விஷ்ணுபுரம் சரவணனுக்கு பால சாகித்ய புரஸ்கர் விருது அறிவிப்பு.
'ஒற்றைச் சிறகு ஓவியா' நாவலுக்காக 2025 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் பால சாகித்ய புரஸ்கார் விருதுக்கு தேர்வாகியிருக்கும் விஷ்ணுபுரம் சரவணன், கூத்தொன்று கூடிற்று எனும் சிறுகதைக்காக யுவ புரஸ்கார் விருதுக்கு தேர்வாகியிருக்கும் லட்சுமிஹர்க்கும் பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் வாழ்த்துகள்.
சிறார் இலக்கியப் படைப்புகளில் தனித்துவமிக்கவராக திகழும் விஷ்ணுபுரம் சரவணன் மற்றும் சிறுகதை எழுதுவதில் தனி பாணியை கடைபிடித்துவரும் லட்சுமிஹர் இருவரின் எழுத்துப் பயணமும் மென்மேலும் தொடர வாழ்த்தலாம்.
2025 ஆம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருதினை வென்றுள்ள விஷ்ணுபுரம் சரவணன், கவிஞர், பேச்சாளர், கட்டுரையாளர், கதை சொல்லி, சிறார் எழுத்தாளர், இதழாசிரியர் என, பல தளங்களில் பன்முகத் தன்மையுடன் முத்திரை பதித்தவர்.
விஷ்ணுபுரம் சரவணன் இலக்கியத்தில் தொடர்ந்து பல படைப்புகளை மேற்கொண்டு வருகின்றார்.
கருத்துகள்