காவல் நிலையத்தில் ஆலயத் தற்காலிக பணி செய்த இளைஞர் உயிரிழப்பு - 6 காவலர்கள் பணியிடை நீக்கம்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் காவல் நிலையத்தில் விசாரணை நடந்தாக கூறும் நிலையில் அஜித் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.
பணியில் இருந்த காவல துறை பணியாளர்கள் பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகிய நபர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் அருள்மிகு மடப்புரம் ஸ்ரீ காளியம்மன் கோவிலில் தரிசனம் செய்ய வந்த பக்தர் ஒருவரிடம் அவரது காரில் 10 சவரன் நகைகள் திருட்டுப் போனதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கோவில் தற்காலிக ஊழியர் அஜித் என்பவரை விசாரணைக்காக காவல்நிலையத்தில் அழைத்துச் சென்றனர்.அஜீத்குமார் வழக்கின் முழு விபரம்:
நேற்றையதினம் அஜீத்குமாரது உடல் வாங்கப்பட்ட நிலையில் (மிரட்டலின் காரணமாக) வழக்கறிஞர்களின் நீண்ட உழைப்பின் வாயிலாக மாஜிஸ்திரேட் முன்பாக சமர்பிக்கப்பிட்ட வழக்கின் முழுவிபரமிது...
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் நாடார் தெருவைச் சேர்ந்த பாலகுருநாதன் மகன் 29 வயதுள்ள அஜித் குமார் என்பவர் மடபுரத்தில் உள்ள அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளி அம்மன் கோவிலில் ஒப்பந்த அடிப்படையில் காவலாளியாகப் பணிபுரிந்து வருகிறார். கடந்த 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் ஒரு தாயும் மகளும் ஒரு காரில் வந்தவர்கள் நடக்கமுடியாததால் சக்கர வண்டி வேண்டும் என்று கேட்டதன் பெயரில் அஜித்குமார் உதவி செய்திருக்கிறார். அவரிடமே காரின் சாவியை கொடுத்து வேறு ஒரு இடத்தில் நிறுத்தும்படி கூறியிருக்கின்றனர். கார் ஓட்டத் தெரியாத அஜித்குமார் வேறு ஒரு நண்பரின் உதவியுடன் காரை வேறு இடத்தில் நிறுத்தியிருக்கிறார். மதியம் 12 மணி போல் வழிபாடு முடிந்து திரும்பி வந்த அப்பெண்கள் கேட்டதும் மீண்டும் காரை எடுத்து அவர்களுக்கு கொடுத்து, அவர்களும் திரும்பி சென்று விட்டனர். மதியம் 2 மணி அளவில் திருப்புவனம் காவல் நிலையம் வந்த அப்பெண்கள் பர்சில் வைத்திருந்த பணம் ரூபாய் 2,500ம் பத்துப்பவுன் நகையும் காணவில்லை என்று வாய்மொழியாகப் புகார் கொடுத்திருக்கின்றனர்.
காவல் நிலையத்தில் கேட்டுக்கொண்டதன் பேரில் கோவில் நிர்வாக அலுவலர்கள் மாலை 7 மணி அளவில் அஜித்குமாரைக் காவல்நிலையத்தில் ஒப்படைத்திருக்கின்றனர். ஆய்வாளரும் சார்பாய்வாளரும் விசாரித்து மானாமதுரையில் உள்ள துணை காவல்துறை கண்காணிப்பாளரின் சிறப்புப் படையினரிடம் அஜித்குமார், அவனின் தம்பி நவீன்குமார், காரை நிறுத்த உதவி செய்த நபர் மற்றும் 2 பேர் ஆகிய ஐந்துபேரை விசாரணைக்காக கூட்டிச்சென்று திருப்புவனம் கால்நடை மருத்துவமனை அருகில் உள்ள சீச்சாச்சேரி களம், மடப்புரம் விலக்கு மாணவர்கள் விடுதிக்குப்பின்புறம், பேருந்து டிப்போ பின்புறம் உள்ள ஆற்றோரப் பாதை ஆகிய மூன்று இடங்களில் வைத்து அடுத்தநாள் மாலைவரை அடித்து விசாரணை செய்துள்ளனர். சித்திரவதை தாங்காமல்
எல்லோரும் இருக்கும் இடத்திற்கு சென்றால் யாராவது தலையிட்டு காப்பாற்றி விடுவார்கள் என்ற நம்பிக்கையில் மடப்புரம் கோவில் உதவி ஆணையாளர் அலுவலகத்தின் பின்புறம் கூட்டி சென்றால் எடுத்துத் தருகிறேன் என்று அஜித்குமார் கூறியதைக் கேட்டு அங்கே கூட்டிச் சென்ற காவலர்கள் அங்கு உள்ள மாட்டுக் கொட்டகையில் வைத்துக் கேட்டபோது உங்கள் சித்திரவதை தாங்காமல் தான் அவ்வாறு கூறினேன், நகை திருட்டுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியுள்ளார். அதனால் ஆத்திரம் அடைந்த காவலர்கள் அவன் காலில் ஒருவரும் தலைப்பகுதியில் ஒருவரும் ஏறிநின்று பலம் கொண்ட மட்டும் அடித்துத் தாக்கியதில் 28 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 7 மணிக்கு சிறுநீரகத்தில் ரத்தம் கலந்து வருவதை கண்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளனர். அவர்கள் ஒரு ஆட்டோவில் ஏற்றி தனியார் மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுள்ளனர். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்ததால் அரசு மருத்துவமனைக்கு சென்ற பொழுது இறந்து விட்டதாகக் கூறியுள்ளனர். உடனே அஜீத் குமாருடன் கூட்டிச்சென்ற அனைவரிடமும் கையெழுத்து வாங்கிக்கொண்டு அனுப்பி விட்டனர்.
சனிக்கிழமை இரவு 11 மணிக்கு மேல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 29ஆம்தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு பிரேதப் பரிசோதனை
நடைபெற்றுள்ளது. பிரேத பரிசோதனைக்கு முன் திருப்புவனம் நீதித்துறை நடுவர் இறந்துபோன அஜித் குமாரின் தாயார் மற்றும் சகோதரர் நவீன் குமார் மற்றும் சாட்சிகளிடம் விசாரணை நடத்தியுள்ளார். திருப்புவனம் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சனிக்கிழமை மாலை 7 மணி அளவில் தற்செயலாக வேறு வழக்கிற்காக காவல்நிலையம் வந்த ஒரு வழக்கறிஞரிடம் நகையைப் பறிகொடுத்த பெண்களின் சார்பாக புகார் எழுதி வாங்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வருவதற்கு முன் மதுரையில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஸ்கேன் செய்வதற்காக சென்ற பெண்மணிகள் அங்கே தங்க நகையை கலற்றி பர்ஸில் வைத்துள்ளனர். அங்கிருந்து கிளம்பும் போது நகை இருந்ததா என்பதை அவர்கள் உறுதிப்படுத்தவில்லை.
சந்தேகத்தின் பெயரில் அவர்கள் கொடுத்த புகாரைப் பெற்று
கைது குறிப்புகள் ஏதும் தயாரிக்காமல் ஐந்து பேரை சட்ட விரோதக் காவலில் வைத்து மூன்றாம் தர சித்திரவதைகளில் ஈடுபட்டதால் பத்தாம் வகுப்பு வரை படித்த, இதுவரை எந்தக் குற்ற வழக்கிலும் சம்பந்தப்படாத அஜித்குமார் உயிர் இழக்க நேர்ந்ததற்கு காவல்துறை அலுவலர்களே முழுக்காரணம். இந்நிலையில் காவல்துறை அலுவலர்கள் கொலைக்குற்றச்சாட்டிலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள உயர் அலுவலர்கள் மற்றும் ஆளுங்கட்சி சார்ந்த பிரமுகர்கள், ஜாதியச் சங்கத்தைச் சார்ந்தவர்களை வைத்து
கணிசமான தொகையை கையூட்டாகக் கொடுத்து தப்பிக்க நினைப்பதாக தெரியவருகின்றது. இதில் உண்மை நிலையை அறிய வழக்கின் விசாரணையை உடனடியாக சிபிசிஐடி போன்ற சிறப்புப் பிரிவினருக்கு மாற்ற வேண்டும். உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது சட்ட விரோதக் காவலில் நடந்த கொலைக்கு காரணமான காவலர்களை
இடை நீக்கம் செய்வதை உறுதி செய்வதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மக்கள் சிவில் உரிமைக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கின்றது.
மக்கள் சிவில் உரிமை கழகத்தின் மாநிலத் தலைவர் பேராசிரியர் இரா. முரளி. சிவகங்கை மாவட்டத் தலைவர் பேராசிரியர் அரச முருகபாண்டியன் தகவல்
காவல் நிலையத்தில் காவலர்கள் கொடூரமாக தாக்கி விசாரணை நடத்திய போது இளைஞர் அஜித் உயிரிழந்தார் என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தையடுத்து அஜித்தின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கோவில் தற்காலிக ஊழியர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக திருப்புவனம் காவல் நிலையத்தில் பணியாற்றிய 6 தனிப்படைக் காவலர்களை பணியிடை நீக்கம் செய்து சிவகங்கை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆஷித் ராவத் உத்தரவிட்டுள்ளார். கோவில் தற்காலிக ஊழியர் உயிரிழந்தது குறித்த வெளிப்படையான விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் திருட்டு சம்பவம் தொடர்பாக நேற்று போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்குமார் (வயது 28) உயிரிழந்தார். மடப்புரம் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலுக்கு மதுரையைச் சேர்ந்த சிவகாமி என்ற நபர் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். சிவகாமி வயது முதிர்ந்தவர் என்பதால் கோவில் தற்காலிக ஊழியர் அஜித் வீல் சேர் கொண்டு வந்து கொடுத்துள்ளார். அப்போது அஜித்திடம் சாவியைக் கொடுத்து காரை பார்க் செய்யுமாறு சிவகாமியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அஜித்தும் அது தனது பணியில் லை எனக் கூறாமல் அவர்களுடைய காரை ஓரிடத்தில் பார்க் செய்துவிட்டு சாவியைக் கொடுத்துள்ளார்.
சாமியைக் கும்பிட்டு விட்டு வெளியே வந்த சிவகாமி குடும்பத்தினர் காரில் அவர்கள் வைத்திருந்த 10 பவுன் நகையைக் காணவில்லை என திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல் நிலையத்திற்கு தற்காலிக பணி இளைஞர் அஜித்தை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது தனிப்படை காவலர்கள் மூர்க்கத்தனமாகத் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக அஜித்தின் உறவினர்கள் குற்றச்சாட்டுத் தெரிவித்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் நிலையத்தில் கொடூரமான முறையில் தாக்கியதில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் என்பவர் பெண் பக்தரின் காரில் இருந்த ஒன்பதரை பவுன் நகையைத் திருடி விட்டதாக வந்த புகாரை அடுத்து, திருபுவனம் காவல்துறை அஜித் குமாரை கைது செய்து விசாரணை செய்ததாகவும், அச்சமயத்தில் காவலரின் தாக்குதலால் அஜித் குமார் மரணம் அடைந்து விட்டதாகவும் அவரின் உறவினர்கள் இறந்த அஜித் குமாரின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
"ஜெய்பீம் படம் பார்த்தேன். உள்ளம் உலுக்கியது" என சினிமா விமர்சனம் எழுதிய விடியா அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்கே இருக்கிறார்?
விக்னேஷ் லாக்கப் மரணத்தின் போது, சட்டப்பேரவையிலேயே பச்சைப்பொய் பேசியவர் தானே நீங்கள்? இதற்கும் அதே போல் பொய் தான் பதிலாக வருமா?
தவறு செய்ததாக காவல்துறை கருதினால், கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து, உரிய சட்ட நெறிமுறையை பின்பற்ற வேண்டுமே தவிர, சட்டத்தை தங்கள் கைகளில் முழுமையாக காவல்துறை எடுத்துக்கொள்ள கூடாது.
தன்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையைக் கூட நிர்வகிக்கத் தெரியாத பொம்மை முதல்வருக்கு எனது கடும் கண்டனம்.
திருபுவனம் காவல் நிலையத்தில் திருக்கோவில் காவலாளி அஜித் குமார் மரணம் அடைந்த நிகழ்வு குறித்து முழு உண்மையை வெளி கொண்டுவர உடனடியாக மாவட்ட நீதிபதி தலைமையில் குழு அமைத்து, முழு விசாரணை நடத்தி, இந்த மரணத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், மேலும் இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க இந்த விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன். எனத் தெரிவித்துள்ளார். காலைல 6 மணிக்கு கதவ தட்டுனாங்க. கண்ணு முன்னாடியே என் அண்ணன.....'' திருப்புவனம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த விவகாரம் - கண்ணீர் மல்க நடந்ததைக் கூறிய இளைஞரின் தம்பி மற்றும் தாய் ஆகியோர் தெரிவித்துள்ளார்கள். பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
"சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்ததாக தெரிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பத்ரகாளியம்மன் மடப்புரம் திருக்கோவிலின் தற்காலிக ஊழியர் அஜித்குமாரை விசாரணை எனும் அழைத்துச் சென்று, இணைந்து 2 போர்வையில் காவலர்கள் 7 நாட்களாக அடித்துத் துன்புறுத்தியதால் அவர் உயிரிழந்ததாக உறவினர் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இது லாக்-அப் மரணமோ என்ற சந்தேகத்தை வலுவாக எழுப்புகிறது.
கடந்த வாரம் பாலியல் தொல்லை குறித்து புகாரளிக்க வந்த கர்ப்பிணி உட்பட மூன்று பெண்களை காவலர் தாக்கிய நிலையில், தற்போது தன்னையும் தன் சகோதரரையும் வண்டியில் அழைத்து செல்லும் வேளையிலும் பின்னால் கயிறு கட்டி தாக்கியதாக உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரர் வாக்குமூலம் அளித்திருப்பது காவல்துறையின் அதிகரித்துவரும் குரூரப் போக்கை வெளிப்படுத்துகிறது.
தி.மு.க. ஆட்சியில் காவல்நிலையத்திற்கு வந்தாலே ஏழை எளியோரின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை உருவாகியுள்ளது. என்ற நிலை காவல்துறையின் அராஜகப் போக்கிற்கு மேலும் பல உயிர்கள் பலியாகும் முன், சட்டம் ஒழுங்கை தன் நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக இவ்விஷயத்தில் தீவிர விசாரணை நடத்தி, உயிரிழந்தவரின் இறப்புக்கு தக்க நியாயம் பெற்றுத்தர வேண்டும்". எனத் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பாரதிய ஜனதா கட்சி மாநிலத்தின் தலைவர் நயினார் நாகேந்திரன், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், உள்ளிட்ட தலைவர்கள் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள நிலையில். மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில், சிவகங்கை மாவட்டத்தின், திருப்புவனம் வட்டத்தில் மடப்புரம் மதுரையிலிருந்து 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் வைகை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. மோசடி கொடுக்கல் வாங்குவதில் சிக்கல், சொத்து தகராறு, குடும்பச் சண்டைகளில் நீதி கிடைக்காது ஏமார்ந்தவர்கள் குளித்துவிட்டு ஈரத்துணியுடன் வந்து நீதியின் தேவதையாக காளியைக் கருதி அன்னையின் முன்னால் காசு வெட்டிப்போட்டு காளியிடம் முறையிடும் பழக்கம் உள்ளது.
காளியிடம் முறையிட்டபின்னர் கிழக்கு வாசல் வழியாக அவர்கள் வெளியேறுவர். மடப்புரம் கோவிலின் மூலக் கடவுளாக இருக்கும் ஸ்ரீ அடைக்கலம் காத்த ஐயனாருக்கு இருபுறமும் தலையை அரித்து பலியிட்டுக் கொள்ளும் நவகண்ட சிற்பங்கள், ஐயனாரின் கருவறையில் சப்தகன்னியரும் உள்ள கோவில் வளாகத்தில் அடைக்கலம் காத்த ஐயனார், பத்திர காளியுடன் சின்ன அடைக்கலம் காத்த சுவாமி, சின்னு, வீரபத்திரன், காணியாண்ட பெருமாள், ஐயனார், கருப்பண்ணசாமி, வினை தீர்க்கும் செல்வ விநாயகர் தனித்தனி உப சிற்றாலயங்களில் அருள்பாலிக்கும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இனி இந்த சம்பவத்திற்கு தக்க நீதியை அந்த தெய்வம் தான் குற்றவாளிக்கு தரவேண்டும் அதுவே உண்மையான நீதியாக அமையும். இந்த நிலையில் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிமுக மாவட்டச் செயலாளர் செந்தில் நாதன் மற்றும் கட்சியினர் பொதுமக்கள் உடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த நிலையில் கொலை வழக்குப் பதிவு செய்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,. வெளியிட்ட அறிக்கையில்
கருத்துகள்