லண்டன் நீதிமன்றத்தில் நிரவ் மோடியின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.
இந்தியாவின் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூபாய்.13,000 கோடி கடன் பெற்று மோசடி செய்த குஜராத் மாநிலத்தின் வைர வியாபாரி நீரவ் மோடி இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். அவரை நாடு கடத்த இந்தியாவின் புலனாய்வு அமைப்புகள் தொடர்ந்து சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 2019 ஆம் ஆண்டில்
கைது செய்யப்பட்ட நீரவ் மோடி தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி நீரவ் மோடி தாக்கல் செய்த மனு லண்டன் உயர் நீதிமன்றத்தில் நேற்று நிராகரிக்கப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து நீரவ் மோடி தற்போது 10 வது ஜாமீன் மனுவை தாக்கல் செய்த நிலையில் தற்போது நிராகரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்