மீன்பிடித் துறையை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்த கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கினார்
மீன்பிடித் துறையை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்த கூட்டத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தலைமை தாங்கினார். "இந்தத் துறைக்கு நாங்கள் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறோம், மேலும் இந்தத் துறை தொடர்பான உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், நமது மீனவர்களுக்கு கடன் மற்றும் சந்தைகளுக்கான அதிக அணுகலை உறுதி செய்யவும் விரிவாகப் பணியாற்றியுள்ளோம்" என்று திரு. மோடி மேலும் கூறினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:
"மீன்பிடித் துறையை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஆலோசிப்பதற்காக ஒரு கூட்டத்தை நடத்தினோம். இந்தத் துறைக்கு நாங்கள் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறோம், மேலும் இந்தத் துறை தொடர்பான உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், நமது மீனவர்களுக்குக் கடன் மற்றும் சந்தைகளுக்கான அதிக அணுகலை உறுதி செய்யவும் விரிவாகப் பணியாற்றியுள்ளோம். இன்றைய கூட்டத்தில் ஏற்றுமதியை எவ்வாறு மேம்படுத்துவது மற்றும் ஆழ்கடல் மீன்பிடித்தலில் கவனம் செலுத்துவது குறித்த கருத்துக்கள் பரிமாறி கொள்ளப்பட்டன."
கருத்துகள்