டெல்லியில் இந்திய பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த பயிற்சி பெறும் அலுவலர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், துணை ஜனாதிபதி
ஜெகதீப் தன்கர் கலந்து கொண்டு பேசிய போது அவர், வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் கூறும் விசயங்களை கேட்டு, அவர்களுடைய வழிகாட்டுதலின் படி நாம் நடக்க வேண்டியதில்லை. இறையாண்மை வாய்ந்த இந்த நாட்டில், அனைத்து முடிவுகளும் அதன் தலைமையால் எடுக்கப்படுகின்றன என்றார்.நம்முடைய உள்நாட்டு விவகாரங்களை எப்படிக் கையாள வேண்டும் என இந்தியாவுக்கு அறிவுரை கூற பூமியில் வேறு எந்த சக்தியும் இல்லை. பிற நாடுகளுடன் இணக்கத்துடன் உள்ள நாட்டில் நாம் வாழ்கிறோம். ஒன்றாக வேலை செய்கிறோம். பரஸ்பர மதிப்பு மற்றும் தூதரக பேச்சுகளில் ஈடுபடுகிறோம்.
ஆனால், நாம் இறையாண்மை கொண்டவர்கள். நம்முடைய சொந்த முடிவுகளை நாமே எடுப்பவர்கள் என்று பேசியுள்ளார். பஹல்காமில் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது இந்திய ராணுவம், பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து தாக்குதலை நடத்தியது.
9 பயங்கரவாத உட்கட்டமைப்புகளை இலக்காக கொண்டு இந்திய ஆயுத படைகள் சார்பில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழல் உருவானது. எனினும், 4 நாட்களுக்கு பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த முடிவுக்கு வந்தன. பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவது இந்தியாவின் நோக்கமல்ல என மத்திய அரசு கூறியது. பயங்கரவாதிகளுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரிவித்தது.
ஆனால், அமெரிக்காவின் தலையீட்டாலேயே இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நடைபெறாமல் முடிவுக்கு வந்தது என அந்நாட்டு ஜனாதிபதி டிரம்ப் கூறினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தையின் முடிவாகவே போர் நிறுத்தம் ஏற்பட்டது என இந்தியா கூறியது.
3-ம் நாட்டின் தலையீடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் மத்திய அரசு கூறி வருகிறது. இந்நிலையில், டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசும்போது, வான்வெளியில் 5 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என நினைக்கிறேன் என்றார்.
இந்த சூழலில், காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறிய விசயங்களை பற்றி பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் வெளிப்படையாக தெளிவுப்படுத்த வேண்டும் என்றார். டிரம்புடன் நீண்டகால நட்புறவில் இருக்கும் பிரதமர், இதுபற்றிய தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் கூறினார். இந்நிலையில், துணை ஜனாதிபதி இதைக் கூறியுள்ளார். ஜெகதீப் தன்கர் 18 மே, 1951ஆம் ஆண்டு பிறந்தார் இவருக்கு தற்போது வயது 75 அவர் கருத்து மருத்துவச் சிகிச்சை எனத் தெரிவித்த நிலையில் நமது பார்வையில் ஒரு நல்ல தலைவர் அவர் ஆர் எஸ் எஸ் தலைவர் கூற்றுப்படி தற்போது 75 வயதில் ராஜினாமா செய்து குடியரசுத் தலைவரிடம் கொடுத்த கடிதம் ஏற்கப்பட்டது என்பது தற்போது உள்ள நிலையில் இனி 75 வயதில் உள்ள பல தலைவர்கள் இதே நடைமுறையில் வெளிவரும் நிலை உள்ளது.. துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் பொது வாழ்வில் நேர்மையான தலைவர். வாழ்த்துக்கள் மருத்துவக் காரணங்களை மேற்கோள் காட்டி துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ராஜினாமா
கருத்துகள்