மேட்டூர் காவிரி அணையின் நீர் மட்டம் 118 அடியை எட்டியதால்
அணையிலிருந்து எந்த நேரத்திலும் நொடிக்கு 50000 முதல் 75000 கன அடி வரை தண்ணீர் திறந்து விடப்படலாம் என அறிவித்துள்ள நிலையில் காவிரிக் கரையோரம் உள்ள நான்கு மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.கர்நாடகா மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரளா மாநிலம் வயநாட்டிலும் கனமழை பெய்கிறது. அதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ண ராஷுசாகர் அணைகள் நிரம்பியதால் இரண்டு அணைகளிலிருந்தும் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் 25- ஆம் தேதி 45 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் 26- ஆம் தேதி காலை 60 ஆயிரம் கன அடியாகவும், நேற்றிரவு 8 மணியளவில் 85 ஆயிரம் கன அடியாகவும் அதிகரித்தது.
இரவு 8 மணி நிலவரப்படி கபினி மற்றும் கிருஷ்ணா ராஷு சாகர் ஆகிய இரண்டு அணைகளிலிருந்தும் விநாடிக்கு 86 ஆயிரத்து 800 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி இரண்டு அணைகளிலிருந்தும் நீர்வரத்து குறைந்து வினாடிக்கு 58 கன அடி தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
இதனால் அங்குள்ள மெயினருவி மற்றும் ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளை மூழ்கடித்தவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது. அருவிகளில் குளிக்கவும், பரிசல்களை இயக்கவும் விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது. அப்பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுற்றுலாப் பயணிகளை திருப்பி அனுப்பி வருகின்றனர்.
மேட்டூர் அணைக்கு நேற்று நீர்வரத்து 80 ஆயிரத்து 984 கன அடியில் இருந்து 68 ஆயிரமாக குறைந்தது. மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 120 அடியாக உள்ளது. முழுமையாக கொள்ளளவை 120 அடியை எட்டி உள்ளதால் இன்று காலை உபரி நீர் வெளியேறும் 16 கண் மதகிலிருந்து தண்ணீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதனால், காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நீர் பாசனம் பெறும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அணை உபகோட்ட உதவி பொறியாளர் அறிவுறுத்தியுள்ளார்.
சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள வெள்ள கட்டுப்பாட்டு அறையில், நீர்வளத்துறை அதிகாரிகள் முகாமிட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். உபரி நீர் வெளியேறும் மதகுப்பகுதியில் ஷிப்ட் முறையில் பணியாளர்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். காவிரி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அதற்கேற்ப மதகுகளை இயக்குவதற்கு பணியாளர்கள் தயாராக உள்ளனர். இந்த நிலையில் அரசு நீர் வளத்துறை சார்பில் மேட்டூர் காவிரி அணையின் நீர் மட்டம் 118 அடியை எட்டியதால் அணையிலிருந்து எந்த நேரத்திலும் நொடிக்கு 50000 முதல் 75000 கன அடி வரை தண்ணீர் திறந்து விடப்படலாம் என அறிவித்துள்ள நிலையில் காவிரிக் கரையோரம் உள்ள நான்கு மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.கர்நாடகா மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரளா மாநிலம் வயநாட்டிலும் கனமழை பெய்கிறது. அதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ண ராஷுசாகர் அணைகள் நிரம்பியதால் இரண்டு அணைகளிலிருந்தும் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் 25- ஆம் தேதி 45 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் 26- ஆம் தேதி காலை 60 ஆயிரம் கன அடியாகவும், நேற்றிரவு 8 மணியளவில் 85 ஆயிரம் கன அடியாகவும் அதிகரித்தது.
இரவு 8 மணி நிலவரப்படி கபினி மற்றும் கிருஷ்ணா ராஷு சாகர் ஆகிய இரண்டு அணைகளிலிருந்தும் விநாடிக்கு 86 ஆயிரத்து 800 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி இரண்டு அணைகளிலிருந்தும் நீர்வரத்து குறைந்து வினாடிக்கு 58 கன அடி தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
இதனால் அங்குள்ள மெயினருவி மற்றும் ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளை மூழ்கடித்தவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது. அருவிகளில் குளிக்கவும், பரிசல்களை இயக்கவும் விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது. அப்பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுற்றுலாப் பயணிகளை திருப்பி அனுப்பி வருகின்றனர்.
மேட்டூர் அணைக்கு நேற்று நீர்வரத்து 80 ஆயிரத்து 984 கன அடியில் இருந்து 68 ஆயிரமாக குறைந்தது. மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 120 அடியாக உள்ளது. முழுமையாக கொள்ளளவை 120 அடியை எட்டி உள்ளதால் இன்று காலை உபரி நீர் வெளியேறும் 16 கண் மதகிலிருந்து தண்ணீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதனால், காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நீர் பாசனம் பெறும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அணை உபகோட்ட உதவி பொறியாளர் அறிவுறுத்தியுள்ளார்.
சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள வெள்ள கட்டுப்பாட்டு அறையில், நீர்வளத்துறை அதிகாரிகள் முகாமிட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். உபரி நீர் வெளியேறும் மதகுப்பகுதியில் ஷிப்ட் முறையில் பணியாளர்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். காவிரி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அதற்கேற்ப மதகுகளை இயக்குவதற்கு பணியாளர்கள் தயாராக உள்ளனர். எனத் தெரிவிக்கிறது
கருத்துகள்