கரூர் மாவட்டம், கடவூர் அருகே பிறப்புச் சான்றிதழில் பெயர் திருத்தம் செய்வதற்காக,
5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய தாசில்தாரை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்சஒழிப்புத் துறை கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் திங்களூர் பகுதியில் வசிப்பவர் வேல்முருகன் மனைவி ரேவதி. இவரது சொந்த ஊர் கரூர் மாவட்டம், கடவூர் அருகே உள்ள வீரணம்பட்டி ஆகும் அங்கு தான் அவரது மகள் பிறந்தார்
வேல்முருகன் மனைவி ரேவதி, விவசாயக் கூலித் தொழிலாளி. இவரது மகள் பவித்ரா, ஈரோட்டில் உள்ள கல்லுாரியில் படித்து வருகிறார். பவித்ராவின் பிறப்புச் சான்றிதழில் பவித்ரா என்பதற்கு பதிலாக பௌத்ரா என்று இருந்துள்ளது. தவறாகப் பதிவான நிலையில் பள்ளிச் சான்றுகள், ஆதார் மற்றும் குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களில் பவித்ரா எனச் சரியாக இருக்கிறது.
இந்த நிலையில் பிறப்புச் சான்றிதழில் தனது மகளின் பெயர் தவறாக இருப்பதால் பிற்காலத்தில் பிரச்சினைகள் வரும் எனக் கருதிய ரேவதி, கடவூர் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று பெயர் திருத்தம் செய்வதற்காக கடந்த 1½ ஆண்டுகளாக முயற்சி செய்து வந்துள்ளார்
அதை அரசிதழில் மாற்றம் செய்வதற்கு பணம் செலுத்தி விண்ணப்பம் செய்த நிலையில் கடவூர் தாசில்தார் சான்றிதழ் கேட்டு எழுது பொருள் அச்சுத் துறை சார்பில் அளித்த மனு திரும்ப வந்த நிலையில் தாலுகா அலுவலகத்தில் பெயர் மாற்றம் செய்வதற்காக, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முயற்சி செய்து வந்தார். இந்த நிலையில், நேற்று கடவூர் தாசில்தார் சவுந்தரவல்லியை சந்தித்த ரேவதி, மகளின் பிறப்பு சான்றிதழில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பம் அளித்தார். அதைப் பெற்றுக் கொண்ட தாசில்தார் சவுந்தரவல்லி, பெயர் மாற்றம் செய்வதற்கு, 5,000 ரூபாய் லஞ்சமாகத் தர வேண்டும் அப்போது தான் மாற்றம் செய்து தரமுடியும் எனக் கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ரேவதி, கரூர் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்தார். அதையடுத்து ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அறிவுரையின்படி, நேற்று தாசில்தார் சவுந்தரவல்லியை சந்தித்த ரேவதி அவரிடம் பினாப்தலீன் இரசாயனப் பொடி தடவிய, 5,000 ரூபாயை அரசு சாட்சி முன்னிலையில் லஞ்சமாக வழங்கினார். அப்போது மறைந்திருந்த, ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரை பணம் பெற்ற கையுடன பிடித்து கைது செய்து விசாரித்னர் . பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் சேர்த்தனர். இதில் பொது நீதி யாதெனில்:-இலஞ்சம், லாவண்யம் மற்றும் ஊழல் ஒழிப்புக்கு முன் முதல் படிக்கட்டு இது.பதவி என்பதற்கும் பணி என்பதற்கும் சிலருக்கு வித்தியாசம் தெரியவில்லை. அதே போல தான் அதிகாரத்திற்கும் அலுவலுக்கும் பலருக்கும் வித்தியாசம் தெரியவில்லை. Office அல்லது அலுவலகம், Officer என்பது அலுவலர் Ruler Attharity அல்ல அதிகாரியும் அல்ல அதிகாரம் என்பது authority, அதன் தமிழாக்கம்
அதிகாரமுள்ளவர் authority, ruler noun ஆணையரிமை
authority எனலாம், Dictator என்பது சர்வாதிகாரி இங்கு அரசு வழங்கும் சம்பளத்திற்குப் பணி செய்யும் பலரையும் ஜனநாயக மக்களாட்சி தத்துவத்தில் அதிகாரி என அழைப்பது தவறு ... சாமானிய மக்களுக்கு அறியாமையால் தலையாரி கூட அதிகாரிமான அதிசயம்...அதுவே ஊழலின் ஊற்றுக்கண் மமதை மக்களின் முன் அதிகாரம் செய்யத் தூண்டும். மன்னர் ஆட்சிக் காலத்தில் கூட சம்பளம், அம்பலம், உம்பலம் என மூன்று நிலையில் மன்னர் தவிர பணியாளர்கள் யாருக்கும் அதிகாரமில்லை. ஆனால் மக்கள் ஆட்சியில் மக்கள் அறியாமை தான் இந்த நிலைக்கு காரணம்.
கருத்துகள்