பட்டா நிலத்தின் நடுவிலிருந்த மின்கம்பத்தை ஓரமாக மாற்றித் தர ரூபாய். 20 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின்வாரிய செயற்பொறியாளரை
கோயம்புத்தூர் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்பிரபு (வயது36).மென்பொருள் பொறியாளர். தந்தை கருப்பசாமிக்கு சொந்தமாக கோயமுத்தூர் மாவட்டம் நீலம்பூர் கிராமம் முதலிப்பாளையம் பகுதியில் 99 சென்ட் நிலம் உள்ளதன் நடுவில் மின்கம்பம் ஒன்று நிலத்தில் ஆரம்ப காலத்தில் இல்லாமல் பிற்காலத்தில் இருந்ததனையறிந்த செந்தில்குமார், மே மாதம் குரும்பபாளையம் மின்சார வாரிய அலுவலகத்திற்கு நேரில் சென்று அலுவலர்களை அணுகி, நிலத்தின் நடுவிலிருக்கும் மின்கம்பத்தை இடமாற்றம் செய்யக் கோரிக்கை விடுத்தார். நிலத்தில் இருந்து மாற்றுவதற்கு ரூபாய்.50 ஆயிரத்திற்கு மேலாகச் செலவாகும் என்பதால், இறுதி முடிவை செயற் பொறியாளர் தான் எடுக்க வேண்டும் என உதவிப் பொறியாளர் தெரிவித்தனர். அதனையடுத்து சோமனூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் சபரிராஜன் (வயது 57) ஐ கடந்த 9 ஆம் தேதி அணுகிய செந்தில்குமார் நிலத்தில் இருந்து மின் கம்பம் மாற்ற அனுமதி கோரினார். தொடர்ந்து கருப்பசாமியை தொடர்பு கொண்ட மின்வாரிய அலுவலர்கள் மின்கம்பத்தை மாற்றுவதற்கு ரூபாய்.20 ஆயிரம் லஞ்சமாகக் கேட்டனர்.
நேற்று அலுவலர் செந்தில்குமாரும், கருப்பசாமியும் சந்தித்தனர். அப்போது நேற்று வந்து லஞ்சப்பணத்தை தரும்படி கேட்டனர். அது குறித்து இருவரும் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்சஒழிப்புத் துறையில் புகார் அளித்தனர். அவர்கள் அறிவுரைப்படி, நேற்று அவர்கள் சோமனூர் சென்று, செயற்பொறியாளர் சபரிராஜனை சந்தித்தனர். அப்போது இடமாற்றம் குறித்து கேட்டனர். அதற்கு ஒரு வாரத்தில் மின்கம்பத்தை மாற்றுவதாக சபரிராஜன் உறுதியளித்தார். இதனையடுத்து இருவரும் ரூபாய்.20 ஆயிரம் பினாப்தலீன் ரசாயனப் பொடி தடவியதை அரசு சாட்சிகள் முன்னிலையில் லஞ்சப்பணத்தை கொடுத்தனர் அதனை வாங்கி மேஜையில் வைத்தார்.
பிறகு, தந்தையும், மகனும் மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து ஆய்வு செய்த போது சபரிராஜன் லஞ்சம் வாங்கியது உறுதியானது. அவரிடமிருந்து லஞ்சப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சபரி ராஜன் கைது செய்யப்ட்டு விசாரணை முடிவில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் சேர்த்தனர்.
கருத்துகள்