CPI(M) 24 வது அகில இந்திய மாநாட்டில் பாலஸ்தீன ஆதரவு
தீர்மானத்தை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி முன்மொழிய அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வழிமொழிந்தார். பிரதிநிதிகள் தலைவர்கள் பாலஸ்தீன உடையான ஃகபியே அணிந்து முழக்கமிட்டு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர்.
மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டினை முன்னிட்டு தமுக்கம் மைதானம் மற்றும் மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் கூட்டாட்சிக் கோட்பாடே இந்தியாவின் வலிமை என்னும் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்கத்திற்கு கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமையேற்றார். மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன் வரவேற்றார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் சிறப்புரையாற்றினார். கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் , தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , கர்நாடக மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் சுதாகர் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன் நன்றி கூறினார். உடன் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் பெ.சண்முகம்.
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
இந்த நிலையில். 53 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு நடந்தது
ஏற்பாடுகள் ஒவ்வொன்றும் சிறப்பாக அமைய இரண்டு மாத காலமாக உழைத்த கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய விழா துவங்கம்
ஏகாதிபத்திய எதிர்ப்புக் குரலாக ஒலித்தது பொது மாநாடு தொடங்கியது. பொது மாநாட்டுக்கு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் மாணிக் சர்க்கார் தலைமை ஏற்றார்.
சீத்தாராம் யெச்சூரிக்கு அஞ்சலி முதல் நிகழ்வாக நடந்தது, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் அஞ்சலித் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
தொடர்ந்து அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், முன்னாள் கேரள மாநில கட்சிச் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன், மூத்த தலைவர், முன்னாள் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா, கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா ஆகியோரின் கம்யூனிஸ்ட் இயக்கப் பணிகளை நினைவு கூர்ந்து மாநாடு அஞ்சலி செலுத்தியது.
மாநாட்டுத் தலைவர் மாணிக் சர்க்கார் தலைமை உரையாற்ற, ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத் தொடக்க உரை ஆற்றினார். இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர்.
மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டின் வரலாற்றுக் கண்காட்சி மூத்த பத்திரிக்கையாளர் இந்து என்.ராம் திறந்து வைத்தார். புத்தக கண்காட்சியை வி.பரமேஸ்வரன் திறந்து வைத்தார். தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்த தியாகச் சுடர்கள் சுடர்விடத் துவங்கியது. அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் சிறப்புரை நிகழ்த்தினார். கலைநிகழ்ச்சிகளும் , இசைப்பாடல்களும் நிகழ்ந்தேறின.
உடன் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன் , உ.வாசுகி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.கனகராஜ், கே.பாலபாரதி உள்ளிட்ட தலைவர்களும் ,
தோழர்களும் பங்கேற்ற நிலையில் CPI(M) 24ஆவது தேசிய மாநாட்டில், இடதுசாரி மற்றும் சோசலிச இயக்கங்களின் அழைப்பில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் தேசிய பொதுச்செயலாளர் G. தேவராஜன் மற்றும் கட்சியின் தேசிய துணைத்தலைவர் மற்றும் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் P.V. கதிரவன் (Ex. M.L.A) ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, மாநாட்டில் கலந்து கொள்ள மதுரை விமான நிலையத்திற்கு வந்த தேசிய பொதுச் செயலாளர் G. தேவராஜனை மாநில பொதுச் செயலாளர் டாக்டர் பி.வி. கதிரவன், மாநில தலைவர் முகவை C.முத்துராமலிங்கம் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.
கருத்துகள்