தமிழ்நாடு முழுவதும் காவல்துறையில் 40 துணைக் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் -
காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் ஐபிஎஸ் உத்தரவில், சென்னை, சேலம், திருப்பூர், கடலூர், சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பணி செய்துவரும் காவல் அலுவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் காவல்துறையில் பணிபுரியும் துணைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் உதவி ஆணையர்களை பணியிடமாற்றம் செய்து காவல்துறை தலைமை இயக்குனர் டிஜிபி சங்கர் ஜிவால் ஐபிஎஸ் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை எம்.கே.பி. நகர் சரக உதவி காவல் ஆணையர் எம்.மதிவண்ணன், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி துணைப் பிரிவு துணைக் கண்காணிப்பாளராக மாற்றம்.
சென்னை மத்தியக் குற்றப்பிரிவு உதவி ஆணையராக இருந்த கே.வி.காவ்யா, திருச்சிராப்பள்ளி மண்டலத்திற்கும் மன்னார்குடி துணைப் பிரிவு துணைக் கண்காணிப்பாளராக நியமனம்
கடலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணைக் கண்காணிப்பாளராக க பணியாற்றிய பார்த்திபன், கடலூர் மாவட்டம் திட்டக்குடி துணைப் பிரிவு துணைக் கண்காணிப்பாளராகவும் நியமனம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் பிரிவு துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய எஸ்.பாலகிருஷ்ணன், தருமபுரி மாவட்டம் பென்னாகரம் துணைப் பிரிவு துணைக் கண்காணிப்பாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு துணைக் கண்காணிப்பாளர் பி.மகாலட்சுமி, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பட்டி துணைப் பிரிவு துணைக் கண்காணிப்பாளராகவும் நியமனம்.
சேலம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, சிஐடி, என். லட்சுமணன், சேலம் துணைக் கண்காணிப்பாளராக மாற்றம்
கோயம்புத்தூர் காட்டூர் சரகத்தைச் சேர்ந்த உதவி ஆணையர் டி.எச்.கணேஷ், திருப்பூர் கொங்குநகர் சரக உதவி ஆணையராகவும் நியமனம்
திருப்பூர் கொங்குநகர் சரக உதவி ஆணையராக இருந்த எம்.வசந்தராஜ், ஈரோடு மாவட்டம் பெருந்துறை துணைப்பிரிவு துணைக் கண்காணிப்பாளராகவும் நியமனம்
ஈரோடு மாவட்டம் பெருந்துறை துணை பிரிவு துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய ஆர்.கோகுலகிருஷ்ணன் கோயம்புத்தூர் மாவட்டம் காட்டூர் சரக உதவி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீரங்கம் சரக துணைக் கண்காணிப்பாளர் வி.எஸ்.எஸ். ஆனந்த் ஆரோக்கியராஜ், திருச்சிராப்பள்ளி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிஐடியாக நியமிக்கப்பட்டுள்ளார்.சிவகங்கை மாவட்டம் மானாமதுரை துணைக் கண்காணிப்பாளராக இருந்த சண்முகசுந்தரம், திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் காரைக்குடி துணைக் கண்காணிப்பாளரான பார்த்திபனை மானாமதுரை துணைக் கண்காணிப்பாளராக நியமித்து உள்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.
இன்று சிபிஐ விசாரணை துவங்கிய நிலையில் புதிய துணைக் கண்காணிப்பாளர் நியமனம். மேலும் 33 காவல்துறை கண்காணிப்பாளர்களை மாற்றம் செய்து உத்தரவிட்டது உள்துறை அதில் தேனி மாவட்டத்தில் பணி செய்த கண்காணிப்பாளர் சிவகங்கை மாவட்டத்திற்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளார். மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் காத்திருப்பு பட்டியலில் இருந்த சிவகங்கை மாவட்டக் கண்காணிப்பாளருக்கு தற்போது தலைமையக பொருளாதார குற்றப்பிரிவு கண்காணிப்பாளர் பணியை தீரஜ் குமார் இஆப அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறைச் செயலாளர் இந்த மாறுதல் உத்தரவை வழங்கியுள்ளார்
கருத்துகள்