கடலோரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக கேரளாவின் விழிஞ்ஞம் துறைமுகத்தில் பிரத்யேக படகுத் துறையை ஐசிஜி திறந்து வைத்தது
இந்தியக் கடலோர காவல்படை (ஐசிஜி) தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி நேற்று (ஜூன் 07, 2025) கேரளாவின் விழிஞ்ஞம் துறைமுகத்தில் ஒரு புதிய பிரத்யேக ஐசிஜி படகுத் துறையைத் திறந்து வைத்தார். 76.7 மீட்டர் அதிநவீன கப்பல் தளமானது, ஐசிஜி கப்பல்களை விரைவாகப் பயன்படுத்துவதற்கும், திரும்பப் பெறுவதற்கும் உதவும். கடலோர கண்காணிப்பு,
தேடுதல் மற்றும் மீட்பு, கடத்தல் எதிர்ப்பு மற்றும் மீன்வளப் பாதுகாப்புக்கான பணித் தயார்நிலையை இது அதிகரிக்கும். முக்கிய சர்வதேச கப்பல் பாதைகளிலிருந்து வெறும் 10 கடல் மைல்கள் தொலைவில் மற்றும் விழிஞ்ஞம் சர்வதேச ஆழ்கடல் துறைமுகத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்தத் துறையானது, இந்தியாவின் தென்மேற்கு கடற்கரையைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய வசதியின் பாதுகாப்பு முக்கியத்துவத்தை தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி எடுத்துரைத்தார், இது கடலோர பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும், பிராந்தியத்தில் விரைவான எதிர்வினைத் திறன்களை உறுதி செய்வதிலும் இது மிகப் பெரும் படியாகும் என்று கூறினார். இந்த நிகழ்வில் ஐசிஜி பிராந்திய (மேற்கு) ஐஜி பீஷம் சர்மா, விஜிஞ்ஞம் சர்வதேச துறைமுகம், கேரள கடல்சார் வாரியம், மாநில காவல்துறை, துறைமுக அதிகாரிகள், இந்திய ராணுவம், அதானி துறைமுகம் மற்றும் மீன்வளத் துறை ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்