தேசத் துரோக வழக்கில் விதிக்கப்பட்ட ஓராண்டு காலத் தண்டனையை எதிர்த்து மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ
தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணையை ஜூன் மாதம் 27 ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்தது. 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் தேதி, 'நான் குற்றம் சாட்டுகிறேன்' எனும் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய மதிமுகவின் பொதுச் செயலாளர்வைகோ, தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பை ஆதரித்தும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக, தேசத்துரோகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் வைகோவுக்கு எதிராக சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட வழக்கில் அப்போது கைது செய்யப்பட்ட வைகோ பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். தேசத் துரோக வழக்கு காரணமாக அவரது கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்) முடக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்றம், கடந்த 2019 ஆம் ஆண்டு வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அராதம் விதித்தது. இந்த வழக்கில் வைகோ இந்த வழக்கில் அவ்வப்போது நீதிமன்றத்தில் ஆஜராகி வந்த நிலையில் விசாரணை முடிவில்
1 ஆண்டு காலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது வைகோ செய்த மேல்முறையீடு விசாரணைக்கு ஏற்று வழக்கில் இறுதி விசாரணைக்கு தேதி குறித்தது இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் தேசத் துரோக வழக்கில் விதிக்கப்பட்ட ஓராண்டு தண்டனையை எதிர்த்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணையை ஜூன் மாதம் 27 ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
இந்த மேல்முறையீட்டு மனு, நீதிபதி வேல்முருகன் முன்பு ஜூன் மாதம் 13 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது வைகோ தரப்பில், கால அவகாசம் கோரப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதி, வழக்கின் இறுதி விசாரணையை ஜூன் மாதம் 27 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
கருத்துகள்