அதிமுக முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தை கொல்ல முயன்றதாக பாமகவினர் மீது
தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பை ஜுன் மாதம் 16 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து திண்டிவனம் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் 2010 ஆம் ஆண்டில் திண்டிவனத்தில் அவரது வீட்டில் கட்சியினருடன்
பேசிக்கொண்டிருந்தபோது அங்கு ஆயுதங்களுடன் வந்த ஒரு கும்பல் அவரைத் தாக்கி கொல்ல முயற்சி செய்தது. காருக்கு அடியில் புகுந்து அவர் உயிர் தப்பினார். ஆனால் அவரது உறவினரும், அதிமுக தொண்டருமான முருகானந்தம் கொல்லப்பட்டார்.இந்தக் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு தொடர்பாக பாமகவைச் சேர்ந்த 20 பேர் மீது ரோஷணை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது ரோஷனை காவல் நிலையத்தில்
சி.பி.ஐ. தரப்பில் விசாரணை நடத்தி பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸின் தம்பி சீனுவாசன், அப்போதைய பா.ம.க. வேட்பாளர் என்.எம்.கருணாநிதி உள்ளிட்ட 11 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் பா.ம.க-வைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தன்ராஜ், வானூர் முன்னாள் ஒன்றிய செயலாளர் சிவக்குமார் ஆகியோரை சி.பி.ஐ. கைது செய்தது. சி.வி.சண்முகத்தின் உறவினர் முருகானந்தம் மே மாதம் 8 ஆம் தேதி 2006 ஆம் ஆண்டு திண்டிவனத்தில் முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தை தாக்க முயன்ற போது ஆயுதம் ஏந்திய கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக பிரமுகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகனும் ஆன முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி. சண்முகத்தைக் காப்பாற்ற முயன்ற முருகானந்தம் உயிரிழந்தார். சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டதைத்தொடர்ந்து, 21.11.2014 ஆம் தேதி திண்டிவனம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பாமகவினர் 20 பேர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் 5 பேர் வழக்கு நடக்கும் போது இறந்து விட்டனர். மீதமுள்ள 15 பேர் மீது நீதிமன்ற விசாரணை நடைபெற்று வந்தது. 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வழக்கு விசாரணை நிறைவடைந்தது. ஜூன் மாதம் 12 ஆம் தேதி தீர்ப்பு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் திண்டிவனம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி முகம்மது பாரூக், தீர்ப்பு தேதியை ஜூன் மாதம் 16 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
கருத்துகள்