மசோதாவின் ஒப்புதலுக்கு குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதிக்கலாமா என குடியரசுத் தலைவர் வினா?.
மசோதாவின் ஒப்புதலுக்கு குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதிக்கலாமா என குடியரசுத் தலைவர் வினா?.
அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 143(1)-ன் படி, குடியரசுத் தலைவர் சட்ட மற்றும் பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் உச்ச நீதிமன்றத்தின் கருத்தைப் பெற முடியும். சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர்களும் குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளிக்க காலக்கெடுவை நிர்ணயித்த உச்ச நீதிமன்றத்தின் மூலமாக சமீபத்தில் தமிழ்நாடு அரசு பெற்ற தீர்ப்பைத் தொடர்ந்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 143 (1) ன் கீழ், இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நடவடிக்கை உச்ச நீதிமன்றத்தின் முன் ஒரு பரிந்துரையை அனுப்பியுள்ளார்.
அரசியலமைப்பின் பிரிவு 143(1)-ன்படி, சட்டம் மற்றும் பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்தின் கருத்தைப் பெற முடியும். இந்தக் குறிப்புக்கு பதிலளிக்க உச்சநீதிமன்றம் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் அமைப்பு அமர்வை நியமிக்க வேண்டும்.
ஜனாதிபதி மற்றும் ஆளுநரின் காலதாமதம் உள்ள மசோதா தானே ஒப்புதல் எனும் கருத்து ஜனநாயக நாட்டில் அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது மற்றும் ஜனாதிபதி மற்றும் ஆளுநரின் அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டது என்கிறது என குறிப்புக் கூறுகிறது.
குறிப்பாக, மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த காலக்கெடுவைப் பின்பற்றத் தவறினால், ஒப்புதல் பெற்றதாகவே இருக்கும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஜனாதிபதி திரௌபதி முர்மு கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதியின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் செயல்முறையை நிர்வகிக்கும் அரசியலமைப்பின் கண்டுள்ள 200 மற்றும் 201 பிரிவுகள் எந்தக் காலக்கெடுவையோ அல்லது குறிப்பிட்ட நடைமுறைத் தேவைகளையோ பரிந்துரைக்கவில்லை என்பதை வலியுறுத்தும் அதே வேளையில், ஜனாதிபதி முர்மு உச்ச நீதிமன்றத்தின் இறுதிக் கருத்துக்காக 14 கூர்மையான கேள்விகளை அரசியல் சாசன விதிமுறைகளின் படி அனுப்பியுள்ளார்.
இந்தியக் குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் விபரம்:-
1) ஒரு மசோதாவை ஆளுநரிடம் சமர்ப்பிக்கும்போது, அவருக்கு முன் உள்ள அரசியலமைப்பு வாய்ப்புகள் என்ன?
2.அத்தகைய மசோதாக்களைக் கையாளும் போது ஆளுநர் அமைச்சர்கள் குழுவின் உதவி மற்றும் ஆலோசனையின் பேரில் மட்டுமே செயல்பட வேண்டுமா?
3.பிரிவு 200 ன் கீழ் ஆளுநரின் விருப்புரிமை நீதித்துறை ஆய்வுக்கு உட்பட்டதா?
4.பிரிவு 361, பிரிவு 200 ன் கீழ் ஆளுநரின் முடிவுகளை நீதிமன்ற மறுஆய்விலிருந்து முழுமையாகப் பாதுகாக்கிறதா?
5.அரசியலமைப்பில் வெளிப்படையான காலக்கெடு இல்லாத நிலையில், மசோதாக்கள் மீது செயல்பட ஆளுநர்களுக்கு நீதித்துறை கால வரம்புகளை விதிக்க முடியுமா?
6.பிரிவு 201 ன் கீழ் ஜனாதிபதியின் விருப்புரிமையை நீதித்துறை ரீதியாக மதிப்பாய்வு செய்ய முடியுமா?
7.அரசியலமைப்பு ஆணைகள் இல்லாத நிலையில், நீதித்துறையால் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு ஜனாதிபதி கட்டுப்படுகிறாரா?
8.ஒரு மசோதா ஆளுநரால் ஒதுக்கப்படும்போது, பிரிவு 143 ன் கீழ் ஜனாதிபதி உச்ச நீதிமன்றத்தின் கருத்தை அவசியம் பெற வேண்டுமா?
9.ஒரு மசோதா சட்டமாக மாறுவதற்கு முன்பு ஆளுநர் அல்லது ஜனாதிபதியின் முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிட முடியுமா?
10.பிரிவு 142 ன் கீழ் ஜனாதிபதி அல்லது ஆளுநரின் முடிவுகளை மீறவோ அல்லது மாற்றவோ அனுமதிக்கப்படுமா?
11.ஒரு மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் சட்டமாக மாறுமா?
12.அரசியலமைப்பு விளக்கக் கேள்விகள் முதலில் பிரிவு 145(3) ன் கீழ் அரசியலமைப்பு அமர்வு விசாரணை உட்பட்டதா? 13.பிரிவு 142,ன் நடைமுறை விஷயங்களுக்கு அப்பால், ஏற்கனவே உள்ள சட்டங்கள் அல்லது அரசியலமைப்பு விதிகளுக்கு முரணான தீர்ப்புகளை அனுமதிக்கிறதா?
14 மத்திய-மாநில அரசுகள் சாங தகராறுகளை உச்சநீதிமன்றத்திற்கு பிரத்யேக அதிகார வரம்பை வழங்கும் அரசியலமைப்பு பிரிவு 131க்கு வெளியே தீர்க்க முடியுமா?கூடுதலாக, மத்திய-மாநில அரசு தகராறுகளில் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பிரிவு 32 ஐ மாநிலங்கள் செயல்படுத்தும் போக்கு குறித்தும் ஜனாதிபதி கவலை தெரிவித்தார். அத்தகைய விஷயங்கள் பிரிவு 131 ன் கீழ் தீர்ப்பளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.பாரத ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் - உச்சநீதிமன்றத்தில் Article 143(1) of the Constitution கீழ் ஒரு கேள்வி - ஜனாதிபதி பின்பற்ற வேண்டிய காலக்கெடுவை நீதிமன்றம் பரிந்துரைக்க முடியுமா? என்பதைக் கேட்டுள்ளார்கள் ..
"ஒரு அரசியல் சாசன அமர்வு உருவாக்கி - ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி இந்திய நாட்டின் ஜனாதிபதிக்கு நாள் குறித்து ஆணையிட முடியுமா என்று சட்டப் புத்தகங்களைப் பார்த்து விடை சொல்லுமாறு கேட்டுள்ளார்.
இந்திய அரசியலமைப்பின் பிரிவு 361 ன் படி குடியரசுத் தலைவர், ஆளுநர்கள் மற்றும் இராஜபிரமுகர்களின் பாதுகாப்பு.
ஒரு மாநிலத்தின் குடியரசுத் தலைவர், அல்லது ஆளுநர் அல்லது ராஜ் பிரமுகர்கள், தனது அதிகாரங்களையும் கடமைகளையும் செயல்படுத்துவதற்கும் செயல்படுத்துவதற்கும் அல்லது அந்த அதிகாரங்களையும் கடமைகளையும் செயல்படுத்துவதிலும் அவர் செய்த அல்லது செய்யக் கூறப்படும் எந்தவொரு செயலுக்கும் எந்த நீதிமன்றத்திற்கும் பொறுப்பேற்க மாட்டார்கள்:
ஆனால், பிரிவு 61 ன் கீழ் ஒரு குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக நாடாளுமன்றத்தின் எந்த அவையினாலும் நியமிக்கப்பட்ட அல்லது நியமிக்கப்பட்ட எந்தவொரு நீதிமன்றம், தீர்ப்பாயம் அல்லது அமைப்பாலும் ஜனாதிபதியின் நடத்தை மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படலாம்:
மேலும், இந்தப் பிரிவிலுள்ள எதுவும், இந்திய அரசு அல்லது ஒரு மாநில அரசு மீது பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எந்தவொரு நபரின் உரிமையையும் கட்டுப்படுத்துவதாகக் கருதப்படாது.
தெளிவாக ஜனாதிபதி மற்றும் ஆளுநர் செயல்பாடுகளுக்கு ஆணையிடும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை என்றும் - பாராளுமன்றம் -பிரிவு 61 ன் கீழ் ஒரு குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக நியமித்த நீதிமன்றத்திற்கு மட்டுமே அந்த அதிகாரமுண்டு எனச் சொல்லி இருக்கிறார்கள்
இந்த ஆணையைக் காட்டி வழக்கில் வாதிட்ட வழக்கறிஞர்களுக்கு செங்கோல் வழங்கும் தலைமைக் கொண்டாட்டமெல்லாம் இத்தோடு முடிவுக்கு வருகிறது என்பதே பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் நாம் முன்பே நமது இதழில் தெரிவித்திருந்த படி உச்சநீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வு மூலம் இது குறித்து விரைவில் தீர்வு வரும். தற்போது அது செயலாக்கம் பெறுகிறது. சித்தூர் ஆபரேஷன் யுத்த காலம் என்பது கடந்த நிலையில் தான் இந்த நடவடிக்கை மத்திய அரசு மூலம் வருவதில் தாமதம். இந்த நிலையில் தமிழ்நாடு மாநிலத்தில் ஆளுநர் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விளக்கம் கேட்டார். சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி இந்த விளக்கத்தை கேட்டுள்ளார். Presidential reference to Supreme Court அரசியல் சாசன பிரிவு 143(1) மூலம் ஜனாதிபதி வழியாக மத்திய அரசு அணுகியுள்ளது. அதாவது மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலநிர்ணயம் செய்த விவகாரத்தில் கூடுதல் விளக்கம் கேட்டுள்ளார்.
ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்த விவகாரம்
உச்சநீதிமன்றத்திடம் ஆலோசனை கருத்தை பெறும் வகையில் 14 கேள்விகளை எழுப்பினார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு
1988 ஆம் ஆண்டுக்குப் பின்னர் உச்சநீதிமன்றத்திடம் ஆலோசனை கருத்தை குடியரசுத் தலைவர் கேட்டிருப்பது இப்போது சிறந்த நிகழ்வு எனக் குறிப்பிடத்தக்கது அதோடு புதிய திருப்பமாக. நாட்டுக்கே முன்னோடின்னு சொன்னாங்களே? தற்போது ஏன் இவ்வாறான பதற்றம்?
அது குறித்து பதில் அறிக்கை அவசரகதியில் என அரசியல் சட்டம் அறிந்த நபர்கள் மத்தியில் ஒரு பக்கம் பேச்சாகும் நிலையில். தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்க தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டங்களை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் தொடர்ந்துள்ள உச்சநீதிமன்ற வழக்கில் மத்திய, மாநில அரசுகள் ஒரு வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குவது, பல்கலைக்கழகங்களின் வேந்தராக தமிழ்நாடு முதல்வரை நியமிப்பது உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய 10 மசோதாக்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலதாமதம் செய்ததால், உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சட்டப்பேரவையில் மறுநிறைவேற்றம் செய்து ஆளுநருக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்ட 10 மசோதாக்களுக்கும் தனக்குரிய சிறப்பு அதிகாரம் மூலம் ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களும் அரசிதழ்களில் வெளியிடப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டதன் மூலம், பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை தமிழ்நாடு அரசுக்கு வழங்கும் பிரிவுகளை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் கே.வெங்கடாச்சலபதி பொதுநல மனு தாக்கல் செய்துள்ளதில் கூறியுள்ளதாவது:
பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்க அரசுக்கு அதிகாரம் வழங்கும் சட்டங்களை எதிர்த்து வழக்கில் மத்திய, மாநில அரசுகள் ஒரு வாரத்தில் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கறிஞர் கே.வெங்கடாச்சலபதி பொதுநல மனுவில் கூறியுள்ளதாவது:
பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வரை நியமிக்கும் வகையில் கடந்த 1994-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தம் நிலுவையில் உள்ளது. அதை திரும்ப பெறாமல் புதிதாக சட்டத் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றியது சட்டப்பேரவை விதிகளுக்கு எதிரானது. மேலும், இந்த சட்ட திருத்தங்களுக்கான தீர்க்கமான காரணங்கள் எதுவும் தமிழ்நாடு அரசால் தெரிவிக்கப்படவில்லை. பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றால், அந்த அதிகாரம் சட்டப்பேரவைக்கு உள்ளதா, அமைச்சரவைக்கு உள்ளதா அல்லது மாநில அரசின் நிர்வாக தலைவரான ஆளுநருக்கு உள்ளதா என்பது குறித்தும் தெளிவுபடுத்தப்படவில்லை. தமிழ்நாட்டில் அரசு சார்பில் இந்த சட்ட மசோதாக்கள், பல்கலைக்கழக மானிய குழுவின் (யுஜிசி) விதிகளுக்கு எதிராக உள்ளன. எனவே, துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான இந்த மசோதாக்கள் சட்ட விரோதமானவை என அறிவிக்க வேண்டும். என அதில் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய விடுமுறை கால சிறப்பு அமர்வு, இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் ஒரு வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.
கருத்துகள்