முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என்னோடு இருப்பவர்களுக்கு மட்டுமே சீட்டு ! எந்தக் கட்சி கூட்டு ? யார் போடுவார்கள் ஓட்டு..? பாமகவின் பரிதாப நிலை

என்னோடு இருப்பவர்களுக்கு மட்டுமே சீட்டு ! எந்தக் கட்சி கூட்டு ?  யார் போடுவார்கள் ஓட்டு..?  பாமகவின் பரிதாப நிலை. இப்படியும் கூட நடக்குமா,?

மகனிடமிருந்து அப்பாவின் உயிரை பாதுகாக்க பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாம் தைலாபுரத்தில்!

அப்பாவின் உயிரை பாதுகாக்கவே காவல்துறை பாதுகாப்பு வேண்டுமென்றால், அந்த மகன் எவ்வளவு ஆபத்தானவராக  இருப்பார்…? இவரிடமிருந்து முழு வன்னியர் ஜாதி சார்ந்த சமூகத்தைப் பாதுகாக்கப் போவது யார்? 




இதைவிட பேரவலம் வேறு என்ன இருக்க முடியும்?

கொள்கைக்காக உயிரை கொடுக்கும் இயக்கமாக 1989 ஆம் ஆண்டு உருவெடுத்து, இன்று கொள்ளையை பங்கு போடுவதில் குடும்பத்திற்குள் சண்டையிடும் நிலை வந்தான பிறகு இதுவும், நடக்கும், இன்னமும் நடக்கும். நாம் கடந்த காலங்களில் பார்த்த மருத்துவர் அய்யா ராமதாஸுக்கும் தற்போது உள்ள மருத்துவர்  இராமதாஸுக்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள் உள்ளன, எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் இடஒதுக்கீட்டுப் போராட்டம் தொடர் சாலை மறியல் பார்ப்பனப்பட்டு இரங்கநாதக் கவுண்டர் உள்ளிட்ட 21 பேர் அரசின் துப்பாக்கி சூடு காரணமாக மரணம் காரணமாக வளர்ந்த ஜாதிய அமைப்பு சென்னை மெரினா கடற்கரையில் துவங்கிய கட்சி பாட்டாளி மக்கள் கட்சியின் தற்போது உள்ள நிலையில் பல சமூக ஊடகங்களில் கேலிச்சித்திரமாகி வருகின்றன 




ஒடுக்கப்பட்ட வட மாவட்டங்களில் அதிகம் வாழும் படையாச்சிகள், கவுண்டர்கள், நாயக்கர்கள் உள்ளிட்ட கூட்டு வன்னியர் ஜாதிகளுக்கு என்று ஒரு உத்தமனைக் கண்டெடுப்போம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காலஞ்சென்ற ராமசாமிப் படையாச்சிக்குப் பின்னர் வன்னிய சமூகத்தின் நாற்பது பெருந்தலைவர்கள் ஒன்று சேர்ந்து மருத்துவர் ச.ராமதாஸை உருவாக்கினார்கள். அதில் ஏ.கே. நடராஜன், எம்.பி.சுப்பிரமணியம், எம்.என்.மணிவர்மா. மாரிமுத்துக் கவுண்டர், வன்னிய அடிகளார், இராமமூர்த்தி என பலரது தியாகத்தில், பெருந்தன்மையில் உருவானவர் தான் மருத்துவர் ச.ராமதாஸ்.

தன்னை பெருந்தலைவராக்கி அழகு பார்த்தவர்களையே பின்பு அழ வைத்த வரலாற்றுக்குச் சொந்தக்காரர் தான் மருத்துவர் ச.ராமதாஸ்.




அடுத்த நிலையில் கட்சியை கட்டமைக்க பட்டிதொட்டியெங்கும் பயணப்பட்டு வேர்வை சிந்திய முன்னணி மூத்த நிர்வாகிகளால் எங்கே தன் பதவிக்கு பங்கம் வருமோ என்ற கோழைத்தனத்தில் அதிரடியாய் இராம. நாகரத்தினம், டி.என்.ராமமூர்த்தி, முருகேசன் உள்ளிட்ட 13 மூத்த நிர்வாகிகளை அதிரடியாக ஜாதிய அமைப்புகளில் இருந்து விலக்கியவர் தான் மருத்துவர் ச.ராமதாஸ். இப்படியாக பற்பலரை காவு கொடுத்துத் தான் தன்னை தனிபெரும் சக்தியாக்கிக் கொண்டார் நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ்.

இதில் மருத்துவர் ச.ராமதாஸ் வளர்ச்சிக்கு வாரி, வாரி வழங்கி, டெல்லியிலும் தொடர்புகளை உருவாக்கிக் கொடுத்தும் கொடூரமாக வஞ்சிக்கப்பட்ட தலைவர்கள் உண்டு எனில் அது காலஞ்சென்ற வாழப்பாடி கூ.ராமமூர்த்தியார்.



தன் வினைத் தன்னை சுடும். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.. என்பதெல்லாம் தான் மருத்துவர் ச.ராமதாஸ் வாழ்க்கையில் இன்று 80 வயது கடந்தும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.

அதே சமயம் தன்னை இழிவுபடுத்தினார், பொய் சொன்னார், அநாகரீகமாக நடந்து கொண்டார், தன் தாயின் மீதே தண்ணீர் பாட்டிலை வீசி எறிந்தார். பாமக என்ற கட்சியை கண்ணாடியைப் போல ஒரே நாளில் நொறுக்கினார், வளர்த்தகடா மார்பில் பாய்ந்தது, எக்ஸட்ரா ..எக்ஸட்ரா என எவ்வளவோ சொன்னாலும் தன் மகனே தலைவன் என்பதில் மருத்துவர் ச.ராமதாஸுக்கு மாற்று சிந்தனை வரவில்லை  இனிமேலும் வராது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

இன்னொரு தகுதியான தலைமை தன் குடும்பத்திற்கு வெளியே கிடையவே கிடையாது. தலை எடுக்கவும் கூடாது,என்பதில் அப்பாவிற்கும், பிள்ளைக்கும் எந்தக் கருத்து மாறுபாடும் இதுவரை வருவதில்லை. மகள்கள் மீதான மருத்துவர் ச.ராமதாஸ் கொண்ட பாசத்தை அடிப்படையாக வைத்து தன்னை பதி இறக்கம் செய்து தன் மகன் லைகா பிக்சர்ஸ் தமிழ் குமரன் பதவியை பறித்த மருத்துவர் இராமதாஸ் மூலமே இழந்த அதே பதவியை பெற முன்னாள் தொடக்கப் பள்ளி ஆசிரியர் இன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் கோ.க.மணி பின்னிய வலை தான் தற்போது தந்தை மருத்துவர் ச. இராமதாஸ் மகன் மருத்துவர் அன்புமணி இடையே நடக்கும் பிரச்சினைகளின் காரணமாக பலரும் பார்க்கும் நிலையில் மற்றும் ஒரு கருத்தாக  







பாஜகவுடன் கூட்டணி கண்ட வட மாநிலங்களில் கட்சிகள் யாவும் பிளவு கண்டுள்ளன. அதில் இது வரை எந்தக் கட்சியும் விதிவிலக்கில்லை. உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் முலாயம் சிங் யாதவ் மகன் அகிலேஷ் யாதவ் கட்சி சமாஜ் வாதி ஜனதா மற்றும் பீகார் மாநிலத்தில் நிதீஸ்குமார் தலைமையில் உருவான கட்சியைப் பிளந்தனர்.  மஹாராஷ்டிரா மாநிலம் சிவசேனாவைப் பிளந்தனர். அங்கு சரத்பவார் சம்பந்தப்பட்ட தேசியவாத காங்கிரசைப் பிளந்தனர். ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுகவைப் 4 ஆகப் பிளந்தனர், தற்போது பாமகவைப் பிளக்க அப்பாவையும், மகனையும் ஒருவருக்கொருவர் எதிரியாக்கி உள்ளனர்.






எது எப்படியாயினும் இவ்வளவு சுயநலமிக்க ஒரு குடும்பத்திடம்  உழைக்கும் வர்க்கமான வன்னியர் சமூகம் சிக்கி இருக்கிறதே. அது எப்போது விடுபட்டு இயல்பு நிலைக்கு மீண்டு வரும் என்ற கவலை தான் அந்த சமூகத்தின் சிலருக்கு ஏற்படுகிறது. பேராசிரியர் தீரன், பு.தா.இளங்கோவன், பு.தா. அருள்மொழின்னு கூட வர்றதுக்கு நாலஞ்சு பேரு. எப்பவுமே இல்ல. எப்பவாவது தான். அப்படித்தான் இருந்தது மருத்துவர்.ச.ராமதாஸின் தொடக்ககாலமான 1980- ஆம் ஆண்டுகளின் நிகழ்ச்சி நிரல்கள். ஒரு அம்பாஸிட்டர் கார் 1819 எண் கொண்ட வண்டி திண்டிவனம் மைலம் சாலையில் நாம் சந்தித்துப் பேசிய காலங்களில் 




மருத்துவர். ச.ராமதாஸின் சொந்தமானது, மதிமுக டாக்டர் மாசிலாமணிக்கு சொந்தமான ஒரு தங்கும் விடுதி அருகில் இருந்த நிலையில் வேகமான செயல்பாடு, உறுதியான பேச்சாற்றல், களத்தில் பம்பரமாய் சுழன்றது முதல் முறையாக பண்ருட்டி தொகுதி முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன் சட்ட மன்ற உறுப்பினர் ஆக பாமக வின் யானைச் சின்னம் வென்றது இதையெல்லாம் பார்த்துத் தான் இஸ்லாமிய மதம் சார்ந்த தீவிர சக்திகளான குண்டர் சட்டத்தில் கைதான குனங்குடி அனீபா, ஆயக்குடியில் படுகொலை செய்யப்பட்ட பழனிபாபா, மற்றும் ஆதிதிராவிடர் பசுபதி பாண்டியன், ஜான் பாண்டியன்,  தேனி மாவட்டத்தில் இரும்பொறை குனசேகரன்,  போன்ற தீவிர ஜாதிப் போராளிகள் அவருடன் துணையாய் நின்றனர். தமிழ்நநாட்டில் எந்தவொரு குக்கிராமத்தையும்  விட்டு வைக்காமல் மருத்துவர் ச.ராமதாஸ் போன பயணத் தூரம் எத்தனையாயிம் கிலோ மீட்டர்களோ? அதை நாடும், நாமும் அறிவோம். முதல் தலைவர் பேராசிரியர் தீரன் நீக்கம் செய்து 





நிர்வாகத்துக்கு அப்போது மேட்டூர் பகுதி துவக்கப்பள்ளி ஆசிரியர் கோ.க. மணி, தன்னைப் போலவே வேகத்துக்கு அவரது சகோதரி மகன் மாப்பிள்ளை காடுவெட்டி குரு, பு.தா. அருள்மொழி மற்றும் இளங்கோவன் என்று அடுத்த நிலைக்கு கட்சி போன பிறகே - பொதுச்செயலாளர் பொறுப்பு வகித்து பின்னர் மத்திய இணை அமைச்சர் பதவியை பெற்றுத் தந்த தலித் எழில் மலை  துரோகம் செய்து விட்ட நிலையில் தான் குடும்பத்தில் யாரும் அரசியலுக்குள் வரமாட்டார்கள் என்ற உறுதிமொழியை தளர்த்தி, மகன் மருத்துவர் அன்புமணியை  அதாவது பிள்ளையை பசுமைத் தாயகம் அமைப்பிலிருந்து மாநில பொறுப்பில் கொண்டு வந்த கையோடு மத்திய அமைச்சராகவும் ஆக்கினார்.

கலைஞர் - ஸ்டாலின் உறவுபோலவே தன் குடும்ப உறவும் பெருமைபட இருக்கும் என்று நினைத்த காரணத்தால் தான் - அப்படி இல்லாமல் போனதாலே தான், 



வேதனையுடன் 'இப்படி' சொல்ல நேர்ந்திருக்கிறது மருத்துவர் ராமதாஸுக்கு.  தனது மருமகள் ஒன்றும் அரசியல் அறியாத குடும்பத்தில் இருந்து வரவில்லை அவரும் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியம் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி மகள் மற்றும் சகோதரரும் அரசியல்வாதி விஷ்ணு என்று நிலையில் பேசும் தகுதி படைத்த நபர் தான் மருத்துவர் சௌமியா அன்புமணி பலரும் ஒரு உண்மை அறியவில்லை. தற்போது. பாமக அமைப்பு ரீதியாக பலமாக இருக்கும் சேலம், தருமபுரி மாவட்டக் கூட்டங்களை அன்புமணி கடந்த 3 நான்கு நாட்களுக்கு முன்பு நடத்திய நிலையில், அக்கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர்கள் ஜி.கே.மணி, இரா.அருள் ஆகியோர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சேலத்தில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் சேலம் மேற்கு மாவட்டத்தின் சட்டமன்ற உறுப்பினர் அருள் கலந்து கொள்ள வேண்டும் என்கிற சூழல் எழுந்தது. ஆனால், பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத பட்சத்தில் மருத்துவர் ச.ராமதாஸின் ஆதரவாளராக அருள் அறியப்படுவார். இதற்கிடையே சேலத்தில் நடைபெற இருக்கின்ற பொதுக்குழு கூட்டத்திற்கான சுவரொட்டிகளில் சட்டமன்ற உறுப்பினர் அருள் பெயர் நீக்கப்பட்டு ஒட்டப்பட்டது. இந்த நிலையில் தான் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தலைவராக ”யார் பக்கம் நிற்பது?’ என்பது அந்தக் கட்சி விசுவாசிகளின் தவிப்பாக உள்ளது...! 

சுயநலம் மேலோங்கிய ஒவ்வொரு தலைவரும் தன் இறுதி நாளில் இத்தகைய அவமானங்களில் இருந்து தப்ப முடியாது. ஏனென்றால், அவர்கள் எதை விதைத்தார்களோ. அதைத் தான் அறுவடை செய்து வருகின்றனர்.

இந்த அருவருக்கதக்க  முற்றிலும் சுயநலமுள்ள இந்த தந்தை மகன் இருவரின்  சண்டை  இந்த நாட்டுக்கோ, மக்களுக்கோ எந்த விதத்திலும் பயனற்றது.

அப்பா மருத்துவர் ச. ராமதாஸ் கஷ்டப்பட்டு ஒரு இயக்கத்தை கட்டமைத்தார். ஆனால் தற்போது எடுப்பார் கைப்பிள்ளை போல மாறியதால் மகன் மருத்துவர் அன்புமணி அதை நோகாமல் அபகரித்துக் கொண்டார்.  தலைவர்கள் 80 சதவீதம் தொண்டர்கள் 90 சதவீதம் மூழுமையாக அவர் பக்கம் எனவே, மருத்துவர் ச.ராமதாஸ் பக்கம் உள்ள நியாயங்களை பார்க்க வேண்டாமா? என்கிறார்கள் சிலர்.




முதலில் பொதுத் தொண்டு செய்வதற்காக மகனை கட்சியில் பொறுப்பு கொடுத்தாரா? ’அந்த மனநிலை மகனுக்கு கடுகளவும் இல்லை’ என்பது மருத்துவர் ச.ராமதாஸுக்கு தெரியாதா?

வாஜ்பாய் அமைச்சரவையில்  ஆதிதிராவிடர்கள் பொன்னுசாமியும், தலித் எழில்மலையும், வன்னியர் என்.டி.சண்முகமும் இருந்த போது, ’’அவர்களைப் பின்னிருந்து நிர்பந்தித்து, கோடிக் கோடியாக பணம் சம்பாதிக்கிறார் மருத்துவர் அன்புமணி. உங்கள் மகனை கட்டுப்படுத்தி வையுங்கள்” என வாஜ்ய்பாயே மருத்துவர் ராமதாசை அழைத்து கடிந்து கொண்ட பிறகு தானே மகனை கேபினெட் அமைச்சராக்கினார். 






”ஐயோ இப்படி பொதுச் சொத்தை சூறையாடும் பிள்ளையை அமைச்சராக்குகிறோமே என அப்போது அவருக்கு மனம் உறுத்தவில்லையே..?’’ என பலரும் அவர் காதுபடவே கேட்ட நிலையில் 

”மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து கொண்டு, வரலாறு காணாத வசூல் வேட்டை நடத்தினார் எனக் குற்றச்சாட்டும் வந்த அப்போது ‘மகனை கேபினெட் அமைச்சராக்கியது தவறு’ என்று மருத்துவர் ச.ராமதாசுக்கு குற்ற உணர்வு தோன்றவில்லையே…? 

தோன்றி இருந்தால், இன்று பாஜக தலைமை கண்டு அஞ்சி மண்டியிட்டு இவரது மகன் கூட்டணி வைக்கக் கோரி கதறி இருக்க வாய்ப்பில்லையே…! என் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் பேசிவரும் நிலையில் 

தன் வாரிசுக்கு இடையூறாக கட்சியில் திறமைசாலிகள் யாரும் இருக்கக் கூடாது’ என எத்தனையோ பேரை  அப்போது வேட்டையாடி வெளியேற்றினார்  மருத்துவர் ச.ராமதாஸ். ஆனால் தற்போதோ, ”அரசியலில் வாரிசு என்பது கிடையாது” என திருவாய் மலர்கிறார். உடனே, அவரே தான் பேசியதற்கு முரணாக, ” மருத்துவர் அன்புமணியை கட்சியை விட்டு வெளியேற்ற நான் என்ன முட்டாளா? இன்னும் ஓரிரு ஆண்டுகள் பொறுமை காத்திருந்தால் நானே அவருக்கு முடிசூட்டு விழா நடத்தியிருப்பேன்’’ என்கிறார்.

அதாவது, தன்னை அவமானப்படுத்தினாலும், நெஞ்சிலே குத்தினாலும், உயிருள்ள தன்னை  உதாசினம் செய்துவிட்டு, உற்சவராக்கி ஏமாற்றினாலும், எல்லாமே அய்யா தான் என சொல்லிக் கொண்டே தன்னை அதள பாதாளத்தில் தள்ளினாலும், மகனே இந்தக் கட்சியின் அடுத்த தலைவர். 2026 தேர்தலுக்கு பிறகு அன்புமணி பொறுப்பில் விடுகிறேன்’’ என்கிறார்,  மருத்துவர் ச. ராமதாஸ்.

ஆக, பாதிக்கப்பட்டவரே, பாதிப்புக்கு உள்ளாக்கியவரை விட்டால், தனக்கு நாதியில்லை என்கிறார் என்றால், இதில் தான் அரசியல் மறைந்துள்ளது .. அதாவது நீயும் நானும் ஒன்னு அறியாதவன் வாயில் மண்னு என்பதாக  

நிஜமாகவே இவர்கள் இருவரும் கடுமையாக முரண்படுகிறார்களா..? இவர்கள் ஒன்றிணையும் வாய்ப்புகள் உண்டா? இல்லையா…? இதில் வெல்லப் போவது யார்? முழுமையாக  நாம் அறிந்தவரை கட்சியின் தற்போது செயல் தலைவர் ஜி.கே.மணி கட்சியை உடைத்து திமுக பக்கம் சென்றால் பாதிப்பு வரும் ஆகவே அப்பாவும் மகனும் சேர்ந்து பேசி உடைத்து விளையாட்டு நடத்துவதால் தற்போது ஜி.கே.மணி அரசியல் எடுபடவில்லை என்பதே உண்மை.

இரண்டு பக்கமும் உண்மையுமில்லை, நேர்மையுமில்லை…என்ற நிலையில், விலகி நிற்பதே யோக்கியமானவர்கள்  எடுக்கக் கூடிய முடிவாக இருக்கும் என நான் நம்புகிறேன். இந்த நிலையில் மதுரைக்கு வந்த பாரதீய ஜனதா கட்சியின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 

2026-ஆம் ஆண்டி ல் வெற்றி பெற்றால் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான்  என்பதைத் தெளிவுபடுத்தினார்.

கூடவே  தமிழ்நாட்டில் அண்ணாமலை தான்  பாஜக   என்பதையும்  தெளிவுபடுத்திக்ககொண்டார். எடப்பாடி கே.பழனிச்சாமியின்  மகனை வைத்து  அதிமுவை கூட்டணிக்குள்  கொண்டு வந்த பாஜக  இப்போது மருத்துவர் ச.ராமதாசின் மகனை வைத்து பாமகவுக்கு வலை விரித்து விட்டது .

ஆக தேசிய ஜனநாயகக் கூட்டணி என்பதை விட தேசிய மகனாயக் கூட்டணி  என்பதே  அதற்கு  பொருத்தமாக இருக்கும். எனவும் பொதுவெளியில் பேசப்படுகிறது.

ஊழல் ஒழிப்பு  பாஜகவின் பிரதான நோக்கம்  என்றால் எடப்பாடி கே. பழனிச்சாமி என்ன கோசலை நாட்டை ஆண்ட இராமபிரானின் மறு அவதாரமா. எனவும் வினா எழுகிறது.

திரைமறைவில் மகனையும்  சம்மந்தியையும்  வைத்துக் கொண்டு எடப்பாடி கே.பழனிச்சாமி நடத்தியது கடந்த காலத்தில் குடும்ப ஆட்சி இல்லையா. இதை நாட்டின் மக்கள் கேள்வி கேட்டார்களா ? இல்லையே ! 

ஒரு கட்சியை தொண்டர்களின் முடிவுக்கு மாறாக ஊழல் செய்து சம்பாதித்த பணத்தைக் கொண்டு கட்சி விதிகளையே திருத்தி அபகரித்துக் கொண்டு 

மக்கள் மன்றத்தில் பத்துத் தேர்தல்களில்  தொடர்ந்து  தோல்வி ஏற்பட்ட ஒரு துரோகத் தோரணத்திற்கு  துணை நிற்பதோடு 

அந்த  எடப்பாடி கே.பழனிச்சாமிக்காக  தங்கள் கட்சியின் மாநிலத் தலைமையையே மாற்றி  எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு என்ன தான் பாஜக முட்டுக் கொடுத்தாலும் 

எடப்பாடி கே.பழனிச்சாமியை முதலமைச்சர்  வேட்பாளராக முன்னிறுத்தி ஒருக்காலமும் தமிழ்நாட்டில் வெற்றி பெற  முடியாது என்பதே பாஜக அறிந்த உண்மை.

ஆம்.. பூனையின்  தலைமையில் புலியும்  தோற்றுவிடும் 

புலியின் தலைமையில் பூனைகளும்  வென்றுவிடும் எனும்  சாண்க்யன் பொன்மொழியை போல்  

பதினோறாவது தோல்வியை பரிசாக்கிவிட பாஜகவில் வாய்ப்புகள் தரமாட்டார்கள்  

ஒரு அரசியல் கட்சிக்கு வியூக வகுப்பாளர் என்பது அந்தக் கட்சியின் தலைவரோ, செயலாளரோ,  அக்கட்சியை சேர்ந்த யாரோ ஒருவரோ அல்லது பலரும் இணைந்து செயல்படுவதோ தான் மரபு.  அப்படி பாஜகவுடன் கூட்டணி சேராவிட்டால் நீ தான் எனக்கு கொள்ளி வைக்க வேண்டும் என மகன் அப்பாவிடம் சொல்லும் அளவுக்கு பாஜக சிறையில் தள்ளிவிடுமோ என பயம் தான் 

இதற்காக பாஜகவுடன் கூட்டணி வைக்க சம்மதம் தெரிவிக்க வேண்டியதாயிற்று என்பது தான் மருத்துவர் ச.ராமதாஸ் கூற்று!

அரசியலில் முதலில் துணிச்சல் தான் முக்கியமான தகுதி. காங்கிரசால் தமிழ்நாடு கனிமொழி கருணாநிதி சிறைக்கு சென்றார். பாஜகவினால் தெலுங்கானா சந்திரசேகர் ராவின் மகள் கவிதா சிறை சென்றார். சிறைக்கு பயந்து கட்சியின் எதிர்காலத்தை பலி கொடுத்திடாமல் மருத்துவர் அன்புமணி சிறையில் தள்ளினால் என்ன? பார்த்துக் கொள்ளலாம்..என்று தந்தை சொல்லை கேட்டிருக்கலாம். என் திமுக கூட்டணிக் கட்சிகள் தரப்பில் பலரும் பேசும் நிலையில் 

சொகுசாகவே வாழ்ந்து பழக்கப்பட்ட மருத்துவர் அன்புமணிக்கு பயம் இருப்பது இயல்பு. மருத்துவர் ராமதாஸ் தான் தைரியம் தந்திருக்க வேண்டும். மகன் இழுத்த இழுப்பிற்கெல்லாம் 20 ஆண்டுகளாக ஒத்துழைத்து விட்டு இப்போது கறார் காட்டி என்ன பயன்?

அதில் குளிர் காய்வது ஜி.கே.மணி போல ஒரு சிலர் தான்.

உண்மையில் சித்தாந்தத்திலும், கொள்கையிலும்  பாமகவின் அடிநாதமான சமூக நீதி கொள்கைக்கு ஒத்துவராத கட்சி எனத் தெரிந்தே கடந்த காலத்தில் பாஜக கூட்டணி அமைத்தத பாமக 

மக்கள் விரோதச் சட்டங்கள், 

விவசாயிகளை வீழ்த்தும் கொள்கைகள்,

தொழிலாளர்களை அடிமைப்படுத்தும் கார்ப்பரேட் ஆதரவு நிலை..

ஆகிய தன்மை கொண்ட பாஜகவிடம் பசை போல ஒட்டிக் கொண்டதற்கு மருத்துவர் அன்புமணி எதைச் சொல்லி நியாயம் கற்பிப்பார்? என் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் பதறும் நிலையில் 

பெற்றெடுத்த தாய் தந்தையை பகைத்துக் கொண்டு,

தன்னை நம்பி இருக்கும் பெருந்திரளான வன்னிய மக்களின் எதிர்காலத்தை கேள்விகுறியாக்கி,

தமிழ்நாடு மண்ணுக்கும், மக்களுக்கும் கேடு செய்யும் பாஜகவை ஆதரிப்பதற்கு.

சரியான காரணங்களை சொல்லட்டும் மருத்துவர் அன்புமணி. அப்ப குடியரசுத் தலைவர் மாதிரி, ரப்பர் ஸ்டாம்பாக இருங்கன்னு சொல்றாப்ல!

டாக்டர் ராமதாஸ் அவர்கள் அனுமதியின்றி, அவரது போட்டோவையும், கையெழுத்தையும் பயன்படுத்தி பாமக உறுப்பினர் அட்டையை அன்புமணி விநியோகிக்கிறார் என புகார் தெரிவிக்கின்றனர், பெரியவர் மருத்துவர் ச.ராமதாஸ் ஆதரவாளர்கள்!

தற்போது மருத்துவர் அன்புமணி செயல் தலைவர் தான். டாக்டர் ராமதாஸ் தான் தலைவர். ஆனால், இந்த உறுப்பினர் அடையாள அட்டையில் ராமதாஸ் நிறுவனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஏற்புடையதல்ல என்கிறார்கள்.

ஏற்கனவே மருத்துவர் ச. ராமதாஸ் அறிவித்த மாவட்டச் செயலாளர்கள், தலைவர்கள் கொண்ட 20 பேர் பட்டியல் அறிவிப்பை செல்லாது என மருத்துவர் அன்புமணி கூறிவிட்ட நிலையில், கட்சித் தலைவர் நான் தான். மருத்துவர் ராமதாஸ் நிறுவனர் மட்டுமே. தற்போது மருத்துவர் ராமதாஸ் எந்த விதத்திலும் கட்சியில் அதிகாரம் செலுத்த முடியாது என்பதை தன்னுடைய செயல்பாடுகள் மூலம் மருத்துவர் அன்புமணி உறுதிபட வெளிப்படுத்துவதாகவே தெரிகிறது.

வயதான தந்தையால் என்ன செய்துவிட முடியும்..? என துச்சமாக தூக்கி எறிந்து தன் போக்கில் செல்கிறார் தனயன்.

ஏற்கனவே, இந்தக் கட்சி வன்னிய மக்களிடம் இருந்து அன்னியப்பட்டு போனது. இப்படி தந்தையும், தனயனும் முட்டி மோதிக் கொண்டால், மக்களிடம் என்ன மரியாதை கிடைக்கும்....?ஒவ்வோரு குடும்பமும் ஒரு மறைக்கப்பட்ட சரித்திரத்தைக் கொண்டிருக்கிறது.. அதில் காயங்களும், தோல்விகளும் ஏமாற்றங்களும், இரகசியப் பேச்சுக்களும், உடைந்த மண்பாண்டத்தைப் போன்று ஒன்று சேர்க்க முடியாதபடி சிதறிக் கிடக்கின்றன. உண்மையில் குழந்தைகளால் தான் பல குடும்பங்கள் பிளவுபடாமல் இருக்கின்றன. யாவர் வீட்டிலும் தூசி படிந்து இருப்பது போல மனக் குறைகளும் வெளிப்படுத்த முடியாத ஆசைகளும் படிந்து கிடக்கின்றன. வாா்த்தைகளை மென்று விழுங்கி, விழுங்கியே பெண்களின் தொண்டையில் ஆறாத ரணம் ஓடியிருக்கிறது. காற்றாடி அலைவது போல பல குடும்பங்கள் எங்கே நிலை கொள்வது எனத் தெரியாத ஏதோ ஒரு அந்தரத்தில் மிதந்து கொண்டு இருக்கிறன. சந்தோஷம் ஊதுபத்திப் புகையைப் போல எங்கோ ஒரு மூலையில் மெலிதாக வீட்டைச் சுற்றி விட்டு மறைந்து விடுகிறது..

2014 தேர்தலில் மோடியின் வெற்றிக்கு பிறகு இந்தியாவில் தொழில்முறை வியூக வகுப்பாளர்கள் என்று ஒரு இனம் புதிதாக உருவாகியது.

ஆனால் அவர்கள் கூட வியூக வகுப்பாளர்களை ரகசியமாகத்தான் வைத்திருந்தார்கள். 2021 தேர்தலில் திமுகவிற்கு வேலை செய்ய வந்தபோதுதான் தமிழ்நாட்டில் அரசியல் ஆர்வமுள்ளவர்களுக்கு  பிரசாந்த் கிஷோரை தெரியவந்தது. உண்மையில் 2019 நாடாளுமன்ற தேர்தலை ஒப்பிட்டு பார்க்கையில் 2021 சட்டமன்ற தேர்தல் திமுகவிற்கு பல இடங்கள் சரிவைதான் தந்தது. குறிப்பாக மேற்கு மற்றும் வடக்கு மாவட்டங்கள் சில இடங்களில் மொத்தமாக திமுக வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு வியூகம் வகுத்து கொடுத்த சுனில் கணுகோலு, 2021 தேர்தலில் கடைசி நேரத்தில் அதிமுகவிற்கு வியூக வகுப்பாளராக களமிறக்கப்பட்டார். அவரின் வேலை முறையால் தான் அதிமுக தன்னை முழுமையாக அழிவில் இருந்து காப்பாற்றிக் கொண்டது.

இதை புரிந்து கொண்டாலே, தமிழ்நாட்டில் பிரசாந்த் கிஷோர் ஒரு தோல்வியடைந்த அரசியல் வியூக வகுப்பாளர் என்பது புரியும். இவர்களை வெளிப்படுத்துகின்றனர். 

இவை அனைத்தையும் விட மிக முக்கியமானது என்னவென்றால், அரசியல் வியூக‌ வகுப்பாளர் யார் என்பதை வெளி உலகிற்கு காட்டக்கூடாது. இவர்கள் கட்சி நிர்வாகத்தில் தலையிட கூடாது. இவர்கள் சம்பளம் வாங்கி விட்டு இன்று இருப்பர் நாளை போய்விட்டு வேறு கட்சிக்கு இந்த வேலையை பார்ப்பார்கள.அப்படி மீறிக் காட்டினால் இந்த பழமொழி உங்களுக்கு பொருந்தும். 

"வேர் வெளியில தெரிஞ்சா மரம் பட்டுப் போயிடும்"அதிமுக வின் பாரம்பரிய வாக்குகளில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளை அதிமுகவிலிருந்து உடைந்த அமமுக கடந்த தேர்தல்களில் தனதாக்கிக்கொண்டுள்ளது.

சசிகலா நடராஜன் அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆக பொறுப்பேற்றால் என்னை விட சந்தோஷப்படப்போவது வேறு யாராகவும் இருக்க முடியாது. ஆனால் எப்படி சசிகலா நடராஜன் அதிமுக வின் பொதுச் செயலாளர் ஆவார், அடிப்படை தெரியாத ஒரு அரசியல் கூட்டம்  மொத்தமாக எடப்பாடி கே. பழனிசாமிக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்துட்டு சேவகம் செய்துக் கொண்டிருக்கிறார்கள்,  சின்னம்மா எனும் சசிகலா நடராஜன் எப்படி அதிமுக விற்கு பொதுச் செயலாளராக முடியும்..?  சட்டப் போராட்டம்  மட்டுமே தீர்வாகாது இங்கு பாஜக வை மீறி ஒன்னும் பண்ண முடியாது என்பதே எதார்த்தம்.  சின்னம்மா எனும் சசிகலா நடராஜனுக்கு இருக்கும் ஒரே ஆப்ஷன் அதிமுகவில் இருந்து பிரிந்து வந்த அமமுக மட்டும்.ஒத்தைக் காலில் நின்று பார்த்தார்கள் பிரேமலதாவும், சுதிஸும்!

ராஜ்ய சபாவிற்கான சீட்டு தந்தே ஆகவேண்டும்…என!

அதுவும் எடப்பாடி கே.பழனிச்சாமியின் வீடுதேடிப் போய் ஒன்றரை மணி நேரம் பேசிப் பேசி அழுத்தம் தந்துள்ளார் சுதீஸ்.

ம்கூம், அசைந்து கொடுக்கவில்லை போல எடப்பாடி கே.பழனிச்சாமி!

உங்களுக்கு ராஜ்யசபா சீட்டு தருவதில் எங்க கட்சியில யாருக்கும் உடன்பாடில்லை. அவங்க கூட நாம நாடாளுமன்றத்தில் கூட்டணி வைத்ததன் மூலம்  நமக்கு எத்தனை தொகுதியில் வெற்றி கிடைத்தது. ஒரே ஒரு தொகுதியின் வெற்றிக்கு கூட தே.முதி.க உறவு பலன் தரவில்லையே…”என்கிறார்கள். 

சரி, ராஜ்யசபா கேட்கிறீர்கள். சட்டமன்றத்தில் கணிசமாக இல்லாவிட்டாலும் நான்கைந்து சட்ட மன்ற உறுப்பினர்கள் இருந்தாலும் பரிசீலிக்கலாம். ஒரு உறுப்பினர் கூட இல்லாத நிலையில் இவ்வளவு அழுத்தம் தருகிறீர்களே.. எங்க கட்சியிலேயே ஒரு டஜன் பேர் கேட்டுகிட்டு இருக்காங்க… முடியாதுன்னு சொன்னதாக கேள்விப்பட்டேன்.

''சரி, அப்படியானால் 2026 லாவது தர வேண்டும்''' என்றார்களாம். 

'சரி, பார்க்கலாம்'னு சொல்லி அனுப்பி இருக்கிற நிலையில் 

ஆக, தே.மு.தி.க இந்த முறை, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில்  திமுக, அதிமுக என இரண்டு தரப்பிலும் மாறி, மாறி கூட்டணிப் பேரம் பேச வாய்ப்பில்லாத நிலை உருவாக்கப்பட்டு இருக்கிறது என நினைக்கிறேன்.

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில்  சில தொகுதிகளிலாவது தே.மு.தி.க கூட்டணியால் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு உறுதிபடுத்தப்பட்டது என்ற அளவுக்கேனும் குறைந்தபட்ச திருப்தி கிடைத்தால் ராஜ்ய சபா அப்போது கிடைக்கலாம். தற்போது கே.பி.முனுசாமி சொல்லி இருந்தாலுமே கூட, பலன் இல்லாவிட்டால் மீண்டும் தொங்கலில் விட்டுவிடுவார் எடப்பாடி கே.பழனிச்சாமி என்றே தோன்றுகிறது.

ஏனென்றால், நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்திருக்கும் பாஜகவையே ராஜ்யசபா எதுவும் கேட்டு வந்திடாதீங்கனு தள்ளி வச்சிருக்காங்கன்னா சும்மாவா?

விஜயகாந்தின் மனைவி, மைத்துனர் என்பதால் மிக எளிதாக தேமுதிகவின் அதிகார மையத்தை ஆக்கிரமிக்க முடிந்தது. அதே போல எல்லா பதவிகளும் எளிதில் கிடைத்துவிடாது என்ற புரிதல் இவங்களுக்கு இப்போதாவது வந்திருக்குமா? தெரியவில்லை.  ஆக பாமக, தேமுதிக, அதிமுக ஆகிய கட்சிகள் பாஜகவினைச் சார்ந்தே தேர்தல் களம் காணும் என்பதே எதார்த்த நிலை.. அதில் வேடிக்கை என்ன வென்றால் இதுவரை பிறந்த நாள் கொண்டாடிய நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்கள் கூறாத பாஜக,  பாமக, அதிமுக, அமமுக, தேமுதிக என பலரும் கூறிய காட்சிகள் தான் இந்த கூட்டணி குறித்து பலரும் பேசும் நிலை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...