முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வடகாடு சம்பவம் உண்மை நிலவரம் காவல்துறை கூறுவதா பகுதி மக்கள் கூறுவதா என்ன நடக்கிறது செய்தியாளர் கள் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா வடகாட்டில் அரசு புறம்போக்கு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள கோவில் மற்றும் விளையாட்டுத் திடல் தொடர்பாக


இரண்டு சமூகத்தினரிடையே சில காலமாக முன்விரோதமிருந்து வந்துள்ள நிலையில்  நேற்று வடகாடு முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் தேரோட்டம்  நடைபெற்ற நிலையில், அப்பகுதியில் உள்ள பிற்பட்ட முத்தரையர் மற்றும் ஆதிதிராவிடரில் ஒரு பிரிவு இளைஞர்களிடையே ஏற்கனவே ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக மீண்டும் பிரச்சனை ஏற்பட்டது. ஒரு சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் மற்றொரு தரப்பைச் சேர்ந்த குடிசைகளுக்கு தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. இதேபோல்,

மற்றொரு தரப்பைச் சேர்ந்த இளைஞர்கள் அப்பகுதியில் சாலைகளில் நடந்து சென்ற வழிப்போக்கர்களை தாக்கியுள்ளனர்.



மோதலில் 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், காவலர்கள் நால்வரும் காயமடைந்தனர் எனத் தகவல் ஒருவருக்கு அருவாள் வெட்டுப் பட்டுள்ளது, ஒரு சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் மற்றொரு தரப்பைச் சேர்ந்த மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

இதில்,10 க்கும் மேற்பட்டோர் வடகாடு, ஆலங்குடி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.




மேலும் அப்பகுதியில் அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் அபிஷேக்குப்தா தலைமையிலான காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வடகாட்டில் இருதரப்பினரிடையே மோதல் என்பது தவறான செய்தி என புதுக்கோட்டை மாவட்டக் காவல்துறை தரப்பில் தகவல். ஆனால் 


மதுபோதையில் இருதரப்பு இளைஞர்களிடையே மோதல் என விசாரணையில் தெரிகிறது; சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களைப் பிடித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், அரசு பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்ட நிலையில் அந்தப் பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் இந்த மோதல் குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.




 "பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவது தொடர்பாக இரண்டு தரப்பு இளைஞர்களிடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மோதலில் காவல் ஆய்வாளருக்கு தலையில் அரிவாள் வெட்டு எதுவும் விழவில்லை. வீடுகளுக்கு தீ வைப்பு, 5 பேருக்கு அரிவாள் வெட்டு என்பதும் வதந்தி என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.





 தேரோட்டப் பிரச்சனையில் வடகாடு பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கும்பல் வீடுகள், இரு சக்கர வாகனங்களுக்கு தீ வைத்த்து என்றும், இதில் சிலருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

அதில், வடகாடு காவல் சரகத்தில் முத்துராஜா சமூகத்தினருக்கும் SC/PR தரப்பினருக்கும் இடையே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட பிரச்சனையில் ஆதிதிராவிடர் மக்கள் குடியிருக்கும் பகுதியில் வீடுகளுக்கு தீவைப்பு எனவும், 5 பேருக்கு அரிவாள் வெட்டு, பேருந்து கண்ணாடிகள் உடைப்பு, காவல்துறையினர் 4 பேர் காயம் மற்றும் காவல் ஆய்வாளருக்கு தலையில் வெட்டுக்காயம் என செய்தி பரவியது.


உண்மையில், வடகாடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே மே மாதம் 5 ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் முத்துராஜா சமூகத்தைச் சோந்த நபர்களுக்கும்,SC/PR சமூகத்தைச் சேர்ந்த நபர்களுக்குமிடையே யார் முதலில் பெட்ரோல் போடுவது என வாய்தகராறு ஏற்பட்டு இருதரப்பினரும் பதிலுக்கு பதில் ஒருவரையொருவர் திட்டிக்கொண்டு அங்கிருந்து சென்றதாகவும் SC/PR தரப்பினர் அவர்களது குடியிருப்புப் பகுதிக்குச் சென்ற நிலையில், முத்துராஜா சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இரண்டு இருசக்கர வாகனங்களில், SC/PR தரப்பினரை பின்தொடர்ந்து சென்று மீண்டும் இருதரப்பினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.




இதில், ஓருவரையொருவர் தாக்கிக் கொண்டனர் எனவும் இருதரப்பினருக்குமிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு கூரை வீடு எரிக்கப்பட்டும், அரசு பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் மத்தியில் பேசுகையில் தெரியவருகிறது. மேற்படி சம்பவமானது குடிபோதையில் இருதரப்பு இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதல் என விசாரணையில் தெரியவருகிறது. இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களைப் பிடித்து விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என புதுக்கோட்டை மாவட்டக் காவல்துறை சார்பில் செய்தி வெளியாகின.


புதுக்கோட்டை வடகாடு பகுதியில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் புதுக்கோட்டை வடகாடு பகுதியில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் திருவிழா தொடர்பானது இல்லை என்றும் வேறு காரணம் என்றும் காவல்துறை தகவல் மூலம் விளக்கமளித்துள்ளது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...