கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் நால்வர் இடமாற்றத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்
உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தபடி, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகள் நால்வரை மற்ற உயர் நீதிமன்றங்களுக்கு மாற்றுவதற்கு மத்திய அரசு கடந்த வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.
உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதியன்று நீதிபதிகள் கிருஷ்ணா தீட்சித், கே நடராஜன், ஹேமந்த் சந்தன்கவுடர் மற்றும் சஞ்சய் கவுடா ஆகியோரை பணி மாற்றம் செய்ய பரிந்துரைத்தது .
இருப்பினும், பெங்களூரு வழக்கறிஞர்கள் சங்கம் (AAB) இந்தப் பரிந்துரைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தது. கர்நாடக மாநில பார் கவுன்சிலும் (KSBC) உச்ச நீதிமன்றக் கொலீஜியத்திடம் அதன் பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொண்டது.
இருப்பினும், இந்த நீதிபதிகளை இடமாற்றம் செய்வதற்கான அறிவிப்புகளை மத்திய அரசு இன்று வெளியிட்டது.
நீதிபதி தீட்சித் ஒடிசா உயர் நீதிமன்றத்திற்கும், நீதிபதி நடராஜன் கேரளா உயர் நீதிமன்றத்திற்கும், நீதிபதி சந்தன்கவுடர் சென்னை உயர் நீதிமன்றத்திற்கும், நீதிபதி கவுடா குஜராத் உயர் நீதிமன்றத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின்படி, நீதிபதிகளை இடமாற்றம் செய்யும் முடிவு "உயர் நீதிமன்றங்களின் மட்டத்தில் உள்ளடக்கம் மற்றும் பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதற்கும் நீதி நிர்வாகத்தின் தரத்தை வலுப்படுத்துவதற்கும்" எடுக்கப்பட்டது .
கருத்துகள்