புகார் மனுக்களுக்கு தமிழ்நாட்டில் 30 நாளில் பதில் இல்லை எனில் ரூபாய் 25,000 அபராதம்: தலைமை நீதிபதி அறிவுரை
புகார் மனுக்களுக்கு 30 நாளில் பதில் இல்லை எனில் ரூபாய் 25,000 அபராதம்: தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கே. சுப்பிரமணியன், ஆகஸ்ட் மாதம் 19 மற்றும் 21 ஆம் தேதிகளில் அளித்த புகார் மனுக்களை மாவட்டத்தில் ஆட்சியர் மற்றும் ஆர்.கே. பேட்டை தாசில்தார் ஆகியோர் முறையே பரிசீலிக்காததால், இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அரசுக்கு அளித்த மனுக்களுக்கு 30 நாட்களில் பதில் அளிக்காவிட்டால் ரூபாய்.25,000 அபராதம் விதிக்க நேரிடும். 30 நாட்களில் விண்ணப்பங்களை பரிசீலிக்க வேண்டும் என்ற அரசின் அரசாணையை சுட்டிக்காட்டி எச்சரிக்கையும் விடுத்த நீதிபதி .
அரசுக்கு அளிக்கும் விண்ணப்பங்கள் மீது 30 நாட்களில் முடிவெடுக்காமல் இருப்பதால் பொதுநல வழக்குகள் அதிகரித்துள்ளன என சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி தெரிவித்தார்.
இதுகுறித்து அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்வதாக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் உறுதி அளித்தார்.
அரசுக்கு அளித்த புகார் மனுக்களுக்கு 30 நாட்களில் கட்டாய பதில் அளிக்க வேண்டும் அவ்வாறு அளிக்காவிட்டால் ரூபாய்.25 ஆயிரம் அபராதம் என சென்னை உயர்நீதிமன்றம் கூறிய நிலையில்
உத்தரவுகளை அரசு அலுவலர்கள் முறையாகப் பின்பற்றாததால், பொதுமக்களின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.
2014 -ஆம் ஆண்டு அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு, பொதுமக்களின் மனுக்களை 30 நாட்களுக்குள் பரிசீலித்து, தெளிவான உத்தரவுகளுடன் பதில் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டிருந்ததையடுத்து பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை ஒரு அரசாணை வெளியிட்டது. இதில், மனுக்கள் பெறப்பட்ட மூன்று நாட்களுக்குள் ஒப்புகை சீட்டு அளிக்க வேண்டும் மற்றும் ஒரு மாதத்திற்குள் மனுக்களை பைசல் செய்து தீர்க்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.
மேலும், 2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அலுவலகக் கையேட்டில் திருத்தம் செய்து, மனுக்களை ஒரு மாதத்தில் தீர்ப்பது கட்டாயமாக்கப்பட்டது. ஆனால், இந்த உத்தரவுகளை அரசு அலுவலர்கள் முறையாகப் பின்பற்றாததால், பொதுமக்களின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.இதனால்,அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள், நீர்வழிகள் தவறாக பயன்படுத்தப்படுதல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாமல், பொது நல வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் அதிகரித்து வருகின்றன. இதன் உண்மையான காரணம் யாதெனில் லஞ்ச லாவண்ய ஊழல் மயம் தான் வேறில்லை, ஏழை எளிய பஞ்சை பராரி மக்கள் போடும் பிச்சை லஞ்சத்தில் தான் பல அரசு ஊழியர்களின் தற்போது சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர் முதலாவது
வருவாய் துறை கனிம வளத்துறை சார்பதிவாளர் அலுவலகம் மருத்துவத் துறை சட்டத்துறை உணவுப் பாதுகாப்புத் துறை,
அலுவலர்கள் யாராக இருந்தாலும் அரசு பணி செய்யும் ஊழியர்கள் என்ற எண்ணம் அறவே இல்லை, தங்களை அரசின் செல்லப்பிள்ளை போலவும், ஒரு சர்வாதிகாரி போலவும் நினைத்து எங்கே சென்றாலும் பணப் பேய்களாகவே இருந்து வருகிறார்கள், ஊழல் தடுப்புக் கண்காணிப்புத் துறை பணம் நேரடியாக பெறும் ஊழியர்கள் மீது மட்டுமே கவனம் செலுத்துவதே காரணம்.
அரசு வேலை கிடைத்து பணி பெறுகிற வரைக்கும் இவர்கள் அலைந்து திரிந்து வந்த நிலையில். பின்னர் அரசு வேலை கிடைத்ததும் அரசு வழங்கிய பணியை அல்லது கடமையை சரியாக நேர்மையான முறையில் செய்யாமல் சிலர் சரியான அலுவலக நேரத்திற்கு சரியாக வராமல் வேலை பார்க்கும் இவர்கள் அரசு தன் வேலைக்கு தரக்கூடிய மக்கள் வரிப்பணமான சம்பளத்தை மீறி அங்கு வரக்கூடிய ஏழ்மையான மக்கள் என்று கூடப் பாராமல் அவர்களுக்கு செய்ய வேண்டிய தங்கள் கடமைகளை பணம் லஞ்சமாகப் பெற்றுச் செய்கின்றனர். பணம் தராமல் இருந்தால் அவர்கள் கோரிக்கை மறுக்க முடிகிறது . அவர்கள் சாமானிய மக்கள் நம்மை என்ன செய்து விட முடியும் எனும் அசாத்திய தூணிச்சலும் ஒரு காரணமாகும் இது எவ்வளவு பெரிய கேவலம் என அவர்கள் உணரவில்லை. இந்த லஞ்சப் பணத்தில் உல்லாசமாக வாழ இவர்களுக்கு வெட்கமாக இல்லையா என மக்கள் பேசினாலும் நடவடிக்கைகள் எடுக்க பாவ புண்ணியம் பார்த்து துணிவில்லை, ஊழல் தடுப்புச் சட்டங்கள் கடுமையாக இருந்தும் அதை செயல்படுத்தும் முறையில் தான் குறைபாடுகள் உள்ளன, இது போன்ற லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கு கடுமையான தண்டனையை நீதிமன்றத்தில் வழங்கும் நிலையில் அரசும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்CVC ன் PIDPI போல Vigilance & AC தீவிர நடவடிக்கை தேவை அதைத்தான் இந்த வழக்கில் நீதிமன்றம் சுட்டிக் காட்டுகிறது என அறியலாம்.
கருத்துகள்