பட்டுக்கோட்டை பத்து ரூபாய் டாக்டர் ரத்தினம் பிள்ளை முதுமை காரணமாக காலமானார்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை இரத்தினம் பிள்ளை (வயது 96). மருத்துவர் ஆனதிலிருந்து பிறந்த பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு பத்து ரூபாய் மட்டுமே வாங்கி மருத்துவம் பார்த்ததால் பத்து ரூபாய் டாக்டர் என பெயர் பெற்றார். பல ஆண்டுகளாக பத்து ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த இரத்தினம் பிள்ளை சுமார் 65 ஆயிரம் சுகப்பிரசவரங்களை மட்டுமே நடத்தியுள்ளதாகவும் தெரிகிறது. அவரது மறைவு அந்தப் பகுதி மக்களுக்கு மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பணியைத் துவங்கும் போது 2 ரூபாய் கட்டணம் மட்டுமே பெற்றுள்ளார். அதன்பின் 1997 ஆம் ஆண்டிலிருந்து 5 ரூபாய் கட்டணம் வாங்கியுள்ளார். பின்னர் 2007 ஆம் ஆண்டிலிருந்து நேற்று வரை 10 ரூபாய் கட்டணமாக பெற்ற நிலையில் மருத்துவ சேவையை செய்து வந்தார். இவர் பட்டுக்கோட்டையின் அதிசய டாக்டர் என அன்பு கலந்து அழைக்கப்படுகிறார்.
அரை நூற்றாண்டுக்கும் மேலாக 10 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் ரத்தினம் பிள்ளை வயது மூப்பு காரணமாக ஜூன் 7 ஆம் தேதி காலமானார். அவரது மறைவுச் செய்தி தஞ்சாவூர்ப் பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள சீனிவாச புரத்தைச் சேர்ந்த கனகரத்தினம் பிள்ளை. மருத்துவம் படித்தவர் தனது சொந்த ஊரான பட்டுக்கோட்டையில் 1957 ஆம் ஆண்டு முதல் மருத்துவ பணியை தொடங்கினார்.
65 வருடங்களாக மனிதநேயத்துடன் வாழ்ந்த மருத்துவர் என்பதால் அந்தப் பகுதியில் இருப்பவர்களை மிகவும் வேதனையில் ஆழ்த்தியுள்ள நிலையில் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி உருக்கமுடன் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பகுதியில் கிளினிக் நடத்தி வந்தவர் டாக்டர் கனகரத்தினம். இவருடைய மனைவி இராஜலட்சுமி. இவர்களுக்கு மூன்று மகள்கள், ஒரு மகன். மகள்களுக்குத் திருமணமாகி வெவ்வேறு பகுதிகளில் வசிக்கின்றனர். மகன் டாக்டர் சுவாமிநாதன் மருமகள் டாக்டர் வர்ஷாவும் மருத்துவர்களே.
கருத்துகள்