இராமேஸ்வரத்தில் மீனவர்கள் விவசாயிகள் உயர்மட்டக் குழுவின் ஆலோசனைக் கூட்டம்.
டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் பிரதானிகளில் ஒருவரும் தென் மாநிலங்கள் ஒருங்கிணைப்பாளருமான ரஜ்விந்தர் சிங் கோல்டன்,
கூட்டமைப்பு பொதுச் செயலாளர் எம். அர்ச்சுணன், இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் இராமநாதபுரம் மலைச்சாமி, கோயம்புத்தூர் பாரூக், ஜூக்ராஜ் சிங், இராமநாதபுரம் மாவட்ட அனைத்து விசைப்படகுகளின் மீனவர் சங்கத்தின் தலைவர். JP ஜேசுராஜா, பொருளாளர் R.சகாயம் (கலைக்கூடம்),
துணைத் தலைவர் B.ஆல்வின் ஆகியோரும் கச்சத்தீவை மீட்பு சம்பந்தமாக. கலந்து பேசி. கச்சத்தீவை மீட்போம். என்ற முழக்கத்துடன்
மீனவர்கள் விவசாயிகள் ஒற்றுமை மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்ட நிலையில் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியத்தில்
10-6-2025 ஆம் தேதி நடைபெற இருந்த முற்றுகைப் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் நரிக்குடி ஒன்றிய பயிர் காப்பீடு மற்றும் வறட்சி நிவாரணம் வழங்க வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம் நடத்துவதை திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தை ஏற்று தள்ளி வைத்தனர்.மேற்கண்ட கூட்டத்தில்
விருதுநகர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை), திருச்சுழி வட்டாட்சியர், அருப்புக்கோட்டை காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், திருச்சுழி காவல்துறை ஆய்வாளருடன் சார்பு ஆய்வாளர், வேளாண்மை உதவி இயக்குநர்(பயிர் காப்பீடு), நரிக்குடி வேளாண்மை உதவி இயக்குநர் ஆகிய அரசு பணி செய்யும் அலுவலர்கள் மற்றும் விவசாயப் பிரதிநிதிகளாக. காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் எம்.அர்ச்சுணன், மாவட்டச் செயலாளர் ஆறு. கோபாலகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் ரா.ராம்பாண்டியன், மாவட்டப் பொருளாளர் அ.இளங்கோவன், மாவட்ட துணைத் தலைவர் எஸ்.எஸ். ராஜேந்திரன், நரிக்குடி ஒன்றியத் தலைவர் கே. முருகேசன்,
மாவட்ட துணைச் செயலாளர் சி. மகாலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேற்கண்ட கூட்டத்தில்
பயிர் காப்பீடு சம்பந்தமாக பாரத ஸ்டேட் வங்கி (பொது காப்பீடு) நிறுவன சென்னை பிரதிநிதியை நேரில் வரவழைத்து 18-6-2025 அன்று திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகத்தில் பேசி முடிவு செய்வது என்றும்,
வறட்சி நிவாரணம் பரிந்துரை செய்யப்பட்டுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் வலியுறுத்தி விரைவு படுத்துவது என்றும்,
இந்த முடிவுகள் அடிப்படையில் நடைபெற இருந்த முற்றுகைப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாகவும் முடிவு செய்யப்பட்டது
கருத்துகள்