மதுரை கிரானைட் முறைகேடுகள் தொடர்பான அமலாக்கத் துறை வழக்கில் நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பு
மதுரை மாவட்டக் கனிம வளத்துறை அலுவலர்கள் தனியார் உடன் சேர்ந்து நடத்திய கிரானைட் ஊழல் மோசடி தொடர்பான அமலாக்கத் துறை வழக்கில் சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் வழங்கிய மாறுபட்ட தீர்ப்பு.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள சுற்று வட்டாரப் பகுதிகளில் நடந்த கனிம வளத்துறை யின் கிரானைட் கற்கள் மோசடி தொடர்பாக ஒலிம்பஸ் கிரானைட் நிறுவத்தின் இயக்குனர்களான நாகராஜன், துரை தயாநிதி (முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன்) ஆகியோர் மீது கீழவளவு காவல்நிலையத்தில் கிரானைட் மோசடி குறித்து பதிவு செய்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுவந்தது.
இந்த மோசடி தொடர்பாக அதில் நடந்த பண முறைகேடுகள் குறித்து PMLA சட்ட விதிகளின் படி அமலாக்கத்துறையும் தனி வழக்காகப் பதிவு செய்து மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்த நிலையில், ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனத்தின் பங்குதாரரான மதுரையைச் சேர்ந்த நாகராஜன்,
உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “எங்கள் மீது கிரானைட் குவாரி மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது தொடர்பாக எங்கள் மீது PMLA பண மோசடிச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இந்த குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் ஏற்றுள்ளது. இந்த வழக்கில் என்னை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. அதை ரத்து செய்து என் மீதான குற்றச்சாட்டுகளையும் ரத்து செய்து உத்தரவிட வேண்டும்,” எனக் கூறப்பட்டிருந்த
மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பூர்ணிமா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது. இந்த வழக்கில் இரண்டு நீதிபதிகளும் தனித்தனி உத்தரவுகளைமப் பிறப்பித்தனர். நீதிபதி பூர்ணிமா பிறப்பித்த உத்தரவில், “மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கீழவளவு பகுதியில் ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனம் கிரானைட் கற்களை வெட்டி எடுக்க 20 ஆண்டுகள் குத்தகைக்கு கடந்த 2008-ஆம் ஆண்டில் அனுமதி பெற்றுள்ளததன்படி அங்குள்ள நிலங்களை குத்தகைக்கு எடுத்து கிரானைட் குவாரிகளை அமைத்து செயல்படுத்தியுள்ளது.
அந்த நிறுவனம் விதிகளை மீறி ஊழல் செய்து கற்களை வெட்டி எடுத்துள்ளதாக 2011-ஆம் ஆண்டில் புகார்கள் எழுந்ததன் பேரில் அப்போதிருந்த மதுரை மாவட்ட ஆட்சியர் உ.சகாயம் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்ததில் அந்த நிறுவனம் கற்களை வெட்டி எடுத்து ஊழல் செய்து முறைகேடாக எடுத்ததால்
அரசுக்கு ரூபாய்.5 கோடியே 48 லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக முடிவு செய்து ஒலிம்பஸ் கிரானைட் நிறுவன குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக விசாரிக்க மாவட்டத்தில் ஆட்சியர் உ.சகாயம் நியமி
க்கப்பட்டு, சுரங்க ஊழலை தடுக்கும் பரிந்துரைகளுடன் அறிக்கையும் தாக்கல் செய்தார். இதேபோல கனிமவளத்துறை அலுவலர் மோகன்தாஸ் சீராய்வு ஆய்வு செய்ததில், ஒலிம்பஸ் நிறுவனம் சட்டவிரோதமாக ரூபாய்.256 கோடியே 44 லட்சம் மதிப்புள்ள மலை சார்ந்த கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததாக தெரிவித்துள்ளதன் பேரில் மனுதாரர் உள்ளிட்டோர் மீது இந்திய வெடிபொருள் சட்டம், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத நடவடிக்கை மூலம் பெற்ற பணத்தை வைத்து பல்வேறு முதலீடுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும், மேற்கண்ட குற்றச்சாட்டுகளுக்கு தேவையான ஆதாரங்கள் இருப்பதாகவும் அமலாக்கத் துறை தெரிவிக்கிறது. அமலாக்கத் துறை உயர் அலுவலர்கள் கூறியதைப் போல மனுதாரர் உள்ளிட்டடோர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாக இந்த நீதிமன்றம் கருதுகிறது. எனவே மனுதாரர் தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுக்கள் அணைத்தும் தள்ளுபடி செய்யப்படுகிறது” என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
அதேவேளையில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், “சக நீதிபதி பிறப்பித்த உத்தரவை நான் பரிசீலித்தேன். இந்த வழக்கில் அவர் எடுத்த முடிவை தவறானவை என நான் ஒருபோதும் கூறமாட்டேன். ஆனால், பண மோசடி சட்டத்தின் கீழ் மனுதாரர் மீது தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளை விசாரணை நீதிமன்றம் முறையாக பரிசீலித்ததாகத் தோன்றவில்லை. எனவே, மனுதாரர் மனு மீது விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன்.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நீதிமன்றம் மீண்டும் முறையாக விசாரிக்க வேண்டும்,” என இந்த வழக்கில் இரண்டு நீதிபதிகள் ஊழல் நடவடிக்கைகள் உள்ளதை ஏற்று மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். ஆனால் இரண்டும் ஒன்று தான் நேர்மையான தீர்ப்பு என்பதே இதில் ஒரு முன் பார்வை: அப்போது இருந்த மாவட்ட ஆட்சியர் உ.சகாயம்
கொடுத்த ஆய்வு அறிக்கையில், அரசின் கருவூலத்திற்கு இழப்பு ரூபாய் .65,154.60 கோடி என மதிப்பிட்டார். மீட்புக்கு அபராதம் விதிக்கப்பட்டால், அந்தத் தொகை சுமார் ரூபாய் .1.06 லட்சம் கோடியாக இருக்கும் எனக் குறிப்பிட்டார். ”கணக்குகள். சரிபார்த்தல் நடந்த நிலையில்
2013 ஆம் ஆண்டில், தனது. ஊழல் கண்டுபிடிப்புகளை அறிக்கையாக அரசாங்கத்திடம் சமர்ப்பித்தார், அதற்கு ஊழல் அரசியல் வாதிகள் கொடுத்த பரிசு உடனடியாக சென்னைக்கு பணி மாற்றப்பட்டார். பின்னர், சென்னை உயர்நீதிமன்றம் -ஒரு பொதுநல மனுவில் வழங்கிய உத்தரவில் இந்த மோசடி குறித்து விசாரிக்க விசாரணைக் ஆணையாளராக உசகாயத்தை நியமித்தது.
சென்னை உயர்நீதிமன்றம் கிரானைட் முறைகேடுகளை ஆய்வு செய்ய அமைத்த ஆய்வுக் குழு சட்ட ஆணையர் உ. சகாயம் இஆப என நியமனம் செய்யப்பட்ட நிலையில் இன்று, மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிரானைட் சுரங்கமானது மெய்நிகர் நிறுத்தத்திற்கு வந்துள்ளது, இதில் உசிலம்பட்டி அருகே பிராதுக்காரன்பட்டி பி.ஆர்.பழனிச்சாமிக்கு மேலூர் நீதிமன்றத்தில் ஊழல் செய்து அப்போது ஜாமீன் வழங்கிய மகேந்திர பூபதி என்ற நீதித்துறை நடுவர் பணி நீக்கம் செய்தது சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை குற்றவாளிக்கு தொழில்துறையில் பல முக்கியமானவர்கள் என பார்க்கப்படும் நபர்கள் அரசியல் வாதிகள் கிரிமினல் குற்றம் செய்த நிலையில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.
தனது அறிக்கையில், 2012-13 ஆம் ஆண்டில் மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் மற்றும் சுரங்கங்கள் மற்றும் தாதுக்கள் துறைகள் மற்றும் தனியார் சுரங்க நிறுவனங்களுக்கு எதிராக 98 முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்தது. இவர்களில் ஒலிம்பஸ் கிரானைட்டும் அடங்குவர், இதில் துரை தயாநிதி - அவரது தந்தை எம்.கே.அழகிரி அப்போதைய மத்திய இரசாயனங்கள் மற்றும் உரங்களுக்கான மத்திய அமைச்சர் மற்றும் பி.ஆர். பழனிச்சாமி மற்றும் சிந்து கிரானைட்டுகளுக்கு சொந்தமான பிஆர்பி ஏற்றுமதி நிறுவனங்கள் அடங்கும். கனிம மாஃபியாக்கள் பிடியில் தமிழ்நாடு சிக்கிய நிலையில்
தமிழ்நாட்டின் ஊழல் அவலம் பொது வெளியில் பேசப்படுகிறது.
தற்போது 02-05-2025 கிரானைட் முறைகேடுகளை வெளிக் கொண்டு வந்த, ஓய்வு பெற்ற உ.சகாயம் இஆப அவர்களுக்கு பாதுகாப்பு விலக்கப்பட்டது
பேசுபொருள். அவருக்கு நாமக்கல், மதுரை மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியராகவும். பல்வேறு துறைகளில் உயர் அலுவலராகவும் பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அலுவலர் உ.சகாயம்.
இவர், மதுரை மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய காலத்தில் கிரானைட் குவாரி ஊழலை வெளிப்படுத்தினார். அதையடுத்து, 2014-ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கிரானைட் முறைகேடுகள் குறித்து விசாரித்த சகாயம், 2015- ஆம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த நிலையில்
கிரானைட் குவாரி ஊழல் வழக்கு ஒருபக்கம் மதுரை நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வாறான சூழலில், இவ்வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சகாயத்துக்கு மதுரை நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், தமிழ்நாடு அரசு தனக்கு வழங்கியிருந்த பாதுகாப்பை விலக்கிக் கொண்டதால், மதுரை வந்தால் தன்னுடைய உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்று குறிப்பிட்டு நீதிமன்றத்தில் அவர் ஆஜராகவில்லை.
அது தொடர்பாக, அரசு வழக்கறிஞருக்கு உ.சகாயம், தனக்கு பாதுகாப்பைத் திரும்பப்பெற்றது தவறு என்றும், கிரானைட் குவாரி முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் கடந்த கால செயல்பாடுகளைக் கருத்தில் கொள்ளாமல், தனக்கு அரசு கொடுத்த பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டிருக்கிறதென்றும், அதனால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் நீதிமன்றத்தில் ஆஜராக வாய்ப்பில்லை என்றும் கடிதம் எழுதியிருக்கிறார்இந்த நிலையில், யாருக்குப் பாதுகாப்பு அளிப்பது என்பது பற்றி உளவுத்துறை, காவல்துறையுடன் ஆலோசித்து உள்துறை முடிவெடுக்கும் என்றும், உ.சகாயத்துக்குப் பாதுகாப்பு அளிப்பது பற்றி பரிசீலனை செய்யப்படும் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் விளக்கமளித்திருக்கிறது. முடியும் வரை பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை.ஊழல் மோசடி உசிலம்பட்டி அருகில் உள்ள பிராதுக்காரன்பட்டியைச் சேர்ந்த பிஆர்பி எனும் இயற்கை வளத் திருட்டு செய்த பழனிச்சாமி எனும் சுரங்கத் தொழில் அதிபருக்கு ஆதரவாக லஞ்சம் பெற்ற பின்னர் தீர்ப்பளித்த மேலூர் நீதித்துறை மாஜிஸ்திரேட் மகேந்திர பூபதி என்ற நபர் அப்போதே பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
சுரங்க வழக்குகளில் உயர்நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றத் தவறியதற்காக மகேந்திர பூபதியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.என். பிரகாஷ் முதன்முதலில் கண்டித்தார், மேலும் நீதித்துறையின் அடிப்படை ஒழுக்கங்களை மீறியதற்காக அவமதிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டார்.உயர்நீதிமன்ற வட்டாரங்களின் படி, மேலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சட்டவிரோத சுரங்கம் காரணமாக குறைந்தது 74 நீர் தொட்டிகள் மற்றும் கால்வாய்கள் பல ஆண்டுகளாக அழிக்கப்பட்டுள்ளன, அங்கு இந்த PRP சுமார் 6,000 ஏக்கர் நிலங்களை ஆக்கிரமித்துள்ளது.மேலூரில் உள்ள ஒரு நீதித்துறை நடுவர், பிஆர்பி கிரானைட்ஸின் சுரங்க அதிபர் பிஆர் பழனிச்சாமி மற்றும் இரண்டு பேருக்கு ஆதரவாக உத்தரவு பிறப்பித்த மூன்று நாட்களுக்குப் பிறகு, சென்னை உயர் நீதிமன்றம் இடைநீக்கம் செய்தது இப்போது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்