முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாமகவின் நிறுவனருக்கு பிரபல டாக்டர்.எஸ்.அர்த்தனாரி எழுதிய கடிதம் பேசுபொருளானது

தமிழ்நாட்டில் இருபது சட்டமன்றத் தொகுதிகள், தேர்வாகும் 5 சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு ஒரு அமைச்சர் வீதம் பதவி' என,


பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச.ராமதாசிடம்,



பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் , தூதராக வந்து பேசிய ஆர் எஸ் எஸ் பிரமுகர் பட்டயக் கணக்கர் குருமூர்த்தி தரப்பில் பேச்சு நடத்தப்பட்டுள்ளதில். 40 சட்ட மன்றத் தொகுதிகளும், ஒரு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்., மற்றும் மத்திய இணை அமைச்சர் பதவி, வழங்க வேண்டும் என மருத்துவர் ச.ராமதாஸ் தரப்பில் கேட்கப்பட்டுள்ளதாகத் தகவல்  உள்ளது. 2026 ஆம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தலில், குறைந்தபட்சம் 15, அதிகபட்சமாக 20 தொகுதிகள் உங்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. பாஜகவின் தலைமையில் கூட்டணி ஆட்சி தான், தமிழ்நாட்டில் ஏற்படுத்தப்படும் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி செய்துள்ளார். இந்த நிலையில். அரசியலுக்கு தனது குடும்பத்தில் இருந்து யாரும் வரமாட்டார்கள் என 1990 ஆம் ஆண்டு சாட்டையைத் தொங்க விட்டு உறுதி அளித்தார் அதன் நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் ஆனால் இன்று அவர் குடும்பம் இன்றி அக் கட்சியின் நடவடிக்கைகள் எதுவும் நடக்காது அந்த அளவுக்கு அவர் பேச்சும் நடவடிக்கைகளும் மாறிப்போனது இந்த நிலையில் அதிமுக எனும் கட்சியின் பல கூறுகள் சிதைவுக்கு காரணமாக இருந்த நபரான  கொள்ளைக்கு பேர் போன மயிலாப்பூர் பட்டயக் கணக்கர் குருமூர்த்தியின் சீடர்கள்  குரு...மூர்த்தி பேசுவது ஆன்மீகம், செய்வதெல்லாம் பித்தலாட்டம் என்பதற்கான ஒரு சம்பவமே இது! என விமர்சகர்கள் செய்கிறார்கள். 

ஆரம்பகாலத்தில் துக்ளக் இதழில் பட்டயக் கணக்கர் குருமூர்த்தி தன் மனைவியை ஒரு பங்குதாராக ஆக்கியிருந்தார்.



அதனால்,அவர் கணக்கு,வழக்குகள் பார்ப்பதற்கென்று ஒரு அக்கவுண்ட் மேனேஜரை சோ ராமசாமிக்கு பரிந்துரைத்தார். அவர் பெயர் சீனிவாசன்., குள்ளமான நபர் . துக்ளக் அலுவலகத்தில் அவருக்கென்று ஒரு தனி அறை கொடுக்கப்பட்டிருந்தது!

துக்ளக் இதழ் விற்பனை,விளம்பர வருவாய் அனைத்தையும் கமர்ஷியல் அவர் தான் கவனித்து வந்தார். அப்போது துக்ளக் அலுவலகம் மயிலாப்பூர் சிஐடி நகரில் இருந்தது. அவர் சர்வ வல்லமை அதிகாரங்களுடன் சுதந்திரமாகவே செயல்பட்டார். அவரைச் சந்திக்க ஆர்.எஸ்.எஸ் சார்பில் அப்போது இருந்த சிவராம்ஜி, பிரபல தேனாம்பேட்டை சேஷாத்ரி, சோழவந்தான் திருவேடகம் கல்லூரி வன்னியராஜன், சண்முகநாதன், இல்.கணேசன் உள்ளிட்ட ஆட்களெல்லாம் அலுவலகத்திற்கு அப்போது வருவார்கள். வந்தால் காஃபி கொடுத்து உபசரிப்பார். சமயங்களில் அவர்களை அழைத்துச் சென்று ராதாகிருஷ்ணன் ரோடு மாரீஸ் ஹோட்டலிலும் செலவழிப்பார். பட்டயக் கணக்கர் குருமூர்த்திக்கு நெருக்காமனவர் என்பதால் சோ ராமசாமியும் எதிலும் கண்டு கொள்ளாமல் இருக்க அதாவது தலையிடமாட்டார்.






ஆனால்,அவர் கணக்கு, வழக்குகளில் நிறைய முறைகேடு செய்கிறார் என அரசல்புரசலான செய்திகள் ஆசிரியர் சோ.ராமசாமியின் காதுகளுக்குச் சென்றது. குறிப்பாக அப்போது ஆர்டிஸ்டாக இருந்த கோபியும், நிருபராக இருந்த காசியும் சோ ராமசாமியின் கவனத்திற்குக் கொண்டு சென்றார்கள். ஆனால், சோ ராமசாமி தன் நண்பர் குருமூர்த்தியே ஒருவரை பரிந்துரைத்திருக்கிறார் என்றால், கண்டிப்பாக அவர் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராகத் தான் இருப்பார் என பெரிதும் நம்பிவிட்டதால் யார் சொன்னதையும் பொருட்படுத்தவில்லை!

பிறகு ஒரு சமயம் ஒரு ஏஜெண்ட் எழுதிய கடிதம் சோ.ராமசாமியின் நேரடிக் கவனத்திற்கு வந்ததில் தான் இந்த தேதியில் வங்கியில் பணம் கட்டிவிட்டதாகவும் ஆனால், தான் பணம் தரவில்லை ஆகவே,துக்ளக் இதழ்களை அனுப்பமுடியாது என உங்கள் மானேஜர் சொல்கிறார்.எனக்கு நியாயம் வழங்க வேண்டும் எனக் கேட்டு எழுதியிருந்தார். அதை உடனடியாக சீனிவாசனை அழைத்து சோ ராமசாமி விசாரித்தார். முதலில் அப்படி,இப்படி சமாளித்த சீனிவாசன் பிறகு தன்னுடைய கவனக்குறைவால் இந்தத் தவறு நேர்ந்துவிட்டது என வருத்தம் தெரிவித்தார். சோ எச்சரித்து விட்டு விட்டார். அதன் பிறகு ஒரு நாள் ஒரு விளம்பரத்திற்காக பணம் கட்டிய ஒருவர் தன் விளம்பரம் ஏன் பிரசுரமாகவில்லை என நேரடியாக அலுவலகம் வந்து சீனிவாசனிடம் சண்டையே போட்டார். என்ன சத்தம் வருகிறது என சோ ராமசாமி நேரடியாக சீனிவாசன் அறைக்கு வந்த போது விளம்பரம் தந்தவர் எல்லாவற்றையும் விளக்கிக் கூற, சோ ராமசாமி அதிர்ந்து போய் விட்டார். அதைத் தொடர்ந்து தன் பால்ய நண்பர் ரங்காச்சாரியாரை அழைத்து, ’’டேய், தயவு செய்து உடனே பாங்கிற்கு லீவு போட்டுவிட்டு இந்த ஆள் வேலையில் சேர்ந்தது முதல்…இன்று வரையிலான எல்லா கணக்குகளையும் கவனமாக சரிபார்த்து சொல்லுடா…’’ன்னு கேட்டார். என்பது அங்கு பணியாற்றிய பலர் கூறுகிறார்கள் வங்கியில் வேலைபார்த்து வந்த ரங்காச்சாரி கணக்கு வழக்குகளை ஆராய்ந்து பார்த்து, ’’சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் விடுப்பட்டிருக்கு’’ என்றதும், சோ ஆடிப் போய்விட்டார். 25 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டரை லட்சம் என்பது மிகப் பெரிய தொகை! சீனிவாசனிடம் கேட்ட போது ஒத்துக் கொண்டார். ஆனால், தற்போது என்னிடம் எதுவும் பணமில்லை…எல்லாம் செலவழிந்து விட்டது எனக் கூறி மன்னிப்புக் கேட்டார். இதை காவல் நிலையத்தில் புகார் தந்தால் அது பட்டயக் கணக்கர் குருமூர்த்திக்கும், ஆர்.எஸ்.எஸ் க்கும் தர்மசங்கடத்தை தரக் கூடும், ஒரு தனிமனிதன் செய்த தவறால் தனது நட்பும், நல்லுறவும் பாதிக்கலாகாது என்பதால், அந்த நபரை கடுமையாக எச்சரித்து, ”இனிமேல் இந்தப் பக்கம் தலைவைத்தும் படுக்காதே ஓடு ” என திட்டி அனுப்பிவிட்டார். ஆனால், இந்த சம்பவத்திற்கு பட்டயக் கணக்கர் குருமூர்த்தி வெட்கப்படவோ, அல்லது வருத்தப்படவோ இல்லை எனத் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து என்ன காரணத்தாலோ, துக்ளக்கில் குருமூர்த்தியின் மனைவிக்கான பங்குகள் அப்போது திரும்பப் பெறப்பட்டது.


இதை அங்கு பணிசெய்து முக்கிய நபர் ஒருவர் நினைவு கூறிய நிலையில்  அந்தக் குறிப்பிட்ட நபர் சோ ராமசாமியின் மரணத்திற்குப் பிறகு பட்டயக் கணக்கர் குருமூர்த்திக்கு நெருக்கமானவர் என்ற கோதாவில் துக்ளக் அலுவலகத்திற்கெல்லாம் தற்போது சர்வசாதரணமாக வருவதோடு தான் தான் துக்ளக்கை கவனித்து வருவதாகவும் வெளியில் கூறிக் கொண்டுள்ளார். சோ ராமசாமியின் அனுபவம் நடிகர் ரஜினிகாந்துகு ஒரு பாடமாகட்டும் என்பதால் தான்! பட்டயக் கணக்கர் குருமூர்த்தியின் சிபாரிசால் அர்ஜுன்மூர்த்தியை ரஜினி தன் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக நியமித்திருக்கிறார். குருமூர்த்தி சொன்னார் என்பதற்காக ரஜினிகாந்த் கண்ணை மூடிக் கொண்டு ஒருவரை நம்பிவிடக் கூடாது என எச்சரிக்கத்தான்!


பாரதிய ஜனதா கட்சியில் அவ்வளவு முக்கியத்துவம் இல்லாமல் இருந்த – சமூக வலைதள செயல்பாடு மற்றும் தொழில் நுட்ப அறிவிற்காக மட்டுமே பயன்பட்டு வந்த – அர்ஜுன் மூர்த்தி ஒரே நாளில் நடிகர் ரஜினிகாந்த்தோடு கூட நின்றதில் மக்கள் மத்தியில் பெரும் கவனம் பெற்றுவிட்டார். இவர் பற்றி பாரதிய ஜனதா கட்சி வட்டாரத்திலேயே நல்ல பெயர் இல்லை என்பதற்கு கீழ்கண்ட பதிவே சாட்சி!  டாக்டர் தமிழிசை செளந்திரராஜனுக்கு அந்த கட்சிகாரர்களாலேயே எழுதப்பட்டுள்ள – அர்ஜுன் மூர்த்தி தொடர்பான – ஒன்றை இங்கு பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் கவனப்படுத்தும் நிலையில் 

டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி 2019 ஆம் ஆண்டில் அர்ஜுன் மூர்த்தியும், அவரது மகள் லட்சுமி தீபாவும்  ஆந்திரப் பிரதேச மாநில ராஜ்பவன் சென்று டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றனர். அவர்கள் எடுத்துக் கொண்ட படத்தை ஆந்திர மாநில ஆளுநரே தான் முக நூல் பக்கத்தில் பதிவிடுகிறார்.  இதற்கு சில எதிர்வினைகள் வருகின்றன. அதில் ஒன்று பூமிகா ரமணி என்பவர் இட்ட பதிவு.





” மேடம் இவர்கள் எல்டி (யெல்டி சாப்ட்காம் பிரைவேட் லிமிடெட்) என்ற பெயரில் ஒரு கம்பெனி வைத்திருந்தனர். அந்தக் கம்பனி ஊழியர்களுக்கு இதுவரை சம்பளம் தரவில்லை. அதனை மூடிவிட்டனர். அந்தக் கம்பனியின் முதல் ஆர்டரில் மோசடி செய்தனர்.  தயவு செய்து அவர்களது முழு விபரங்களையும் பரிசோதனை செய்து பாருங்கள். இவருக்கு சென்னையில் பயங்கரமான பெயர் இருக்கிறது. உங்கள் பெயருக்கும், புகழுக்கும்  இது போன்ற கன்மேனை ( con.man conning man இருக்கலாம்)  ஏன் அங்கீகரிக்கிறீர்கள்?’’ என்றும் பதிவிட்டுள்ளார்.



மகேஷ் இஷா என்பவர், “அக்கா நீங்க ஏன் இது போன்ற மோசடிப் பேர்வழிகளை அங்கீகரிக்கிறீர்கள்” என்று கேட்டு உள்ளார். அதற்கு டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் பதில் கூறியதாக அவரது முக நூல் பதிவில் எதுவும் இல்லை.   ஆனால், இனி சுதாரித்துக் கொள்ளலாம் என்று கூட கருதியிருக்கலாம்.துக்ளக்

சோ.ராமசாமி உயிருடன் இருந்திருந்தால், நடிகர் ரஜினிகாந்துக்கு பட்டயக் கணக்கர் குருமூர்த்தி போன்றவர்கள் தரும் நிர்பந்தங்களில் இருந்து நிச்சயம் காப்பாற்றி இருப்பார். ஒரு முறை துக்ளக் ஆண்டுவிழாவில் குருமூர்த்தியை அறிமுகம் செய்து வைத்துப் பேசிய சோ, ‘’பல பிரச்சினைகளில் பாஜக மேலிடம் குருமூர்த்தியை நம்பி விசாரித்து சொல்லக் கேட்பார்கள். ஆனால்,எப்பேர்பட்டவர்களானாலும் அவர்களுக்கு கிளீன் சர்டிபிகேட் தந்துவிடுவார்..’’ என சொல்லி கிண்டலடித்தார். அரங்கமே கைதட்டியது. அதற்கு சில நாட்கள் முன்பு தான் ஒரு குற்றம் சாட்டப்பட்ட ஒரு மோசடி தொழில் அதிபர் குறித்து பாரதிய ஜனதா கட்சியின் மேலிடத்திற்கு குருமூர்த்தி நற்சான்று பத்திரம் வழங்கியதாக செய்தி வெளியாகி இருந்தது. அது தான் அன்றைய கிண்டலுக்கும்,கைதட்டலுக்கும் காரணம்! தற்போது ரஜினிகாந்தை ஏமாறுவது பற்றிக் கூட எனக்குக் கவலையில்லை. ரஜினிகாந்த் நம்புவதன் மூலம் ரஜினியை நம்பும் பெரும் ரசிகர் கூட்டமும், மக்களும் நாளைய தினம் பெரிதும் பாதிக்கப்படக் கூடும் என்பதால் சொல்லி வைக்கிறேன். உலகத்தின் மிகப் பெரிய குற்றம் நம்பிக்கைத் துரோகம். இதற்கு தண்டனை இவ்வுலகில் கொடுக்க முடியாது. எவன் துரோகம் செய்தானோ.. அவனே இந்த துரோகத்தால் வீழ்த்தப்படுவதே, இதற்கு தண்டனை.. தன் நம்பிக்கை தோற்று அழியும் நேரத்தில் தான் தன் நம்பிக்கை துரோகம் புரியும்.அப்போது யாராலும் ஆறுதல் சொல்ல முடியாத மிகப் பெரிய துக்கம் சூழும்.. இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர்.ச. ராமதாஸின் 65 - ஆண்டுக்கால நண்பரும் , 

அவருக்கு இதய அறுவைச் சிகிச்சை அளித்த டாக்டர்.எஸ்.அர்த்தனாரிமின்  கடிதம். தற்போது  பேசுபொருளாக மாறியது.  "போதும்; கட்சியை மகனிடம் கொடுங்கள்!



ராமதாஸ் அவர்களே... கடந்த, 1960 ல் நாம் இருவரும், சென்னை மருத்துவக் கல்லுாரியில் படித்துக் கொண்டிருந் தபோது, பட்டியல் இன மக்களுக்கு உதவித் தொகை வராமல், விடுதியிலிருந்து விரட்டிய போது, நாம் போராடி னோம்; அதை மறக்க முடியாது

கடந்த, 1967ல், தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், மருத்துவப் படிப்பு முடித்த மாணவர்களின் வேலை வாய்ப்புக்காக, அன்றைய பார்க் டவுன் எம்.எல்.ஏ., விடம் கோபமாக விவாதம் நடத்தியதை மறக்க முடியாது

1996ல் நான், ராயப்பேட்டை மருத்துவ மனை தலைமை இதய நோய் நிபுணராக இருந்தபோது நீங்கள், வள்ளுவர் கோட்டம் அருகே நடத்திய போராட்டத் தின்போது, நெஞ்சுவலி வந்து மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டு, நான் சிகிச்சை அளித்ததை மறக்க முடியாது

அப்போது ஆட்சியில் இருந்த அ.தி.மு.க.,வின் ஜெயலலிதா, உங்களை தேவையில்லாமல் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கிறேன் என்று கூறி, அழுத்தம் கொடுத்து, 'டிஸ்சார்ஜ்' செய்ததை மறக்க முடியாது!

கிட்டத்தட்ட, 45 ஆண்டு காலத்தில், மத்திய அரசு அமைச்சரவையில் ஒரு தலித்துக்கும், 3 வன்னியர்களுக்கும், உங்கள் மகனுக்கும் அமைச்சர் பதவி வாங்கிக் கொடுத்து, பொருளாதாரத்தில் வலிமையான பாட்டாளி மக்கள் கட்சி என்று  உருவாக்கி, ஆளுமை மிக்க தலைவராகத் திகழ்ந்தீர்கள் ; தமிழகம் அதை நன்கு அறியும்.

மதுவை உற்பத்தி செய்து, சீராக சப்ளை செய்து மக்களைக் குடிகாரர்களாக்கிய இரண்டு அரசியல் கட்சிகளோடும் கூட்டணி வைத்தீர்கள்; அவர்களால் நடிகர் விஜயகாந்துக்கு கொடுத்த தொல்லை போல், உங்களுக்கு கொடுக்க முடியாமல், சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தீர்கள் என்பதையும் தமிழக மக்கள் நன்கு அறிவர்.



இந்த தைரியத்துக்குக் காரணம், உங்களுடைய மருத்துவப் படிப்பும்,

வலிமையாக போராடும் குணமும், வன்னி யர்களின் ஆதரவும், மகனின் பின்புலமும் என்பதே!

உங்களுடைய பேச்சை, 'டிவி'யில் கேட்டபோது, உங்களுடைய 45 ஆண்டு கால நெடிய பயணத்தையும், துன்பத்தையும், வேதனையையும் புரிந்து கொள்ள முடிந்தது.

கல்லுாரி நண்பர் என்ற முறையில், மூத்த இதய நோய் நிபுணர் என்ற முறையில், நான் கூறும் இந்த ஆலோசனையை ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன்...

இப்போது உங்களுக்கு வயது, 86. இந்த வயதில், நாம் நினைப்பது போல, நம் உடல், உள் உறுப்புகள் ஒத்துழைப்பது இல்லை. நம் மூளை, இதயம், சிறு நீரகம் என முக்கிய உறுப்புகள் அனைத்தும், 86 ஆண்டுகள் வேலை செய்தவை. அவற்றை இனியும் வருத்தி, வலிமையைக் காட்டத் தேவையில்லை.

இன்றைய தமிழக அரசியல் களம், மிகவும் கேவலமான அரசியல்வாதிகளையும், காசுக்கு விலை போகும் ஊழல்வாதி களையும் கொண்டிருக்கிறது. பணத்தைப் பெற்றுக் கொண்டு, அரசியல்வாதிகளுக்கு ஏற்றார் போல் கேள்விகள் கேட்கும் ஊடகங்கள் மலிந்து விட்டன.

நேர்மையான, தைரியமான, வலிமையாகப் போராடும் குணமுள்ள உங்களால், இந்த மோசமான அரசியல்வாதிகளை எதிர்கொள்ள முடியாது; இன்றைய அரசி யல்வாதிகள் யாரும், உங்களிடம் பேசும் தகுதியும் அற்றவர்கள். எனவே, கட்சியை மகனிடம் கொடுத்துவிட்டு, ஆலோசகராக இருங்கள்!

இன்றைய களத்தில், வலிமை மிக்க, போர்க்குணம் கொண்ட இளைஞராக, பாரதிய ஜனதா கட்சியின், அண்ணாமலையும், 'வெற்றி ஸ்டார்' விஜயும் வலம் வருகின்றனர். இவர்களோடு உங்கள் மகன் அன்புமணி போராடட்டும்; அது உங்கள் கட்சிக்கும் நல்லது.

உங்கள் ஆலோசனையோடு, கட்சியின் பயணம், குடிகாரர்களை திருத்தி, நல்ல சமுதாயத்தை உருவாக்கப் பாடுபடட்டும்!" எனத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மருத்துவர் ராமதாஸ் தரப்பில் நீக்கம் செய்ததாக அறிவிப்பு வந்த நிலையில் வழக்கறிஞர் சமூகநீதிப் பேரவையின் தலைவராக வழக்கறிஞர் கே.பாலு அவர்கள் தொடர்வார்.என 

இன்று 11-06-2025 புதன்கிழமை, மாலை 4 மணிக்கு நடைபெற்ற வழக்கறிஞர் சமூக நீதி பேரவையின் சிறப்பு செயற்குழு கூட்டத்தில் தீர்மானம். நிறைவேற்றப்பட்டது. அறக்கட்டளைகள் சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்டிருக்கும் வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையின் பதிவு ஆவணத்தின் விதி எண் 17(e) ன்படி பேரவையின் தலைவரையும், விதி எண் 17(f) ன்படி பிற நிர்வாகிகளையும் நியமிக்க முடியும். தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளை ஏதேனும் காரணத்திற்காக இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றால், 17(g) ன்படி மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன் பேரவையின் அறங்காவலர்கள் குழு கூடித் தான் தீர்மானிக்க முடியும். வேறு எந்த வழிகளிலும் பேரவையின் தலைவரை பதவி நீக்கம் செய்ய முடியாது.

அந்த வகையில் வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையின் தலைவராக அறங்காவலர்கள் குழுவால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட வழக்கறிஞர் கே.பாலு அறங்காவலர்கள் குழுவின் பதவிக்காலம் முடியும் வரை அப்பொறுப்பில் தொடர்வார் என்று வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையின் சிறப்பு செயற்குழுக் கூட்டம் ஒருமனதாக தீர்மானிக்கிறது. அத்துடன் பேரவையின் நிர்வாகிகளாக கீழ்க்கண்டவர்களை செயற்குழு தேர்வு செய்கிறது.1. மாநில செயலாளர்: வழக்கறிஞர் கே. சரவணன்

2. மாநில பொருளாளர்: வழக்கறிஞர் டி. தமிழரசன்

3. மாநில அமைப்புச் செயலாளர்: வழக்கறிஞர் கே.ஐ. பழனிச்சாமி

4. மாநில சமூக ஊடகப் பிரிவு செயலாளர்: வழக்கறிஞர் கணல் கோ. கதிரவன்

5. சென்னை மண்டல செயலாளர்: வழக்கறிஞர் பா. குமார்

6. கிழக்கு மண்டல செயலாளர்: வழக்கறிஞர் என்.ஆர். வெங்கடேசன்

7. மேற்கு மண்டல செயலாளர்: வழக்கறிஞர் எம். மகாலிங்கம்

8. மத்திய மண்டல செயலாளர்: வழக்கறிஞர் ஏ. பாலமூர்த்தி

9. வடக்கு மண்டல செயலாளர்: வழக்கறிஞர் கே. சக்கரபாணி

10. தெற்கு மண்டல செயலாளர்: வழக்கறிஞர் என். சிவக்குமார்

11. மாநில மகளிரணித் தலைவர்: வழக்கறிஞர் நா. நவமணிபேரவையின் தலைவர் பதவியில் தொடரும் வழக்கறிஞர் கே.பாலு மற்றும் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கும் அவர்களின் பணி சிறக்க இக்கூட்டம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 2 : வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையின் புரவலராக அன்புமணி ராமதாஸ் அவர்கள் ஒருமனதாக தேர்வு: வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும் நிலையில், அது மேலும் மேம்படுத்தப்பட வேண்டும் என்று இந்தச் செயற்குழு கருதுகிறது. அதற்காக வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவைக்கு வழிகாட்டும் வகையில் பேரவையின் புரவலராக செயல்படும்படி அன்புமணி ராமதாஸ் அவர்களை வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை கேட்டுக் கொள்கிறது’ என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சென்னையில் அன்புமணி நடத்திய கூட்டத்தில் பங்கேற்ற சமூக நீதி பேரவை மாநிலத் தலைவர் வழக்கறிஞர் கே.பாலுவை, பதவியில் இருந்து ராமதாஸ் நீக்கினார். அவருக்கு மாற்றாக வழக்கறிஞர் கோபு என்பவரை நியமித்துள்ளார். இதேபோல, 20-க்கும் மேற்பட்ட மாவட்டத் தலைவர் மற்றும் செயலாளர்களையும் நீக்கிவிட்டு, புதியவர்களை ராமதாஸ் நியமனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதர பொறுப்பாளர்களும் அவரவர் பொறுப்புகளில் தொடர்வார்கள். நிர்வாகிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.என 

செய்தி : வழக்கறிஞர் சமூகநீதிப் பேரவை வெளியிட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...