திருப்புவனம் தனிப்படை காவல் துறை நடத்திய மரண வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றம்!
தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பை வழங்கும்!
இனி இதுபோன்ற செயல் எக்காலத்திலும் எங்கும் யாராலும் நடந்துவிடக்கூடாது!" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிடக் காரணம் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை கிடுக்கிப்பிடி நீதி விசாரணை உத்தரவு தான் ஆனால் சிபிஐ க்கு வழக்கை மாற்றம் செய்து அரசு உத்தரவு யாரைக் காப்பாற்ற முயற்சி நடைபெறுகிறது?
தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை அமர்வு சரமாரிக் கேள்வி கேட்டு மதுரை மாவட்டத்தின் நீதிபதி விசாரணை நடத்த நியமனம் செய்த நிலையில்
நகை காணாமல் போனதாக புகார் இல்லை என்ற வழக்கில் ஏன் FIR பதியவில்லை?
யாருடைய உத்தரவின் பேரில் விசாரணை சிறப்பு படையிடம் ஒப்படைக்கப்பட்டது?
சிறப்பு படையினர் தாங்களாகவே வழக்கை கையில் எடுத்து விசாரிக்கலாமா? மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத்தை அவசர அவசரமாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியது ஏன்?: உயர் அலுவலர்களைக் காப்பாற்ற வேண்டும் என உண்மையை மறைக்கக் கூடாது
சமூக வலைதளங்களில் வந்த தகவலைப் பார்த்து 2 மணி நேரத்தில் தனிப்படை விசாரணையை துவங்கியதா?
காவலர்கள் மாமூல் வாங்கும் ஏராளமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் உள்ளன, 2 மணி நேரங்களில் விசாரிப்பீர்களா?
அடிப்பதற்கு காவல்துறை எதற்கு? புலனாய்வு செய்வதற்கே காவல்துறை. முழு உண்மையையும் சொல்ல தமிழ்நாடு அரசு மறுக்கிறது.
சி.சி.டி.வி காட்சிகளில் இருந்து மறைக்க வெளியிடங்களுக்கு கொண்டு சென்று இளைஞர் அஜித்தை அடித்து துன்புறுத்தியதா காவல்துறை?
2 நாட்களாக வேறு வேறு இடங்களுக்கு கொண்டு சென்று விசாரிக்கும் அதிகாரத்தை சிறப்புக் காவல் படைக்கு கொடுத்தது யார்?
காவல்துறை, நீதித்துறையை சேர்ந்தவரின் குடும்பத்தை சேர்ந்த ஒருவரை அடித்துக் கொலை செய்தாலும் காவல்துறை இப்படி தான் நடந்து கொள்வார்களா?
உயர் அலுவலர்களின் சட்டவிரோத கட்டளைகளுக்கு காவலர்கள் கீழ்படிய வேண்டிய அவசியமில்லை-
அடைக்களம் காத்த அய்யனார், மற்றும் பத்திரலானியம்மன் திருக்கோவில் சிவகங்கையில் இருந்து வெளியாகும் சில காணொளிக் காட்சிகள், நகை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட பின்னர் காவலில் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் 27 வயது கோயில் பாதுகாவலர் அஜித் குமார், பின்னர் மூன்றாம் நிலை சித்திரவதையால் இறந்ததாகக் காட்டுகின்றன. சிவகங்கை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இராமநாதபுரம் மாவட்டக.அ காவல்துறை கண்காணிப்பாளர் சந்தீஷ் சிவகங்கை மாவட்ட பணிப் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வழக்கு விசாரணைக்கு வந்தவுடன் சிவகங்கை மாவட்டத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் இடமாற்றம் செய்துள்ளீர்களே? அவரை இடைநீக்கம் செய்திருக்க வேண்டாமா? என்று நீதிபதிகள் சரமாரிக் கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், "சம்பவம் நடந்த அன்று அஜித்குமாரை திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. அப்படி என்றால் அங்கிருந்தே விசாரணை தொடங்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், அவரது உடல் மதுரை கொண்டு வரப்பட்டது சந்தேகத்தை எழுப்புகிறது. அவரது தாயாரும், சகோதரரும் 28-ஆம் தேதி இரவு 12 மணி வரை தனது மகன் குறித்து விசாரித்துள்ளனர். திருப்புவனம் காவல் நிலையத்தில் இருந்த கண்காணிப்பாளர் அஜித்தின் அம்மாவிடம், உங்கள் மகன் இறந்து விட்டார் எனக் கூறியுள்ளார் என்று மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹென்றி டிபேன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர், நகை காணாமல் போனது தொடர்பாக எப்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டது?" என்று கேள்வி எழுப்பினர்.
ஜூன் மாதம் 28-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், நேற்று இரவே அது ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.
புகார் கொடுத்தவுடன் சி.எஸ்.ஆர். (CSR) பதிவு செய்யப்பட்டதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நகை திருட்டு புகார் கொடுக்கப்பட்ட பிறகு ஏன் காவல்துறை வழக்குப்பதிவு செய்யவில்லை? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இது முழுக்க முழுக்க சட்ட விரோதமாக நடந்த காவல் மரணமாகும். தலைமை காவலர் கண்ணன், மானாமதுரை டி.எஸ்.பி. (DSP) ன் சிறப்புப் படையைச் சேர்ந்தவர். இவர் அங்கிருந்து, திருப்புவனம் வந்து விசாரித்தது விதி மீறலாகவே பார்க்கப்பட வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும், அஜித்குமார் விசாரணையின் போது தப்பித்து ஓட முயற்சித்துள்ளார் என காவல்துறை எப்போதும் போல கதை கூறுகின்றனர். அஜித்குமார் குடும்பத்திடம் 50 லட்சம் ரூபாய் பேரம் பேசப்பட்டது. சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய திருப்புவனம் நீதித்துறை நடுவரை காவல்துறையினர் சூழ்ந்திருந்தனர். உடற்கூராய்வு தொடங்குவதற்கு முன்பாக அஜித்தின் உடலை முழுமையாக பார்க்க தாய் மற்றும் சகோதரரை அனுமதிக்காதது ஏன்?" என சரமாரியாக கேள்விகளை எழுப்பிய மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், அஜித்குமார் காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டதை மறைக்கவே இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்ததாகவும் குற்றம்சாட்டினார்.
பின்னர், அடிப்பதற்கு காவலர்கள் எதற்கு? கிராம மக்களிடம் கொடுத்தால் உண்மையை சொல்ல வைத்துவிடுவார்கள் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
காவல்துறை, நீதித்துறையை சேர்ந்தவர்களின் குடும்பத்தினர் கொலை செய்யப்பட்டாலும் இப்படித்தான் நடந்து கொள்வீர்களா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த கேள்விகளுக்கு டி.ஜி.பி. (DGP) பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்த நிலையில் தான் தற்போது முதல்வர் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். நேர்மையான மக்கள் சிலரது சந்தேகங்கள் இவை இனி அதை சிபிஐ பார்த்து விசாரணை நடத்தும். உடலில் அணிய வேண்டிய 10 பவுன் நகையை காரின் பின் சீட்டில் கழட்டி வைத்தது ஏன்..?
அம்மா / மகள் இருவரில் அது யாருடைய நகை..? என்ன நகை அது..? எங்கு வாங்கியது ஹால்மார்க் உள்ளதா ?
மதுரையில் இருந்து 25கிமீ மடப்புரம் கோவிலுக்கு காரை ஓட்டிக்கொண்டு வந்த மகள் டாக்டர் நிகிதா... பின் சீட்டில் நகை வைக்கப்பட்ட அந்த காரின் சாவியை... முன் பின் பழக்கம் இல்லாத (?) 3ஆம் தரப்பு நபர் ஒருவரிடம் கொடுத்து பார்க்கிங் செய்யச் சொல்லிவிட்டு கோவிலுக்குள் போனது ஏன்..?
தனக்கு கார் ஓட்டவே தெரியாத அஜித்குமார், காரை பார்க் செய்ய ஒப்புக்கொண்டு கார் சாவியை ஏன் பெற்றுக்கொண்டார்..?
காரில் நகை இருந்தால் அதை எடுத்துக்கொள்ள வேண்டும், அல்லது அணிந்து கொள்ள வேண்டும் என்கிற பாதுகாப்புணர்வு ஏன் அம்மா மகள் இருவருக்கும் அப்போது ஏற்படவே இல்லை..? மற்ற பொருட்கள் எனில் பெண்கள் மறப்பார்கள். கவனமின்மை சாத்தியம். ஆனால், நகையை எப்படி பெண்கள் மறந்தனர்..? அம்மா சிவகாமி கூட ஞாபகப்படுத்தவில்லையா..?
அஜித்திடம் சாவியை பெற்று காரை எடுத்து ஓட்டி பார்க் செய்த அந்த 4வது நபர் யார்..?
நகை காணவில்லை என்றதும், நகைக்கு சொந்தக்காரர்கள், 7கிமீ அருகேயுள்ள திருப்புவனம் காவல் நிலையத்தில் உள்ளூர் காவலர்களிடம் புகார் அளித்தார்களா..?
30கிமீ தூரமுள்ள மானாமதுரையில் இருந்து யூனிஃபார்ம் அணியாமல் (லுங்கி, கோடு போட்ட பேண்ட், டி ஷர்ட், சாதா சட்டை எல்லாம் அணிந்தபடி வந்ததாக ஊர் மக்கள் கூறுகிறார்கள்) காவல் தனிப்படை ஒன்று மடப்புரம் கோவிலுக்கு விசாரணைக்கு அவசரமாக ஓடி வந்தது ஏன்..?
பக்கத்தில் உள்ள திருப்புவனம் காவல் நிலையத்திற்கு கூட்டிப்போய் விசாரணை செய்யாமல் தனிப்பட்ட இடத்தில் விசாரணை நடந்தது ஏன்..?
தப்பி ஓடும்போது தடுக்கி விழுந்து காக்கா வலிப்பு ஏற்பட்டு மரணம்" என்கிற பொய் FIR போட்டது ஏன்..? போட ஒப்புக்கொண்டது ஏன்..? (யூனிஃபார்ம் போடாத டி ஷர்ட் அணிந்த ஒருவரின் பிரம்படி வீடியோ வெளியாகி காக்கா வலிப்பு கதை எல்லாம் பொய் என்றாகிவிட்டது).
உயர் அலுவலர்களின் உத்தரவின் படிதான் தங்கள் வீட்டுக் காவலர்கள் இதைப்போன்று மனிதமற்று சட்ட விரோதமான கொடூரத்தில் ஈடுபட்டதாக அந்த குற்றவாளி வீட்டுப் பெண்கள் தர்ணா போராட்டம் செய்கிறதாம். கைதான காவலர் குடும்பத்தினர் கூறியுள்ளனர் எனில்... கீழ்நிலை காவலர்களுக்கு சட்ட விரோதக் கட்டளை இட்ட குற்றத்திற்காக கைதாகி சிறை செல்ல வேண்டிய அந்த உயர் அலுவலர்கள் யார்..?
இதைவிட அதிகளவில்... 100 பவுன் 200 பவுன்... என்று நகைகள் திருடு போன வழக்கில் எல்லாம் மெத்தனம் காட்டும் காவல்துறை.இவர்களின் 10 பவுன் நகைக்காக உடனடியாக இத்தனை தீவிரமாக உடனடி நடவடிக்கையில் இறங்கியது ஏன்..?
இந்த டாக்டர் நிகிதா... சிவகாமி இருவரும் யார்..? இவர்களின் பின்னணி என்ன..?! அவர்களுக்கு உதவியாக உள்ளது யார்..
மேற்கண்டவை போன்ற பல கேள்விகள் தெளிவான பதிலற்று உள்ளன. வழக்கில் பல மர்மங்கள் விலக வேண்டியுள்ளது.
அதை விலக்க வேண்டிய பொறுப்பு சிபிஐ வசம் மாறுகிறது நேற்று சிபிசிஐடி வசம் சென்ற விசாரணை நாளை முதல் சிபிஐ வசம் செல்கின்ற காரணம் உயர்நீதிமன்ற நீதியரசர்களின் கிடுக்கிப்பிடி விசாரணை தான் வாதாடிய ஹென்றி டிபேன் தான்...நீதி வெல்லும்
கருத்துகள்