மதுரை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அருள்மிகு மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார்.
முன்னதாக, அமித்ஷாவிற்கு, மதுரை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தார். மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடந்த பாரதிய ஜனதா கட்சியின், நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க அமைச்சர் அமித்ஷா வந்துள்ளார். மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்த அமித்ஷாவிற்கு, மதுரை ஆதினம் வெளியிடும் தமிழாகரன் இதழையும், திருஞானசம்பந்தரின் புத்தகத்தையும் அவருக்கு ஆதினம் வழங்கினார்.
அருள்மிகு மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் சார்பில் அமித்ஷாவுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது மதுரையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ள மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார். நயினார் நாகேந்திரனைத் தொடர்ந்து அண்ணாமலையும் சந்தித்துப் பேசினார். அண்ணாமலை ஆதரவாளர்கள் அ.தி.மு.க. கூட்டணிக்கு எதிராக கருத்துக்கள் கூறி வரும் நிலையில் அமித்ஷாவுடன இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
சமூக வலைளத்தளத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை ஆதரவாளர்கள் தொடர்ந்து கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், அ.தி.மு.க.வுடனான கூட்டணிக்கு பிறகான களநிலவரம் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடுத்து வர உள்ளது கூட்டணி ஆட்சி தான் என் தெளிவு படுத்திய நிலையில் தற்போது அதிமுகவில் எடப்பாடி கே பழனிச்சாமி தரப்பில் இருந்து இதுவரை பதில் வரவில்லை. மேலும் தமிழகத்தின் எலன் மாஸ்க் தான் ஆடிட்டர் குருமூர்த்தி....! எனவும் பேசப்படுகிறது
பின்னால் வந்த முன்னாள் மேயர் சைதை துரைச்சாமி ..
குருநாதர் கூடங்கள்.
"சொன்னாலும் புரியாது மண் ஆளும் வித்தைகள்". என்ற நிலையில் மருத்துவர் ராமதாஸ்- மருத்துவர் அன்புமணி இடையே சமாதானம் ஏற்பட்டிருப்பதாக பாமக அரசியல் குழுத் தலைவர் முன்னாள் தலைவர் பேராசிரியர் தீரன் பேட்டி அளித்திருக்கிறார் மகிழ்ச்சி ஜி.கே.மணியை புறக்கனித்த வரை. பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், “ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள மகளிர் மாநாட்டு பணிகளை மருத்துவர் அய்யா ராமதாஸ் கவனிக்கச் சொல்லி இருக்கிறார். ஆடிட்டர் குருமூர்த்தி அவரது நீண்ட கால நண்பர் என்ற முறையில் மருத்துவர் ராமதாஸை சந்தித்தார்.
மருத்துவர் ராமதாஸ்- அன்புமணி இடையே சமாதானம் ஏற்பட்டுள்ளது. நல்ல செய்தி வரும் என்று ராமதாஸ் கூறியதால் சமாதானம் என்றே எடுத்துக்கொள்ளலாம்” என்று கூறியிருக்கிறார். ஜி.கே.மணி இப்போது சீன் அவுட் என்பதே பாமக அரசியல் களம் ஆனால் சென்னை போகிறேன், அங்கு தான்.- குருமூர்த்தி சந்திப்பு
பாமக-வில் தந்தை - மகன் விரிசல் முற்றிய நிலையில், கடந்த வியாழக்கிழமை (ஜூன் 5) காலை பாமக தலைவர் அன்புமணி, பாமக நிறுவனர் ராமதாஸை சந்திக்க தைலாபுரம் வந்தார். அன்புமணி வந்து சென்றதுமே, ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மேயர் சைதை துரைசாமி தைலாபுரத்தில் ராமதாஸை சந்தித்தனர்.
தந்தை உடனான சந்திப்பு குறித்து அன்புமணி எதுவுமே தெரிவிக்கவில்லை. ஆனால், 'நட்பு ரீதியிலான சந்திப்பு மட்டுமே' என்று ராமதாஸ் உடனான சந்திப்பு குறித்து பட்டயக் கணக்கர் குருமூர்த்தி கூறினார்.
தைலாபுரம் தோட்டத்தில் ஆடிட்டர் குருமூர்த்தி வந்த பின்னர்
சென்னை புறப்படும் போது செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், "நான் சென்னைக்கு செல்கிறேன். அங்கு தான் எனது மகள்கள், குழந்தைகள், கொள்ளுப்பேரன் அனைவரும் இருக்கிறார்கள். நான் செய்தியாளர்களை செவ்வாய்க்கிழமை சந்திக்கிறேன். சென்னைக்கு நான் செக்-அப்பிற்காக செல்லவில்லை. I am Alright" என்று கூறினார்.
குருமூர்த்தி உடனான சந்திப்பு குறித்து கேட்டப்போது, 'பேசிக்கொண்டிருக்கிறார்கள். நான் குருமூர்த்தியை மிகவும் மதிக்கிறேன். எங்களுடையது நீண்ட கால நட்பு. அதே மாதிரி சைதை துரைசாமி உடனும் 30 ஆண்டுகால நட்பு" என்று பதிலளித்துள்ளார் ராமதாஸ்.
'நான் பாஜகவிற்காக இங்கு வரவில்லை' என்று குருமூர்த்தி கூறிய நிலையில், 'பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது' என்று ஹின்ட் கொடுத்துள்ளாரா ராமதாஸ் என்கிற கேள்வியும் எழுகிறது.!மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமானம் மூலம் மதுரை வந்த நிலையில் சிந்தாமணி பகுதியிலுள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருந்தார். அமித்ஷா வருகையையொட்டி, மதுரையில் டிரோன்கள் பறக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டிருந்தது. தடையை மீறி டிரோன் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் காவல்துறை, மற்றும் பாதுகாப்பு படையினரும் அதிர்ச்சியடைந்தனர். அதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
கருத்துகள்