மாநில அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் இரவிச்சந்திரனுக்குச் சொந்தமான கட்டுமான நிறுவனத்தில் அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனை நடத்தினர்.
மேலும் தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, பெசன்ட் நகர், சி.ஐ.டி. காலனி, எம்.ஆர்.சி.நகர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களிலுள்ள அவர்கள் சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனங்களுக்கு தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
அமைச்சர் சகோதரரின் வங்கிக் கணக்கில் அதிக பரிவர்த்தனை அடிப்படையில் பணம் எங்கிருந்து வந்தது என்ற அடிப்படையில் அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனை செய்தனர் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.எனவே சோதனையின் இறுதியிலேயே சோதனைக்கான முழு விவரம் தெரியவரும்
அதைபோல அமைச்சர் கே.என்.நேருவின் மகனும், பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான அருண் நேருவுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தினர். டிவிஎச் என்ற பெயரில் கட்டுமான நிறுவனம், மின் உற்பத்தி நிறுவனம், ஜிஎஸ்என்ஆர் உள்ளிட்ட நிறுவனங்கள் நடத்தி வரும் நிலையில், திருச்சிராப்பள்ளி அமைச்சர் கே.என்.நேருவின் இல்லத்திலும் அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனை நடத்தினர். அமைச்சர் நேருவின் சகோதரர்கள், ரவிச்சந்திரன், மணிவண்ணன், சகோதரி உமா மகேஸ்வரிக்கு சொந்தமான இடங்களிலும்
அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனை நடத்தினர் அமைச்சர் நேரு இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்ற நிலையில் ஆதரவாளர்கள் திரண்டனர். இந்த சோதனையில் வழக்கு தொடர்பான சில ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இருந்தாலும், டிவிஎச் கட்டுமான நிறுவனம் மற்றும் டிவிஎச் மின் உற்பத்தி நிறுவனம்,
ஜிஎஸ்என்ஆர் நிறுவனங்களில் இருந்து ஆண்டு வருமானம் தொடர்பான ஆவணங்கள், வரவு செலவு உள்பட வங்கிப் பணப்பரிவர்த்தனை விவரங்கள், மின் உற்பத்தி நிறுவனத்திற்கு வெளிநாடுகளில் இருந்து இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்ட ஆவணங்களை அமலாக்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர்.
இந்த சோதனை முடிந்த பிறகு தான், எத்தனை கோடி சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டது என்ற முழுமையான விவரங்கள் தெரிய வரும்.
கருத்துகள்