'ஐகான்' சினி கிரியேஷன்ஸ் தயாரித்து, இயக்குனர் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கிய ' மையல் ' திரைப்படத்தில்
'மைனா' சேது கதாநாயகனாகவும், சம்ரிதி தாரா கதாநாயகியாகவும், பி.எல்.தேனப்பன், காலஞ்சென்ற சூப்பர் குட் சுப்பிரமணி, ரத்தின கலா, ஆர்.பி.பாலா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். திரைப்படத்தை நேரில் கண்டு எழுதும் 'பப்ளிக் ஜஸ்டிஸ்' திரை விமர்சனக் குழுவினரின் விமர்சனப் பார்வையில்: குமரி மாவட்டம் விளவங்கோடு பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் கதை.வசனம், திரைக்கதை வடிவத்தின் படி மலைக்கிராம வயல்வெளியில் கிடை போடப்பட்ட ஆட்டுத் தொழுவம் அந்த மலை நிலத்தில் இரவில் ஆடு திருடி கசாப்புக்கடைகளில் விற்பனை செய்யும் இரண்டாம் தலைமுறைத் திருடனாக நடிகர் மைனா சேது அறிமுகமாகிறார்.
மலைக் கிராமத்தில் ஆடு திருடும் போது கிராமத்து இளைஞர்கள் சிலர் துரத்த பயந்து தப்பிக்கப் பார்க்குவே பாழடைந்த கிணற்றில் குதிக்கிறார், அவர் வந்த மோட்டார் சைக்கிள் பிடிபடும் நிலையில் கதாநாயகி சம்ரிதி தாராவால் காப்பாற்றப்படுகிறார், அன்றிரவு அதே ஊரில் வேறு பகுதியில் வில்லனாக வரும் பி.எல்.தேனப்பன் உறவினரின் சொத்துக்கு ஆசைப்பட்டு வாரிசில்லாத அவரது சித்தப்பாவையே தன் அடியாட்களால் கொலை செய்கிறார், அந்த கொலை வழக்கையும், ஆடு திருடு போன வழக்கையும் லஞ்ச லாவண்ய ஊழல் மோசடி செய்து வாழும் காவல்துறை ஆய்வாளராக நடிகர் ஆர்.பி.பாலா மற்றும் ஒரு வில்லனாக வழக்கை விசாரிக்கிறார்.
கிராம மக்களால் ஒதுக்கப்பட்டு மலைக் காட்டில் தனியாக வாழும் சூனியம் செய்வதாக ஊரை நம்ப வைத்து பேத்தியுடன், தனித்து பாதுகாப்பாக வாழும் பாட்டியாக வரும் ரத்தின கலாவின் பேத்தியாக அறிமுகக் கதாநாயகியாக வந்து நடிப்பில் அற்புதம் காட்டும் சம்ரிதி தாரா, கிணற்றில் விழுந்த சேதுவைக் காப்பாற்றிய போது இயக்குனரின் கைவண்ணம் தெரிகிறது. எருமைகளைப் பூட்டி நீர் பாய்ச்சும் கமலைக்கிணற்றில் இழுப்பதும், தன் வீட்டில் மருத்துவம் செய்து அடைக்கலம் கொடுத்ததோடு, சேது மீது சம்ரிதி தாரா காதலாக அவர் பாட்டி திருடன் என்பதால் எதிர்ப்புத் தெரிவிக்கிறார். அந்த ஊவிலிருந்து சேதுவை அவர் சொந்த ஊருக்கு பாதுகாப்பாக வழியனுப்புகிறார். சம்ரிதி தாரா, சேதுவை பிரிந்ததில் மையல் கொண்டு தவிக்கிறார்.
இந்த நிலையில் காவல்துறை ஆய்வாளரான ஆர்.பி. பல லட்சம் பணம் பேரம் பேசி கொலை செய்த பாலா, தேனப்பன் அடியாட்களில் ஒருவரை காவல்துறை என்கவுண்டர் செய்ய வைக்கும் வில்லன் நடிகர் தேனப்பனைக் காணும் போது ஏதோ மில்டரி ஹோட்டல் கேஷியர் போலவே தெரிகிறார். வில்லன் வேடத்தில் பொருந்தவில்லை.
ஊருக்கு வந்த சேதுவை சொந்த ஊர் காவலர்கள் விசாரணைக்கு அழைத்துச் செல்கின்றனர். பின்னர் விசாரணை முடிந்து வெளியே வரும் சேது திருமணத்துக்கு பிறகு காவல்துறை தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக திருந்தி வாழ நினைத்து, ஊரிலிருந்து தனது வீட்டை விற்பனை செய்து காதலியைத் திருமணம் செய்து கொள்வதற்காக நகை, தாலி, புடவையுடன் காதலியின் கிராமத்துக்கு வருகிறார். அந்த நேரத்தில் அங்கு லஞ்சப் பணம் பெற்ற திட்டத்தின் படி என்கவுண்டர் செய்த காவல்துறை ஆய்வாளர் குழு மற்றொருவரைத் தேடுகின்றனர். அதே நேரத்தில் வந்து சேரும் சேது சந்தேகத்தின் பேரில் கொலையாளியாக சிக்க வைக்கும் நிலையில்,.
அதன் பின் நடந்தது என்ன? காவல் ஆய்வாளர் பிடியிலிருந்து சேது விடுதலையானாரா? சேதுவும் சம்ரிதி தாராவுக்கும் திருமணம் நடந்ததா? என்பதே திரைப்படத்தின் கதை.
வயிற்றுப் பிழைப்புக்காக சிறிய திருட்டைச் செய்பவர்கள் எப்படி சில லஞ்ச ஊழல் மோசடிக் காவல்துறையினரால் கொலைக் குற்றவாளியாக மாற்றப்படுகிறார்கள் எனும் எழுத்தாளர் ஜெயமோகன் கதையை அடிப்படையாக வைத்து, அதில் காதலையும் சோகத்தையும் கலந்து தனது பாணியில் சிறப்பாக இயக்கி இருக்கிறார் ஏ.பி.ஜி. ஏழுமலை. அவரே திரைக்கதையும் எழுதி இருக்கலாம், இருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.
ஜெயமோகன் கதை என்பது ஒரு நாவலுக்கு மட்டுமே இங்கு பொருத்தமானதாக உள்ளதில் திருப்பூரைச் சேர்ந்த வேணுகோபால் எனும் தயாரிப்பாளருக்கு இது தான் முதல் படமாக வெளியான நிலையில் அதிகமான திரையரங்குகளில் படம் வெளியிட முடியாதது ஒரு காரணமாகும், ஏன் என்றால் நாம் ஆன்லைன் புக்கிங் மூலம் பார்த்தோம் அப்போது அதை நமது விமர்சனக் குழுவினர் அறிந்தனர். படம் நன்றாக இருந்தும், வெகுஜனங்களைச் சென்றடைய சரியான முயற்சி எடுக்கவில்லை.
திரைக்கதையில் இயக்குனர் பங்கு இல்லை என்பதும் மற்றும் திரைக்கதை எழுதிய ஜெயமோகன் காட்சிகளில் ஒரு தெளிவான பார்வையும் பதியாமல் விறுவிறுப்பாக வர வேண்டிய சில காட்சிகளில் வரவில்லை என்பது படம் பார்க்கும் போதே தெரிகிறது. கிராமத்துப் பின்னணியில் நடக்கும் ஒரு கொலை, ஒரு திருட்டு ஆகிய இரண்டு சம்பவங்களை ஒருசேர நகர்த்திச் சென்று இறுதியில் வண்ணத்துப்பூச்சிகள் மத்தியில் கதாநாயகன் பார்வையில் மையலாக வரும் நாயகி என கதையை திறமையாக இயக்குனர் மாற்றியுள்ளார்.
மிகவும் குறைந்த பட்ஜெட், குறைந்த நாட்களில், நிறைந்த திறமை கொண்ட வகையில் படமாக்கியதன் மூலம் தான் இங்கு பேசு பொருளாக பாராட்டப்பட்டவர் என இயக்குனர் ஏபிஜி. ஏழுமலை தட்டிச் செல்கிறார்.
கதையின் நாயகனாக நடித்துள்ள சேது இயல்பான நடிப்பிலும், அறிமுக நாயகியாக சம்ரிதி தாரா அழகாக வந்து கடினமாகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
கதையின் களம் 1990 ஆம் ஆண்டு கால நிலை போல உள்ளதாக திரையில் சொல்லவில்லை என்றாலும் படம் பார்க்கும் போது நமக்கு அந்த உணர்வு தான் ஏற்படுகிறது.
அந்தாண்டுகளில் தமிழ்த் திரைப்படங்களில் வரும் கதாநாயகி போல தாவணியில் வரும் கதையின் நாயகி கலாச்சாரம் மற்றும் பண்பாட்டுச் சிறப்பாகும். பிரபல இசையமைப்பாளர் சௌந்தர்யனின் மகன் அமர் கீத் இசையமைப்பாளராக அறிமுகமாகி மெலோடியான இசையில் பாடல்கள் கவிஞர்கள் விவேகா, ஏகாதேசி, கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நல்ல பாடல்களைத் தந்துள்ளார். நடன இயக்குனர் இல்லாமல் வரும் காட்சி இயக்குனர் பாரதிராஜாவின் பாணியை இப் படத்தில் கையாண்டுள்ளனர், அதற்கு பாலா பழனியப்பனின் இயற்கையான ஒளிப்பதிவும் கைகொடுக்கிறது, கல்வராயன் மலைக்கிராமத்தின் அழகும் தெரிகிறது. நிறை குறைகளாகக் காணப்படுவது யாதெனில்: சமூகத்தில் ஊழல் நிறைந்த காவல்துறையினர் ஒருவனது வாழ்க்கையில் சுயநலம் காரணமாக ஏற்படும் பாதிப்பு தான் கதை அதில் இடையே ஏற்படும் காதல் மற்றும் மோதல் சம்பவங்களை எழுதிய ஜெயமோகன் திரைக்கதை வடிவம் தர எழுத்தாளர் இன்னும் நல்ல முறையில் முயற்சி செய்திருக்கலாம்.
படத்தின் இயக்குனர் ஏபிஜி ஏழுமலை மைனா, கும்கி போன்ற திரைப்படங்களில் இணை இயக்குனராகப் பணியாற்றியவர்.
அதற்கு முன்னர் காலஞ்சென்ற இயக்குனர் இமயம் கே. பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.
'அகவன்' எனும் தமிழ் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.
மையலை இயக்குனர் ஏ.பி.ஜி. ஏழுமலை சிறப்பாகவே இயங்கிக் கொண்டு சேர்த்திருக்கிறார். இருப்பினும் திரைக்கதையை ஜெய மோகன் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யப்படுத்தி எழுதி இருக்கலாம்.
அதன் காரணமாக இன்னும் கொஞ்சம் உயிரோட்டமாக படத்தை இயக்க வாய்ப்பாக அமைந்திருக்கலாம். திரும்பத் திரும்ப ஒரே காட்சிகளைப் பார்ப்பது போன்ற உணர்வை கதைக்களம் மூலம் திரைப்படம் ஏற்படுத்துகிறது.
உயிருடன் தீ வைத்து எரிக்கும் கொடூரக் குணம் கொண்ட காவலர்கள் என்கிற நிலை தான் மக்களின் வலியும் பாதிப்பும். வயிற்றுப் பிழைக்காக திருடும் ஒரு திருடன் சாமானியக் குற்றவாளி என்ற நிலையில் நீதிமன்றத்தின் பணி இல்லாமல் காவல் அலுவலர் ஒருவர் தானா கதை தீர்வு என்பது எழுவினா?. கதை விவாதம் நடக்கவில்லை போல் தெரிகிறது.
மனிதனை எப்படி ஊழல் காவல் துறை சார்ந்த அதிகாரிகள் பணத்துக்காக கொலைக் குற்றவாளியாக்குகிறார்கள் என்ற கதைக் கருத்தைக் கொண்டு படம் இயக்கியுள்ளார் ஏபிஜி.ஏழுமலை.
பிரபலமான நடிகர்கள் பலம், திரைக்கதை பலம் இல்லாமல் இயக்குனர் தனித் திறமை காரணமாக ரசிகர்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது நிஜம். மேலும் வில்லன் பாத்திரம் ஏற்று நடித்த பி.எல்.தேனப்பன். அதன் தன்மை உணரவில்லை. என்பதும். இதில் வேல ராமமூர்த்தி அல்லது பழ.கருப்பையா போல நடிக்கத் தெரிந்த வில்லனாக இல்லாமல் ஏதோ மில்டரி ஹோட்டல் கல்லாப் பெட்டி நபர் போல ரசிகர்களின் ஈர்ப்பைப் பெறவில்லை என்று தான் கூற வேண்டும். ஆனால் கதாநாயகி தமிழ்நாட்டில் வளம் வருவார் எனலாம். படம் பார்க்கும் யாரும் குறை கூறவில்லை அதுவே வெற்றி தான். பாடலுக்கு இதமாக, சத்யபிரகாஷ் மற்றும் வந்தனா ஸ்ரீனிவாசன் ஆகியோரின் மென்மையான குரல்கள் பாடலின் உணர்வுகளை நம் உள்ளங்களில் அசைபோடும் விதமாக நேரடியாகப் பதிகின்றன.
கவிஞர் ஏகாதேசியின் வரிகள் "என்னடி செஞ்சே... என்னோட நெஞ்சை... கத்துறேன் தூங்கவில்லை. கண்ணாடிச் சில்லா கத்தாலை முல்லா குத்துறே. தங்கவில்லை...
கூடவே நீ இருந்தா கூவுவேன் சேவலாட்டம்.. தேவதை நீ சிரிச்சா தேங்காப்பூத் தூவலாட்டம்
என் தோளில் சாஞ்ச பூ மாலை போல கல்லத்தான் கனி போல மாத்திடு போகுரா..... களவாணிப் பயலே உன்னோட மொழியா சோழியை நெனைச்சி உருட்டுறேன்..
மாறாப்பு தெரியாமல் பாத்துகிறேன் ஆனாலும் அடியாளா சேர்த்துக்கிட்டே...
உன் மீசை உரசாம யோகமில்லை.. எப்போ உடைபாபாயோ மோகமுல்லை.... மூக்குத்திப் பூவையும் மொய்கிற வண்டென சுத்துறேன் எப்போவும் உன் கூடவே .. மயக்கம் கண்ணுல தங்கிடவே..
என்னடி செஞ்சே.. என்னோட நெஞ்சை கத்துறேன் தூங்கவில்லை".. படம் முடிந்த பின்னும் பாடல் ரிதம் இதமாக ஒலிக்கிறது. கிளைமேக்ஸ் வெளியே வரும் போது இதயம் கணக்கிறது.
கருத்துகள்