முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

12 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரி சேர்க்கை விண்ணப்பம் வெளியீடு

தமிழ்நாடு அரசு 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு 



அதிக அளவில் தேர்வு பெற்ற அரியலூர் மாவட்டம் முதலிடம் . 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் அரியலூர் மாவட்டம் 98.82 சதவிகிதம் பெற்று முதலிடம். தமிழ்நாட்டில் மாநிலப் பாடத் திட்டத்திற்கான பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் தற்போது வெளியானது. மாா்ச் மாதம் 3-ஆம் தேதி துவங்கி 25-ஆம் தேதி முடிவடைந்து. தமிழ்நாடு அரசு  பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்டத்தில் பயின்ற



மாணவர்களுக்கு பிளஸ் டூ பொதுத்தேர்வு நடைபெற்றதற்கான முடிவுகளே இன்று வெளியானது. கடந்த ஆண்டுகளை விட கூடுதல் விகிதாச்சாரத்தில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றனர்.       தேர்ச்சி பெற்றவர்கள் 7.53 லட்சம் பேர்

மாணவியர்களில் 4.54 லட்சம் பேரும் 

மாணவர்களில் 3.57 லட்சம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்

மாணவர்களை விட 3.54 சதவிகிதம் மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றனர்.





அரியலூர் மாவட்டம் 98.82 சதவிகிதம் பெற்று முதலிடம்


ஈரோடு மாவட்டம் 97.98 சதவிகிதம் பெற்று இரண்டாமிடம்

திருப்பூர் மாவட்டம் 97.53 சதவிகிதம் பெற்று மூன்றாமிடம்

கோயம்புத்தூர் மாவட்டம் 97.48 சதவிகிதம் பெற்று நான்காமிடம்



கன்னியாகுமரி  மாவட்டம் 97.01 சதவிகிதம் பெற்று ஐந்தாமிடம். 2025 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளைப் பார்க்க மாணவர்கள், தங்கள் மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்ய அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் மற்றும் பல மாற்று முறைகளைப் பயன்படுத்தலாம். தமிழ்நாடு 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை ஆன்லைனில் மற்றும் ஆஃப்லைனில் பார்த்து பதிவிறக்கம் செய்யக்கூடிய அனைத்து தளங்களுக்கும் கீழே உள்ளன.



dge.tn.gov.in

tnresults.nic.in

apply1.tndge.org/dge-result-list

tn gov 


அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளைப் பார்க்க, மாணவர்கள் சில முக்கியமான உள்நுழைவு விவரங்களை உள்ளிட வேண்டும். இந்த விவரங்கள் அவர்களின் நுழைவு அட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.   இந்த நிலையில் மாநில அளவில் பொறியியல் கலந்தாய்வுக்கு இன்று முதல் நாளில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.                              -விளம்பரம்- .                          -விளம்பரம்-

2025 ஆம் ஆண்டுக்கான பொறியியல் பட்டயப் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் நேற்று மே 7 ஆம் தேதி துவங்கி வைத்தார்.

பொறியியல் படிப்புடன் அரசு கலை மற்றூம் அறிவியல் கல்லூர்கள், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையும் தொடங்கியது. இதற்காக தனித்தனியாக வலைதளப் பக்கங்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.

பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.


தமிழ்நாட்டில் உள்ள 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 159 பாடப்பிரிவுகளில் மொத்தம் 1,25,345 சேர்க்கை இடங்களில் சேர விரும்பும் மாணவர்கள் ஜாதி வாரி இட ஒதுக்கீடுகள் படி www.tngasa.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்நிலையில், பொறியியல் கலந்தாய்வுக்காக முதல் நாளில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் படிப்புகளுக்கான..

விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள்: 06.06.2025

அசல் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய கடைசி நாள்: 09.06.2025

ரேண்டம் எண் வெளியிடும் நாள்: 11.06.2025

சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் நாட்கள்: 10.06.2025 முதல் 20.06.2025 வரை

தரவரிசை பட்டியல் வெளியிடும் நாள்: 27.06.2025

தரவரிசை பட்டியலில் பிழை இருந்தால் சேவை மையத்தை தொடர்பு கொள்ள வேண்டிய நாட்கள்: 28.06.2025 முதல் 02.07.2025 வரை.              ‌‌.                    -விளம்பரம்-

                       'விளம்பரம்-                               கலந்தாய்வு தொடங்கும் நாள் குறித்து     ஏஐசிடிஇ நாள்காட்டியின்படி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்காக விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.05.2025 ஆகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...