மடப்புரம் லாக்கப் மரணக் கொடுங் குற்ற வழக்கில் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதிக்குள் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
மடப்புரம் லாக்கப் மரணக் கொலை வழக்கில் ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்குள் சிபிஐ விசாரணை முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு .
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் தற்காலிகத் தனியார் காவலாளி அஜித் குமார் மீதான நகை திருட்டு விசாரணையின் போது தனிப்படை காவலர்கள் ஆயுதங்கள் மூலம் தாக்கியதில் உயிரிழந்தார். இந்த வழக்கில் ஆறு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 5 காவலர்கள் கைது செய்யப்பட்ட வழக்கை சிபிஐ-க்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிடப்பட்டது நிலையில், அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பான வழக்குகள் சென்னை உயர் நீதி மன்றம் மதுரை கிளை நீதிபதிகள் எஸ்.எம்.சுப் பிரமணியம், ஏ.டி. மரிய கிளாட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்த போது. நீதி விசாரணைக்கு நியமிக்கப்பட்ட மதுரை மாவட்ட நீதிபதி சிறப்பாக விசாரணை நடத்தினார். அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெனரல் அஜ்மல்கான், “வழக்கு விசாரணை சிபிஐக்கு மாறிவிட்டது. அஜித்குமாரின் சகோதரருக்கு ஆவின் நிறுவனம் மூலம் அரசு வேலை வழங் கப்பட்டது.
வீட்டு மனைப் பட்டாவும் வழங்கப் பட்டுள்ளது. இதனால் தனியாக இழப்பீடு எதுவும் வாழத் தேவை இல்லை” என்றார். மாரீஸ்குமார், ஆயிரம் செல்வக்குமார், அருண் சுவாமிநாதன், தீரன் திருமுருகன் ஆகியோர் வாதிடும் போது, “சிபிஐ விசாரணை முடிக்க தாமதமாகும்.
எனவே, வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு மாற்ற வேண்டும். அஜித்குமார் உயிரிழந்த வழக்கு மட்டுமே சிபிஐக்கு மாறியது. நிகிதா அளித்த புகாரின் பேரில் அஜித்குமார் மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு சிபிஐக்கு மாற்படவில்லை.
அஜித்குமார் குடும்பத்துக்கு அரசு சார்பில் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். அஜித்குமாரின் சகோதரர் உட்பட 3 பேரைக் காவலர்கள் கடுமை யாகத் தாக்கியதால், அவர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்” என்றார்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: மாவட்ட நீதிபதி விசாரணை அறிகையில் அஜித்குமார் இறப்பு காவல் மரணம் என்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. உள்ளூர் காவலர் துறை பணியாளர்களால் மரணம் ஏற்படுத்தப்படும் வழக்குகள், அதே காவல்துறை சார்ந்த அலுவலர்கள் விசாரிப்பதால் நீதி கிடைக்கும் வாய்ப்பில்லை, உண்மை வெளிவராது. அந்த வகையில் அஜித்குமார் வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றி அரசு உத்தரவிடப்பட்டது.
மாவட்ட நீதிபதி அறிவாலயத்தில், வழக்குத் தொடரப்பட்ட முக்கிய ஆதாரங்கள் அழித்தொழிக்கப்படவில்லை எனக் கூறப்பட்டது. இது சிபிஐ விசாரணைக்கு பெரிதும் உதவும். அஜித்குமார் மீதான திருட்டு வழக்கையும் சிபிஐ விசாரிக்க வேண்டும். அஜித்குமார் உயிரிழப்பை மாவட்ட நீதிபதியும், தமிழ்நாடு அரசு காவல் மரணம் என ஒப்புக்கொண்ட நிலையில், அவரது குடும்பத்துக்கு அரசு உரிய இழப்பீடு வழங்கவேண்டும். இவ்வழக்கின் விசாரணை அலுவலர் மறும் விசாரணைக் குழுவை சிபிஐ இயக்குநர் ஒரு வாரத்தில் நியமிக்க வேண்டும்.
சிபிஐ அலுவலர் விசாரணயை உடனடித் தொடங்கி, ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் விசாரணை நீதி மன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேண்டும். சிபிஐ விசாரணைக் குழுவுக்குத் தேவையான வசதிகள் முற்றிலும் போதிய ஒத்துழைப்பை அரசு காவல்துறையும் வழங்க வேண்டும். வழக்கின் சாட்சிகளுக்குப் பாதுகாப்புப் பாதுகாப்பு வழங்க வேண்டும். அஜித்குமார் குடும்பத்துக்கு இடைக்கால இழப்பீடு வழங்குவது தொடர் பாக அரசு 2 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும். என நீதிபதிகள் உத்தரவில் கூறுகின்றனர்.
சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை அமர்வில் வழக்கு WP(MD) 17975/2025, மற்றும் WMP(MD) 13756/2025, WMP(MD) 13754/2025, WMP(MD) 13755/2025, உள்ளிட்ட பொது நபர் வழக்கில் வழக்கறிஞர் வழக்கறிஞர் கார்த்திக் ராஜா எதிர் தரப்பினர் தமிழ்நாடு உள்துறைச் செயலாளர் மற்றும் 9 பேர். மீது தாக்கல் ஆகி மூத்த வழக்கறிஞர்கள் ஹென்றி பேட்ரிக் டிபேன் மற்றும் ஆர்.கருணாநிதி மற்றும்
ஜி.பெருமாள் அருண் சுவாமிநாதன் ஆகியோர் ஆஜரான நிலையில் வழக்கு விசாரணைக்கு வரும் முன்.முதல் மூன்று நாட்கள் நடந்த நீதி விசாரணையின் போது, ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார், கோவில் அலுவலர் பெரியசாமி, அஜித்குமாரை தாக்கியது தொடர்பான வீடியோவை உயர்நீதிமன்றத்தில் வழங்கிய கோவில் பணியாளர் சக்தீஸ்வரன், கோலில் பணியாளர்கள் பிரபு, கார்த்திக் ராஜா, அஜித் குமாரின் தாயார் மாலதி, அவரது சகோதரர் நவீன்குமார், திருப்புவனம் அரசு மருத்துவமனை மருத்துவர் கார்த்திகேயன், ஆட்டோ ஓட்டுநர் அய்யனார், அஜித் குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்த மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சதாசிவம், ஏஞ்சல் உள்ளிட்டோரிடம் நீதிபதி முறையாக விசாரணை நடத்தினார். நான்காவது நாளான வெள்ளிக்கிழமை காலை நீதிபதி ஜான் சுந்தர் லால் சுரேஷ் திருப்புவனம் காவல் நிலையத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார். அஜித் குமார் மீதான நிகிதாவின் புகார் மனு, அந்தப் புகாரை பதிவு செய்த ஆவணத்தை ஆய்வு செய்தவர், சம்பவத்தன்று பணியில் இருந்த காவலரிடம் விவரங்கள் கேட்டறிந்தார்.
பின்னர், நெடுஞ்சாலைத் துறை ஆய்வு மாளிகைக்கு வந்த நீதிபதி, சிவகங்கை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுகுமாரனிடம் விசாரித்தார். தொடர்ந்து, திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார், சிறப்பு சார்பு ஆய்வாளர் சிவக்குமார், அன்று பணியிலிருந்த காவலர் இளையராஜா ஆகியோரிடம் தனித்தனியாக விசாரித்தார்.
அதையடுத்து, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரத்திடம் விசாரணை நடத்தினார். இந்த நிலையில் புகார் மனுவில் உள்ள நேரமும் முதல் தகவல் உள்ள நேரமும் வேறு வேறாக வித்தியாசம் உள்ளது என்கிறார் கார்த்திக் ராஜா. இது குறித்து பேசியவர், " முதல் தகவல் 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நகை காணாமல் போனதாக குறிப்பிடப்பட்டுள்ளது. புகார் மனுவில் காலை 9 மணிக்கு வீட்டில் இருந்து தானும் (நிகிதா) அவரது அம்மா சிவகாமியும் கோவிலுக்குப் புறப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.நிகிதா 27ஆம் தேதி காலை 11 மணிக்கு கோவிலுக்கு வந்து சென்றுள்ளார். நகை காணாமல் போனதாக 3 மணிக்கு திருப்புவனம் காவல் நிலையத்தில் வாய் மொழியாக முதலில் புகார் அளித்துள்ளார். பிறகு இரவு 7 மணிக்கு வழக்கறிஞர் ஒருவர் உதவியுடன் அவர் வந்தோ அல்லது வராமலோ புகார் மனு அளித்துள்ளார். நிகிதா புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்டுள்ளது முதல் தகவல் அறிக்கை இந்த வழக்கிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என செய்தியாளர்களிடம் கூறிய மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன்
தொடர்ந்து பேசியபோது . "நகை காணவில்லை என்பது தொடர்பாக 27 ஆம் தேதி 3 மணிக்கு நிகிதா புகார் அளித்ததாகவும், அது தொடர்பாக திருப்புவனம் காவல் நிலையத்தில் சி.எஸ்.ஆர். அரசு தரப்பில் நீதிமன்றத்தில் வாதம் முன் வைக்கப்பட்டது."
"முதல் கட்ட விசாரணை தொடங்கிய திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ் குமார் திருக்கோவில் செயல் அலுவலரைத் தொடர்பு கொண்டு அஜித் குமாரிடம் விசாரணை நடத்தினார். அனுப்பி வைக்குமாறு தெரிவித்ததன் அடிப்படையில் அஜித் குமார் காவல் நிலையத்திற்கு விசாரணைக்குச் சென்றுள்ளார்.
காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த அஜித் குமார் காணாமல் போன நகை தொடர்பாக தனக்கு ஒன்றும் தெரியாது எனவும் தான் எடுக்கவில்லை என தொடர்ந்து சொல்லி வந்த நிலையில், நிகிதா இரவு 7 மணி அளவில் திருப்புவனம் காவல் நிலையத்தின் முன்பு நின்று கொண்டு ஊடகங்களுக்கு காரில் வைத்திருந்த நகையைக் காணவில்லை, நகையை காவலாளி அஜித் குமார் திருடியதாக பேட்டி ஒன்றை அளித்துள்ளார்." என்று ஆய்வாளர் ரமேஷ் குமார் மற்றும் துணைக் கண்காணிப்பாளர் தெரிவித்தார். சண்முகசுந்தரத்தை ஏன் இந்த வழக்கில் சேர்க்கவில்லை என கேள்வி எழுப்புகிறார் மூத்த வழக்கறிஞர் ஹென்றி டிபன்.
அஜித் குமாரை விசாரணைக்கு அழைத்து செல்ல அங்கீகாரம் இல்லாத தனிப்படை காவலர்களுக்கு உத்தரவிட்டார் திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் குமார் மானாமதுரை துணைக் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் ஆகிய இருவரையும் இதுவரை ஏன் வழக்கில் சேர்த்து அவர்களைக் கைது செய்யவில்லை என்ற கேள்வி நிகிதாவின் முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் எழுகிறது" என அவர் விவரித்தார்.
உடற்கூறாய்வுக்கு அனுப்பப்பட்ட காலதாமதம் குறித்து கேள்வி எழுப்புகிறார் ஹென்றி டிபன்.
28 ஆம் தேதி மாலை அஜித்குமார் உயிரிழந்ததாக காவல் ஆய்வாளர் அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்த நிலையில் 29 ஆம் தேதி மாலை வரை உடற்கூறாய்வுக்கு அனுப்பாமல் காலதாமதம் செய்ததற்கு என்ன காரணம் என பல்வேறு கேள்விகள் எழுகின்றன" என்றார்.
2011 ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு வழக்கு மோசடிகள் உள்ள நிகிதாவை ஏன் காவல்துறை இதுவரை விசாரிக்கவில்லை" என்ற கேள்வி பலமாக எழுவதாகக் கூறுகிறார் மக்கள் கண்காணிப்பக நிர்வாக இயக்குநர் மற்றும் மூத்த வழக்கறிஞர் ஹென்றி டிபேன்.அஜித்குமாரைத் தாக்கும் வீடியோவை நான் எடுத்தேன். இதை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த காரணத்தால் எனக்கும் என்னைச் சார்ந்தோரின் உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளது" என்கிறார், மடப்புரம் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் ஊழியர் சக்திஸ்வரன்.
தனக்கு ஆயுதமேந்திய காவல் பாதுகாப்பு வழங்குமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் பதிவாளர், காவல்துறை தலைமை இயக்குநர் ஆகியோருக்கு அவர் கடிதம் எழுதினார் அனுப்பியுள்ளார்.
அதன்படி, தென்மண்டல ஐஜி உத்தரவின் பேரில் இராமநாதபுரத்தில் இருந்து இரண்டு காவலர்கள் ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டனர். வைக்கப்பட்டுள்ளனர்.
'மாநில இந்தியாவில் சாட்சிகளை பாதுகாப்பதற்கு பல்வேறு சட்ட திட்டங்கள் இருந்தாலும் அதை அரசு முறையாக செயல்படுத்துவதில்லை' என சமூக ஆர்வலர்கள் விமர்சிக்கின்றனர் 08.07.2025 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு வரும் என்பதால் அதற்கு முன் தினம் மாலை 04.30 மணிக்கு மேல் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட அறிக்கை பகுதி II-பிரிவு 2
செயலகத் துறைகளால் வெளியிடப்படும் பொதுமக்களின் ஒரு பிரிவினருக்கு ஆர்வமுள்ள அறிவிப்புகள் அல்லது ஆணைகள்.
அரசாங்க அறிவிப்புகள்
உள் துறை (காவல்துறை-VIII)
சிவகங்கை மாவட்டத்தின் திருப்புவனம் காவல் நிலையத்தில் உள்ள பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS), 2023 பிரிவு 196(2) (A) இன் கீழ் குற்ற எண்.303/2025 இல் பதிவு செய்யப்பட்ட வழக்கை, 1946 ஆம் ஆண்டு டெல்லி சிறப்பு காவல் நிலையச் சட்டத்தின் பிரிவு 6 இன் கீழ் விசாரணைக்காக மத்திய புலனாய்வுப் பணியகத்திற்கு மாற்றுதல்.
[GO (2D). எண். 194, முகப்பு (காவல்துறை-VIII), 1 ஜூலை 2025, 17, ល, ល -2056.]
எண். II(2)/HO/582(j)/2025.
1946 ஆம் ஆண்டு டெல்லி சிறப்பு காவல் நிலையச் சட்டத்தின் (1946 ஆம் ஆண்டு மத்திய சட்டம் 25) பிரிவு 6 இன் கீழ், தமிழ்நாடு ஆளுநர் இதன் மூலம் டெல்லி சிறப்பு காவல் நிலைய உறுப்பினர்களின் அதிகாரங்கள் மற்றும் அதிகார வரம்பை தமிழ்நாடு மாநிலம் முழுவதும் விரிவுபடுத்துவதற்கு ஒப்புதல் அளித்து, வழக்கு நாட்குறிப்பை மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றுகிறார்.
தீரஜ் குமார், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர். வெளிவந்த நிலையில் நிகிதாவை இன்று வலைவீசித் தேடிக் கொண்டிருக்கிறார்களாம் காவல்துறை
ஆனால், அந்தப் பெண்மணி சாவகாசமாக ஒரு வீட்டு வாசலில் வைத்து தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் பேட்டி அளிக்கிறார்.
மக்கள் மனங்களில் கொந்தளித்துக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு விடை காணாமல், அந்தப் பெண்மணி அறியாமையில் உள்ளவர் போலவும், எந்த உயர் அலுவலரின் தொடர்பும் அவருக்கு இல்லை என்றும் நிருபிக்கத் தவிக்கும் அவசியம் அந்த தனியார் தொலைக்காட்சிக்கு ஏன் ஏற்பட்டது என்பது தான் தெரியவில்லை.
அரசியல்வாதிகள் அதிகாரமிக்கவர்கள் மட்டுமே சதி வலைகளை கட்டமைக்கிறார்கள் என்பதில்லை, அதில் அடிவருடிகளான பித்தலாட்டம் செய்து வாழும் சில ஊழல்கள் ஊடகத்தின் கைங்கரியங்களும் இருக்கிறது. தன்னையே முன்மாதிரியாக்கி நிகிதா விவகாரத்தில் அந்தத் தொலைக்காட்சி அடுத்த தலைமுறை பற்றி கவலைப்படாமல் எடுத்த முன்னெடுப்பே அப்பட்டமான சாட்சியாகும்!
ஆனால், அவர்கள் வீசிய பந்து அவர்கள் முகத்திலேயே அதே வேகத்தில் திருப்பி அடித்துவிட்டது. பார்வையாளர்கள் அனைவரும் காரித் துப்பினார்கள்.
இந்த நேர்காணல் ஒன்றே போதும், நிகிதாவின் பின்னுள்ள அந்த பலம் வாய்ந்த அதிகார மையத்தின் அதீத பலத்தை உணர்ந்து கொள்ள...!
வேறு தேவையில்லை. ஆனால் ஒரு நல்ல மூத்த வழக்கறிஞர் குழுமம் மற்றும் நல்ல நீதிபதி மற்றும் நல்ல சில சமூக ஆர்வலர்கள் மற்றும் விரைவில் நீதி விசாரணை நடத்தி 90 சதவீதம் முடித்த மாவட்ட நீதிபதி இந்த நிலையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி இந்த வழக்கின் குற்றப்பத்திரிக்கை சிபிஐ தாக்கல் செய்ய ஏதுவாக அமைந்தது. மேலும் பல விபரங்களை சிபிஐ விசாரணை வெளிக்கொண்டு வரும் லாக்கப் கொலைக் குற்றம் புரிந்தவர்கள் தண்டனை பெறுவார்கள் என்பது இனி நிதர்சனமான உண்மை
கருத்துகள்