறு தமிழ்நாடு எங்கும் பல சொத்துக்கள் கோடிகளில் புழங்கும் பாண்டிச்சேரி சாலை தைலாபுரம் 100 ஏக்கர் பண்ணை வீட்டின் மருத்துவர் ச.ராமதாஸின் குடும்பம் 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் அதில் மூத்தவர் காந்திமதி. இவருக்கு சுகந்தன், பிரதிவன், முகுந்தன் என 3 மகன்கள். 2வது மகள் கவிதாவுக்கு நிதர்சன், வசீகரன் என இரு மகன்கள். கடைசி மகன் தான் மருத்துவர் அன்புமணி. இவருக்கு அங்கமித்ரா, சங்கமித்ரா மற்றும் சம்யுக்தா என 3 மகள்கள்.
தனது அக்காள் காந்திமதியின் 2வது மகனான பிரதிவனைத்தான் தனது மூத்த மகள் அங்கமித்ராவுக்குக் கட்டிக் கொடுத்துள்ளார் மருத்துவர் அன்புமணி.
தற்போது மருத்துவர் ச. ராமதாஸ், மருத்துவர் அன்புமணி இடையிலான மோதலால் பாமகவினர் மட்டுமல்லாமல், மருத்துவர் ச.ராமதாஸ் குடும்பத்தினருக்கும் கூட அதிர்ச்சி தான். இந்தப் பிரச்சினையைத் தீர்க்க பிரச்சினைகளின் மூல கர்த்தர் ஆன ஜி.கே.மணியின் தலைமையிலான குழு அன்புமணியைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். தைலாபுரம் தோட்டத்துக்கு அவரை வரவழைத்து மருத்துவர் ச.ராமதாஸுடன் சமரசம் ஏற்படுத்தவும் முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அரசியல் சூழல்கள் வெகுவாக மாறிப் போய் விட்டன. இந்த நிலையில் பாமகவில் ஏற்பட்டுள்ள இந்த மோதல் உற்று கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது. மருத்துவர் ராமதாசின் பேரனான முகுந்தனுக்கு கட்சியில் மாநில இளைஞரணித் தலைவர் பதவி கொடுத்தால் கட்சி மெல்ல மெல்ல முகுந்தனின் பக்கம் சென்றால் அவரை வைத்து ஜி.கே.மணி அரசியல் காய் நகர்த்தி மருத்துவர் ராமதாஸ் காலத்திற்கு பிறகு தானும் தன் மகன் தமிழ் குமரனுக்கு பதவி கிடைத்தது கட்சியின் தலைவர் ஆனால் கைவசப்படும் என்பது ஜி.கே.மணி திட்டம் ஆகவே இளவு காத்த கிளியாக மணி தற்போது மருத்துவர் ராமதாஸ் மூலமாக மணியடித்துப் பார்க்கிறார்.திமுகவின் முழுமையான ஆதரவாளராகச் செயல்படும் செயல் தலைவர் கோ.க.மணியை கட்சியை விட்டு வெளியேற்ற வேண்டுமென ஊடகப்பேரவையினர் தொடர் முழுக்கமாக கடந்த ஐந்து நாட்களாக பல குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டுள்ளார்கள். ஏன் இந்தக் குற்றச்சாட்டு? இத்தனைக்கும் உண்மையாகவே! இவ்வளவு ஆண்டு GK மணி திமுகவின் B டீம் தானா? என்பதே இப்போது எழும் வினா?
5 நாட்களுக்கு முன் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் தன்னை பாமகவின் தலைவராக அறிவித்தார். அப்படி அறிவிப்பு வந்ததற்க்கு மிக முக்கியமான காரணம் GK மணி தான் என் பலரும் கூறும் நிலையில் மருத்துவர் ராமதாஸ் மனதை மாற்றி, திமுகவோடு பாமகவை கூட்டணி சேர்க்க இந்த திட்டமென ஊடகப் பேரவையினர் முன்பிருந்தே எழுதிய வண்ணமே உள்ளார்கள். அதற்கு ஊடகப்பேரவையினர் சட்டமன்றக் கட்சித் தலைவர் GK மணி மீது பல காரணங்களை அடுக்குகிறார்கள்.
அதில் முதலாவது மருத்துவர் ச. ராமதாஸ் தன்னைத் தலைவராக அறிக்கையில் வெளியிட்டதை எழுதிக்கொடுத்தவர் சட்ட மன்ற உறுப்பினர் GK மணி தான்.என்பதும் அடுத்ததாக
ஜி.கே மணிக்கு தனது பதவியை பறித்து மருத்துவர் அன்புமணி தலைவரானாது சுத்தமாகப் பிடிக்கவில்லை என்பதும். முதல் தலைவரான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் தீரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பு.தா.இளங்கோவன். மற்றும் தற்போது சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் போன்ற தலைவர்கள் கட்சியிலிருந்து வெளியேற ரகசியமாக காய் நகர்த்தி அவர்கள் பதவிக்கு வேட்டு வைத்து வெளியேற்றியவர் இந்த மணி தான் என்பதை நாடறியும்.
மருத்துவர் ராமதாஸ் உடன் நெருக்கமானவர் எனக் காட்டிக்கொண்டு அவரது இரண்டு மகள்களான காந்திமதி மற்றும் கவிதாவின் பிண்ணனியில் இந்த ஜி.கே.மணி ரகசிய அரசியல் செய்து தனக்கும் தனது மகன் தமிழ் குமரனுக்கும் பறிக்கப்பட்ட பதவியை திரும்ப அடைவதுடன் மருத்துவர் ராமதாஸ் காலத்திற்குப் பிறகு கட்சியை தன்வசப் படுத்தல் தான் அவரது நோக்கம் என்ன வெஞ்சினம் கொண்ட மணி மருத்துவர் ராமதாஸின் குடும்ப பாசத்தை பயன்படுத்தி பேரன் முகுந்தன் பரசுராமனை அரசியல் களத்தில் முன்னிறுத்தி மருத்துவர் ராமதாஸ் குடும்பம் பிரிவதற்கு காரணமாக இருக்கிறார் அதனைப் பயன்படுத்தித் தான் மருத்துவர் அன்புமணிக்கு எதிராக மருத்துவர் ச.ராமதாஸை திசை திருப்பினார். இவரது மகன் ஜிகேஎம் தமிழ் குமரன் , தற்போது தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் தலைவராக லைக்கா புரொடக்ஷன்ஸ் இந்தியாவின் முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று. இவர் பாமக தலைவரான ஜி.கே. மணியின் மகன். அவர் எந்திரன் ட்ரம் புன்னகை (2013) என்ற திரைப்படத்தை தயாரித்தார் . அவர் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸின் தயாரிப்புத் தலைவராவார் 2010 ஆம் ஆண்டு பென்னாகரம் இடைத்தேர்தலில் பாமக வேட்பாளராகப் போட்டியிட்டு மறைந்த திமுக சட்ட மன்ற உறுப்பினர் பிஎன் பெரியண்ணனின் (முன்னாள் பாமக உறுப்பினர்) மகன் பிஎன்பி இன்பசேகரனிடம் தோல்வியடைந்தார்.
நான்காவதாக ஜி.கே.மணி வீட்டுத் திருமணத்திற்கு மொத்த திமுகவினரும் கலந்து கொண்டனர்
ஐந்தாவதாக 2009 ஆம் ஆண்டு தொகுதி சீரமைப்புக்கு கையெழுத்து போட்டு பாமகவை அழிவு பாதைக்கு கொண்டு சென்றவர் ஜி.கே.மணி என்பது அவர்களின் குற்றச்சாட்டு
இப்படி ஏகப்பட்ட காரணங்களை ஊடகப் பேரவையினர் தொடர்ந்து ஜி.கே.மணி மீது முன் வைக்கும் நிலையில்
2015 ஆம் ஆண்டு காலகட்டத்திலிருந்தே நான் அறிந்தவன் என்பதால் ஊடகப் பேரவையின் இன்றைய பிரஷாந்த் கிஷோராகச் செயல்படும் அருள் ரத்தினம் அவர்களைப் பொறுத்த வரை ஒருவரை கட்சிலிருந்தோ? இல்லை கட்சிக்கு எதிராக கட்டமைக்க முடிவு செய்தால் அவர் செய்யும் நூதனமான ட்ரீக் முதலில் அவரின் செயல்பாடுகளை கட்சித் தலைமைக்கு எதிராக கட்டமைப்பது, இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை மருத்துவர் அன்புமணி என்பதால் அன்புமணிக்கு எதிராகத்தான் GK மணியை கட்டமைக்க முடியும் அதை செய்தால் மட்டுமே கட்சியின் தொண்டர்கள் அதனை மெல்ல மெல்ல நம்பத் தொடங்குவார்கள். அதேப்போல் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டார் அவரை அந்த சதியை செய்யத் தூண்டியது அதை நடத்தியது ஜி.கே.மணி தான் என்று தொடர்ந்து பாமக தொண்டர்கள் நம்புகின்றனர்12 ஆண்டுகளுக்குப் பின் பாமக சார்பில் நடத்தப்பட உள்ள மாமல்லபுரம் சித்திரை முழுநிலவுத் திருவிழா ஏற்பாடுகளை மருத்துவர் அன்புமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது கேள்வி எழுப்பும் முன்னரே முந்தி பதிலளித்தார். "நீங்கள் என்ன கேட்கப்போகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். இது (ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையிலான அறிக்கை சண்டை) எங்களின் உட்கட்சி விவகாரம். எங்களுக்குள் நாங்கள் பேசிக் கொள்வோம்" என்றார். கட்சியின் நிறுவனர் ராமதாஸின் வழிகாட்டுதலுடன் அவரது கொள்கையை நிலை நாட்டவும், பா.ம.க.வை ஆளும் கட்சியாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் கடுமையாக எல்லோரும் சேர்ந்து உழைப்போம் எனவும் அன்புமணி கூறினார்.
இதனிடையே ராமதாஸ் பெயரில் "தலைவர்" என குறிப்பிட்டு அறிக்கை சில நாட்களாக வெளியான நிலையில், தற்போது மீண்டும் நிறுவனர் என்ற பெயரில் அறிக்கை ஒன்று இணையதளங்களில் பரவி வருகிறது. சித்திரை திருநாளுக்காக மருத்துவர் ராமதாஸ் பெயரில் வெளியான வாழ்த்து அறிக்கை ஒன்றில், கட்சியின் 'நிறுவனர்' என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னணி குறித்து காணலாம்.
"இனி பாமகவின் தலைவர் நான் தான்," என்றார் பாமக நிறுவனர் ராமதாஸ். மறுபுறம், கட்சியின் தலைவராக முறைப்படி பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருப்பதாகவும், அதனால் நான் தான் கட்சியின் தலைவராக செயல்படுவேன் என்றும் பதில் அறிக்கை விடுத்திருக்கிறார் மருத்துவர் அன்புமணி
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலமே உள்ள நிலையில், கட்சிக்குள் ராமதாஸ்-அன்புமணி இடையே நடக்கும் சண்டை, நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வாக்கு வங்கியில் எடப்பாடி கே. பழனிச்சாமி அதிமுக வாங்கிய 20 % பாஜகவுக்கு எதிரான வாக்குகள்.பாஜகவாங்கிய 18% வாக்குகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரானவை.இந்த 38% ல் 30% அதிமுக வாக்குகள்.அனைத்தும் பாஜக, எடப்பாடிக்கு எதிரான வாக்குகள்.இவர்கள் கூட்டணி அதிமுகவில் பூகம்பம் வெடிக்கிறது! அதன் காரணமாக எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்? என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன. ஆனால் இதற்கு முந்தைய பிரச்னைகளுக்குப் பின்னரும் தந்தையும், மகனும் மீண்டும் ஒன்றாக இணைந்தது கடந்த கால வரலாறாக இருக்கிறது.
'மருத்துவர் ச.ராமதாஸ்-அன்புமணி இடையே நிலவும் பிரச்னை குறித்து கேட்டபோது, "அது உங்களுக்குதான் (ஊடகங்கள்) பிரச்னை. நாங்கள் மக்கள் பணியாற்றிதான் அதை நிறுத்த முடியும். மருத்துவர் ராமதாஸ் மற்றும் மருத்துவர் அன்புமணியும் எதிர்பார்ப்பது மக்கள் பணியாற்ற வேண்டும் என்பது தான். அதைத்தான் செய்கிறோம், பிரச்னை ஒன்றுமில்லை" என முக்கிய நிர்வாகிகள் கூறிவருகின்றனார். இந்த நிலையில் தலைவர் மருத்துவர் அன்புமணி தரப்பில் ஊடகப் பேரவை சார்பில் வெளியிடப்பட்ட செய்தியில் "சதியை முறியடிப்போம். சாதித்து காட்டுவோம்"
மாநாடு நடந்தால் தங்களது நிலை அடிபாதளத்திற்கு செல்லும் என்ற பீதியில் சதி செய்யும் திமுக கைக்கூலிகளுக்குப் பாடம் புகட்டுவோம். இந்த சதிகார கும்பலை ஒன்றுபட்டு வீழ்த்துவோம்.
ஜாதிவாரிக் கணக்கெடுப்பு, வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு போன்றவற்றை நாம் அடைந்தே தீர வேண்டும். வெற்றியைத் தடுக்க சதி வேலையில் ஈடுபட்டுள்ள திமுக கும்பலுக்குப் பாடம் புகட்டும் வகையில், நமது பரப்புரைகள் அமையும். அதற்கான பரப்புரை செய்திகள் விரைவில் பாமக தலைமையால் பகிரப்படும். எனத் தெரிவிக்கிறது அச் செய்திக் குறிப்பு.
கருத்துகள்