டாஸ்மாக் ஊழல் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக்கில் ரூபாய்.1000 கோடி முறைகேடு நடந்துள்ளது தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய வழக்கில், மத்திய மாநில அரசுகள், சிபிஐ, அமலாக்கத் துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில்
WP 18248/2025. WP. 18374/2025 வழக்கில் பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர்
K.வெங்கடாஜலபதி @ குட்டி
சார்பில் வழக்கறிஞர் V.R.சண்முகநாதன்ஆஜராகிய நிலையில் எதிர் தரப்பினர்
1) THE UNION OF INDIA
2) THE STATE OF TAMIL NADU
3) THE DIRECTOR GENERAL OF POLICE
4) CENTRAL BUREAU OF INVESTIGATION
5) TAMIL NADU STATE MARKETING CORPROAITON LIMITED (TASMAC)
6) DIRECTOR
7) DIRECTORATE OF ENFORCEMENT
8) THE JOINT DIRECTOR சேர்க்கப்பட்ட நிலையில்
பொதுநல மனுவில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை அதிகவிலைக்கு விற்பனை செய்தது, பார் உரிமம் வழங்கியது உள்ளிட்டவற்றில் ஆயிரம் கோடி ரூபாய் அளவில் ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் கூறப்பட்டது தொடர்பாக, 2017 முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத் துறையினர், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் சோதனை நடத்தினர். இந்நிலையில், இந்த முறைகேடுகள் தொடர்பாக டாஸ்மாக் மற்றும் அதன் உயர் அலுவலர்களுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். அமலாக்கத் துறை விசாரணையை முடக்கும் நோக்கில் மாநில அரசு செயல்படுகிறது.
ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு வழக்கை நியாயமாகவும், எந்த இடையூறும் இன்றி விசாரிக்க வேண்டும் என்பதால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். டாஸ்மாக் அலுவலர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை விசாரிக்க மாநில அரசுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள், சிபிஐ, அமலாக்கத் துறை, டாஸ்மாக் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர். இந்த நிலையில் டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகன் வீட்டில் சோதனை நடத்தினர் அவர் தற்போது அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் உள்ளார்
ஆதோடு ஒரே நேரத்தில், ரூபாய் 500 கோடி மேல் முதலீடு செய்து, நடிகர்கள் தனுஷ், சிலம்பரசன், சிவகார்த்திகேயன், அதர்வா ஆகியோர் நடிப்பில் உருவா படங்களை தயாரித்தவரும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் நெருங்கிய உறவினருமான ஆகாஷ் என்பவர் வீட்டில், சட்ட விரோதப் பணப்பரிமாற்றம் தொடர்பாக, அமலாக்கத்துறை அலுவவர்கள் சோதனை நடத்தினர்.சேலம் மாவட்ட தொழில் அதிபர் பாஸ்கரன். அவரது மகன் ஆகாஷ். இவர், 'டான் பிக்சர்ஸ்' என்ற நிறுவனம் மூலமாக, சினிமா திரைப்படங்களைத் தயாரித்து வருகிறார். ஒரே நேரத்தில், ரூபாய் 500 கோடி மேல் முதலீடு செய்து, தனுஷ் நடிப்பில், இட்லி கடை சிவகார்த்திகேயன் நடிப்பில், பராசக்தி அதர்வா நடிப்பில், இதயம் முரளி மற்றும் சிம்பு நடிக்கும் ஒரு படத்தையும் தயாரித்து வருகிறார். குறுகிய காலத்தில், தமிழ் சினிமாவில் கோலோச்சி வரும் ஆகாஷின் அபார வளர்ச்சி, தமிழ் திரையுலக வட்டாரத்தையே பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. மறைந்த தி.மு.க., தலைவர் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் மகள் தேன்மொழியை, கடலுாரைச் சேர்ந்த தொழில் அதிபரும், 'கவின்கேர்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான சி.கே.ரங்கநாதன் திருமணம் செய்துள்ளார். இவர்களின் இரண்டாவது மகள் தாரணி. அவரது கணவர் தான் இந்த ஆகாஷ் என்ற நபர்
முதல்வர் மு.க.ஸ்டாலினின் நெருங்கிய உறவினரான ஆகாஷ், தாரணி ஆகியோர், சென்னை தேனாம்பேட்டையில், கே.பி.என்.தாசன் சாலையில் உள்ள அடுக்குமாடிகா குடியிருப்பில் வசித்து வருகின்றனர். சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஆகாஷ் ஈடுபட்டு வருவதாக, அமலாக்கத்துறை அலுவலர்களுக்கு புகார்கள் சென்றன.
அதன் அடிப்படையில், ஆகாஷ் வீட்டில் நேற்று காலை 6:00 மணியிலிருந்து சோதனை நடத்தினர்; முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர். ஆகாஷின் கார் ஓட்டுநரிடமும் விசாரணை நடக்கிறது. தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் கழகத்தில் (TASMAC) நடந்ததாகக் கூறப்படும் ரூபாய் 1,000 கோடி மதுபான 'ஊழல்' தொடர்பாக, சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள உயர் அலுவலர்கள் மற்றும் முக்கியமான தொழிலதிபர்களின் இடங்களில் அமலாக்க இயக்குநரகத்தின் (ED) அலுவலர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (மே மாதம் 16, ஆம் தேதி 2025) ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர் . மத்திய நிறுவனத்தின் பல குழுக்கள் வெள்ளிக்கிழமை அதிகாலை சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள ஒரு உயர் ரகக் குடியிருப்பில் சோதனைகளைத் தொடங்கினர் . தொழிலதிபர் வீட்டில் இல்லாத நிலையில், சோதனைகளைத் தொடர்ந்தனர் மற்றும் அதே வளாகத்தில் அவருக்கோ அவரது கூட்டாளிகளுக்குச் சொந்தமான அடுக்குமாடிக் குடியிருப்புகளின் உரிமை குறித்து விசாரிக்கத் தொடங்கினர். நேற்று மே மாதம் 16-ஆம் தேதி காலை 6:30 மணியளவில், சென்னை மணப்பாக்கத்திலுள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகன் வீட்டில் சோதனையை தொடங்கிய போதே, 'கே ஸ்மார்ட்' நிறுவனத்தின் உரிமையாளர் கேசவன் தொடர்புடைய இடங்களிலும், 'டான் பிக்சர்ஸ்' நிறுவனத்தைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தொடர்புடைய இடங்களிலும் சோதனையைத் தொடங்கியது அமலாக்கத்துறை.
எம்.ஆர்.சி நகரிலுள்ள பிரபலமான அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், ஆட்சி நடத்தும் முதல்வர் குடும்பத்துக்கு மேலிடத்திற்கு மிக நெருக்கமான உறவினர் ஒருவர் வீட்டுக் கதவையும் தட்டியிருக்கிறார்கள். வீட்டில் அந்த நபர் இல்லாததால், சோதனை மட்டும் நடந்து வருகிறது. இப்படி, டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 12 இடங்களில் சோதனையை நடத்தி வருகிறது அமலாக்கத்துறை. டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் விசாகன் ஐ.ஏ.எஸ் வீட்டுக்குள் அதிரடியாகப் புகுந்து சோதனை நடத்தியிருக்கிறது அமலாக்கத்துறை. அதோடு, விசாகனிடம் மேற்கொண்டு விசாரணை நடத்துவதற்காக தங்களுடைய அலுவலகத்திற்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளனர். இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.!
டாஸ்மாக் ஊழல் குறித்த வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்.!
கருத்துகள்