கொலை செய்து உடலை அட்டைப் பெட்டியில் வைத்து வழியில் வீசிய வழக்கில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது
திண்டுக்கல் அருகில் நிதி நிறுவனம் நடத்திய நபரைக் கொலை செய்து உடலை அட்டைப் பெட்டியில் வைத்து வழியில் வீசிய வழக்கில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது வாகனம் பறிமுதல்.!
திண்டுக்கல் நகரில் பழனி புறவழிச் சாலை ராமையன்பட்டி அருகிலுள்ள தரைப்பாலத்தில் கயிறால் கட்டப்பட்ட அட்டைப்பெட்டியில் கை,கால்களை நைலான் கயிறு மூலம் கட்டப்பட்டிருந்த நிலையில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம் கண்ட நிலையில் தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த தாலுகா காவல் நிலையத்தினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திண்டுக்கல் அரசு பொது மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கும் பதிவு செய்தனர்.
மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவில் புறநகர் துணைக் கண்காணிப்பாளர் சிபிசாய் சௌந்தர்யன் மேற்பார்வையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர்கள் அங்கமுத்து, கிருஷ்ணவேணி, பாலசுப்ரமணியன் மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டதில் அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு ஒளிப்பதிவு படக்கருவிகள் மூலம் பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்...விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் ஆர்த்தி தியேட்டர் ரோடு வ.உ.சி நகர் பகுதி வசிக்கும் குபேந்திரன்(வயது 58) நிதி நிறுவனம் நடத்தி வந்தத நபர் எனத் தெரியவந்தது. தொடர்ந்து தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு மேற்கண்ட கொலை சம்பவத்தில் ஈடுபட்ட N.S.நகர், முனியப்பன் கோவில் தெருவில் வசிக்கும் பரமசிவம் மகன் கண்ணன்(வயது 54), கோபால்பட்டி, V.குரும்பபட்டியைச் சேர்ந்த கண்ணன் மனைவி சாந்தி(வயது 59), திருப்பூர், அவிநாசி மடத்துப்பாளையம் வசிக்கும் சுரேந்தர் மனைவி பிரியா(வயது 26) ஆகிய மூவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இவர்கள் மூவரும் குபேந்திரனைத் தள்ளி விட்டதாகவும் அதில் குபேந்திரன் கீழே விழுந்து இறந்து விட்டதால் உடலை அட்டைப்பெட்டியில் வைத்து இராமையன்பட்டி, தரைப்பாலம் அருகே வீசிச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து கொலைக்கு பயன்படுத்திய மினி லாரி (குட்டி யானை) வாகனத்தை பறிமுதல் செய்து மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
கருத்துகள்