தமிழ்நாட்டில் 11 ஐஏஎஸ் உயர் அலுவலர்களை பணியிடமாற்றம் செய்து அரசின் தலைமைச் செயலாளர் உத்தரவு.
தமிழ்நாடு அரசுப் பணியில் மூன்றாண்டுகள் ஒரே பணியிடத்தில் பணியாற்றிய நபர்களை இடமாற்றம் செய்வது வழக்கமான நடைமுறை தான் அதேபோல் சட்ட மன்றப் பேரவை, நாடாளுமன்றத் தேர்தல் நேரங்களில் அனைத்து நிலைகளிலும் இடமாற்றங்கள் செய்யப்படும்.
அந்த வகையில் கடந்த மூன்று மாதங்களாக ஐஏஎஸ் உயர் அலுவலர்கள் தொடர்ச்சியாக இடமாற்றம் செய்யப்படுகின்றனர். ஜூன் மாதத்தில் மட்டும் 9 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 55 ஐஏஎஸ் உயர் அலுவலர்கள் ஒரே நேரத்தில் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். இதன் பின் ஜூலை மாதம் துவக்கத்தில் 9 ஐஏஎஸ் உயர் அலுவலர்களைப் பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்ட நிலையில் மீண்டும் ஜூலை மாதத்தின் கடைசி நாளில் மீண்டும் 11 ஐஏஎஸ் உயர் அலுவலர்களை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளதில்
நிதித்துறை செலவினச் செயலாளராக பிரசாந்த் மு வடநெரே, நிதித்துறை இணைச் செயலராக ராஜகோபால் சுன்கரா, நில அளவைத்துறை இயக்குநராக தீபக் ஜேக்கப், போக்குவரத்து, சாலைப் பாதுகாப்பு ஆணையராக கஜலட்சுமி, கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குநராக கவிதா ராமு, குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநராக சமீரன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் மீன்வளத்துறை இயக்குநராக முரளீதரன், வருவாய் நிர்வாக ஆணையராக கிரண் குராலா, கோயம்புத்தூர் வணிக வரித்துறை இணை ஆணையராக தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், சென்னை வணிக வரித்துறை இணை ஆணையராக நாராயண சர்மா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல் போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஐடக் சிருவுக்கு கூடுதலாக இயற்கை வளங்கள் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. உடல்நலக் குறைவு காரணமாக ஓய்விலிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலகம் வந்த முதல் நாளே இந்த உத்தரவு வெளியானது.
கருத்துகள்