102 வயதில் காலமான கேரளாவின் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் அச்சுதானந்தன்.
ஒரு போராளியின் வாழ்வியல்:- வேலிக்ககத்து சங்கரன் அச்சுதானந்தன் 20 அக்டோபர் 1923 ஆம்- தேதி பிறந்து 21 ஜூலை 2025 ஆம் தேதி காலமானார் கேரளா மாநிலத்தின் இருபதாவது மற்றும் முன்னாள் முதல் அமைச்சர். 2011 ஆம் ஆண்டு கேரளா சட்டப்பேரவைத் தேர்தல்களில் இவரது கூட்டணி அறுதிப் பெரும்பான்மையைப் பெறாததால் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றினார் . காமரேட் வி எஸ் என அழைக்கப்படும் அவர், 1985 ஆம் ஆண்டு முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-ன் நிர்வாகக்குழு உறுப்பினராவார்.
வி.எஸ். அச்சுதானந்தன்கேரளாவின் ஆலப்புழை மாவட்டம், சங்கரன் அக்கம்மா தம்பதிக்குப் பிறந்த அச்சுதானந்தன், சிறு வயதிலேயே வறுமை. தாயை நான்கு வயதிலும் தந்தையைப் பதினொரு வயதிலும் இழந்தவர், ஏழாவது வகுப்புடன் பள்ளிக் கல்வியை நிறுத்தும் கட்டாயம் ஏற்பட்டது. ஒரு துணிக் கடையில் வேலை பார்க்க ஆரம்பித்தவர், பின்னர் ஒரு கயிறுத் தொழிற்சாலையில் பணிபுரிந்தார்.தொழில் சங்க ஈடுபாட்டின் மூலம் அரசியலுக்கு வந்த வி.எஸ், அச்சுதானந்தன் 1938 ஆம் ஆண்டு மாநில கங்கிரஸில் சேர்ந்தார். கருத்து வேறுபாடுகளால், 1940ஆம் ஆண்டு காங்கிரஸிலிருந்து வெளியேறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினரானார். பின்னர் இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்களித்தவர், ஐந்து வருடத்துக்கும் மேலாகச் சிறையிலடைக்கப்பட்டார். 1964 ஆம் ஆண்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து சென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நிறுவிய 32 உறுப்பினர்களுள் இவரும் ஒருவர். 12 ஜூலை 2009 ஆம் நாளன்று நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட சரிவிற்காக, கட்சித் தலைமையால் கட்சியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
2011-ஆம் ஆண்டுத் தேர்தலில் வெற்றி பெற்று, பதின்மூன்றாவது சட்டமன்றத்தில் உறுப்பினர் ஆனவர் மலம்புழா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். வி. எஸ். அச்சுதானந்தன் கே. வாசுமதி என்பவரை மணந்தார். இவர்களுக்கு வி.வி. ஆஷா என்ற மகளும், வி. ஏ. அருண் குமார் என்ற மகனும் உள்ளனர்.
2023 அக்டோபர் 20 ஆம் தேதியன்று, அச்சுதானந்தன் 100 வயதை எட்டினார். இவரே 100 வயதை எட்டிய கேரளாவின் முதல் முதலமைச்சராவார்.
அச்சுதானந்தம் 2025 ஜூலை 21 ஆம் தேதியன்று திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தனது 101-ஆவது அகவையில் காலமானார்.



கருத்துகள்