தமிழ்நாடு முழுவதும் 18 ஐ.பி.எஸ். உயர் அலுவலர்கள் பணியிட மாற்றம் தமிழ்நாட்டில் 15 காவல் உயர் அலுவலர்கள் பணியிட மாற்றம்; 3 ஐபிஎஸ் உயர் அலுவலர்களுக்கு பணி உயர்வு
கடலோரப் பாதுகாப்பு குழும டிஐஜி ஜெயந்தி சென்னை காவல் தொழில்நுட்ப பிரிவு டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டார்.
சேலம் சரக டிஐஜி உமா விழுப்புரம் சரகத்தின் டிஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் 18 ஐ.பி.எஸ். அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டள்ளனர். 3 பேருக்கு பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது
சென்னை தலைமையக டிஐஜி மகேஷ்குமார் தமிழ்நாடு கடலோரப் பாதுகாப்புக் குழும டிஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கடலோரப் பாதுகாப்புக் குழும டிஐஜி ஜெயந்தி சென்னை காவல் தொழில்நுட்ப பிரிவு டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நாகப்பட்டினம் காவல்துறை கண்காணிப்பாளர் அருண் கபிலன் சென்னை தலைமையக துணை ஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
குடிமைப் பொருள் வழங்கல் துறை மதுரை மண்டல காவல்துறைக் கண்காணிப்பாளர் செல்வகுமார், நாகப்பட்டினம் மாவட்டத்தில் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புர சரக டிஐஜி திஷா மிட்டல் சென்னை மேற்கு மண்டல இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் சரக டிஐஜி உமா விழுப்புரம் சரக டிஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தாம்பரம் மத்தியக் குற்றப் பிரிவு துணை ஆணையர் பிரபாகர் சென்னை சைபர் கிரைம் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தேனி கூடுதல் கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்யா பதவி உயர்வு பெற்று சேலம் நகர் தெற்கு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் குளச்சல் கூடுதல் கண்காணிப்பாளர் சாமுவேல் பிரவீன் கவுதம் திருப்பூர் நகர் வடக்கு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நாங்குநேரி கூடுதல கண்காணிப்பாளர் பிரசன்னா குமார் பதவி உயர்வு பெற்று திருநெல்வேலி மேற்கு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கருத்துகள்