வெளிச்சத்திற்கு வரும் இருட்டுக்கடை விவகாரம்: இறுதியில் அல்வா யாருக்கு? திருநெல்வேலி இருட்டுக்கடை உரிமை யாருக்கு
என்பதில், கடையின் உரிமையாளரெனக் கருதப்படும் மூன்றாம் தலைமுறை கவிதாவின் சகோதரர் நயன் சிங், சார்பில் இன்று பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தற்போதைய உரிமையாளராக உள்ள கவிதாவின் சகோதரர் நயன் சிங் என்பவர் இருட்டுக்கடை நிறுவனம் தனக்குத் தான் சொந்தமென நாளிதழ்களில் வழக்கறிஞர் மூலம் பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன் முன் வரலாறு இது :-
தென்காசி - புளியங்குடி சாலையிலுள்ள சொக்கம்பட்டி சுதந்திரம் அடையும் முன் சமஸ்தான ஜமீனாக இருந்தது. அதிலிருந்த பல குதிரைகளுக்கு பராமரிக்கும் வேலை மற்றும் நல்ல தரமான உணவளிக்க வட இந்தியாவில் ஒட்டகம் மற்றும் குதிரை மேய்த்த அனுபவஸ்தவர் சிலர் வந்தனர். அவர்களுடைய பராமரிப்பில் இந்த ஜமீனிலிருந்த குதிரைகள் நன்கு போஷாக்குடன் வளர்ந்தன. அவர்கள் குதிரைகளுக்கு அளித்த உணவுகளில் ஒன்றுதான் இந்த சொக்கம்பட்டி அல்வா.
காலப்போக்கில் அந்த ஜமீன் ஆட்சி நிர்வாகம் 1952 ஆம் ஆண்டில் முடிவடைந்தவுடன் அங்கு வேலை செய்தவர்களுக்கு வேலை இல்லாமல் போனது. அவர்கள் திருநெல்வேலியில் குடியேறினார்கள். அவர்களில் ஒருவரான ராஜஸ்தானை சேர்ந்த கிருஷ்ண சிங் அவரது மகன் பிஜிலி சிங் அவர்கள் தாமிரபரணி தண்ணீர் மூலம் தயாரித்தார். அல்வாவை சுவைத்த திருநெல்வேலி மக்கள் அதன் சுவையில் மயங்கி, அதற்கு மாலை நேரத்தில் அடிமையானார்கள். இந்த பிஜிலி சிங் தான் இருட்டுக்கடை அல்வா விற்பனையை 1940 ஆண்டில் ராஜஸ்தானைச் கிருஷ்ணசிங் என்பவர் தனது குடும்பத்துடன் சொக்கம் பட்டி வந்த நிலையில் பின்னர் திருநெல்வேலயில் குடிபுகுந்தார் அல்வா தயாரித்தார்.
கடை மாலை நேரத்தில் திறக்கப்படுவதால், அது இருட்டாக இருக்கும். சாமானிய மக்களுக்கு மின்சாரம் இல்லாத காலம் அதனால் தான் கடை இருட்டுக்கடை என்று பெயர் பெற்றது அதுவே நிலைத்து அதன் அடையாளமாக மாறியது. பிஜிலி சிங்கின் மறைவிற்குப் பிறகு, அவரது மனைவி சுலோசனா பாய் சகோதரன் ஹரிசிங் ஆகியோர் இணைந்து கடையை நடத்தினர்.
இருட்டுக்கடை அல்வாவின் சிறப்பு, கோதுமையை கல் உரலில் கைகளால் அரைத்து, தாமிரபரணி ஆற்று தண்ணீர் பயன்படுத்துவதாகும்.
பிஜிலி சிங் மறைவுக்குப் பின்பு அவரது மனைவி சுலோச்சனா பாய்க்கு கடையின் உரிமை சென்று சேர வேண்டுமென 1999 ஆம் ஆண்டு சட்டப்படி சாட்சிகள் மத்தியில் உயில் எழுதி வைத்து காலமானார்
பிஜிலி சிங் மனைவி சுலோச்சனா பாய் மறைவுக்கு பின் அவர்களுக்கு நேரடி வாரிசு இல்லாத நிலையில் சுலோச்சனா பாயின் சகோதரர் ஜெயராம் சிங்க்கு சென்று சேர வேண்டும் என உயில் எழுதி வைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி சுலோச்சனா பாயும் உயிரிழந்த நிலையில் இருட்டுக்கடை அல்வா ஸ்தாபனம் பல ராயல்டி நிறுவனங்கள் அங்கங்கு கிளை பரப்பி மற்றும் சொத்துகள் அனைத்தும் ஜெயராம் சிங் தரப்புக்கு அதாவது அவரது மகனுக்கு வர வேண்டுமென அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது உரிமையாளரான கவிதா என்பவர் தனக்கு மட்டும் இருட்டுக்கடை சொந்தம் எனக் கூறுகிறார் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது
ஆனால், உயிலில் குறிப்பிட்டபடி ஜெயராம் சிங் மகன் நயன் சிங்குக்கு மட்டும் இருட்டுக்கடை உரிமை பாத்தியபட்டது. இருட்டுக்கடைக்கு சம்பந்தமில்லாத நபர்கள் கடையை உரிமை கோரி சண்டை செய்து வருவதாகத் தகவல். இந்த விவகாரம் தொடர்பாக இரண்டாவது மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் திருநெல்வேலியில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
பிஜிலி சிங் எழுதி வைத்த உயிலின் அடிப்படையில் வழக்குத் தொடர்ந்து இருட்டுக்கடை ஸ்தாபனம் குறித்த நடவடிக்கையை நயன் சிங் எடுக்க உள்ளார். இருட்டுக்கடை ஸ்தாபனம் சம்பந்தமாக நயன் சிங் சகோதரி கவிதா என்பவருக்கு எந்தவித தொடர்பும் யாரும் வைத்துக் கொள்ள வேண்டாம் என பொது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.அதனை மீறுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பொது நீதி யாதெனில்: குதிரை மேய்க்க ஜமீன் மூலம் வந்து திருநெல்வேலி அல்வா என ஒரு உணவு சாம்ராஜ்யம் உருவாக்க கிருஷ்ணன் சிங் பாடுபட்டது எல்லாம் அவரது நேரடி வாரிசுகளுக்கு உள்ள உயில் மூலம் சேரவேண்டும் என்பதே . இதில் மற்றவர்கள் அறமற்ற ஆக்கிரமிப்பாளர்கள்
கருத்துகள்