திருமலா பால் நிறுவன கருவூல மேலாளர் நவீன் பொலினேனி மரணத்தில் மர்மம்.
சென்னையில் மோசடிப் புகாரில் விசாரிக்கப்பட்ட திருமலா பால் நிறுவன மேலாளர் நவீன் மரணம் தற்கொலையாக இல்லாமல் கொலையாக இருக்கலாம் எனச் சந்தேகம் எழுப்பும் அரசியல் தலைவர்கள்.
அந்த வழக்கை விசாரித்த துணை காவல் ஆணையர் பாண்டியராஜன் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் திருப்பூர் மாவட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்த போது குடிநீர் பிரச்சனைக்காக அப் பகுதி மக்கள் போராட்டம் நடத்திய போது அவர் பெண்களை கை நீட்டி அடித்த குற்றச்சாட்டில் அங்கிருந்து பணியிடமாற்றம் செய்யப்பட்டவர் மேலும் பொள்ளாச்சி பாலியல் குற்ற சம்பவத்தில் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்டு அந்த பிரச்னையை மூடி மறைக்கப் பார்த்தார். என்ற குற்றச்சாட்டில் அங்கிருந்தும் பணியிடம் மாற்றப்பட்டார், இப்போது திருமலா பால் நிறுவனத்தில் பணம் கையாடல் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு அதன் மேலாளர் நவீன் FIR பதிவு செய்யப்படாமலே சட்ட விரோதமாக விசாரிக்கப்பட்டு மரணம் அடைந்திருக்கிறார்.
இது தற்கொலையா அல்லது மர்ம மரணமா என்பதை விசாரிக்க வேண்டும். ஏனென்றால் துணை ஆணையர் பாண்டியராஜனின் கடந்தகால நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதமாக இருக்கிறது. இதில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உண்மைகள் வெளிவர வேண்டும் என்பதே தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட பலரது கருத்து.உயிரிழந்த மேலாளர் நவீன் ஆஃப்-ரோட் பிரியர் என்பதும் அவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஜீப்புகளை இதற்காகவே வைத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இதற்காக ஒரு வாட்ஸ் அப் குரூப்பையும் வைத்துள்ளார். ஆஃப்-ரோட் என்பது மலைப்பாங்கான பகுதிகளில் சாகசமாக ஜீப்புகளை இயக்குவதாகும். அந்த அளவிற்கு மன தைரியம் கொண்ட நபர் எப்படி தற்கொலை செய்து கொண்டிருக்க முடியும் என்ற எழுவினா ஒன்றும் இந்த விவகாரத்தில் தொக்கி நிற்கிறது.
கையாடல் செய்த திருமலா பால் மேலாளர் சடலமாக மீட்கப்பட்ட விவகாரம்.. காவல்துறை எப்படி முடிவுக்கு வந்தது? - என பாஜகவின் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்சென்னையில், சந்தேகத்திற்கிடமான நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்ட திருமலா பால் நிறுவனத்தின் கருவூல மேலாளர் நவீன் பற்றி தமிழ்நாடு காவல்துறையின் குறிப்பு;
நவீன் உடல், கைகள் பின்பக்கம் கட்டப்பட்ட நிலையில், நைலான் கயிற்றில் தொங்கவிடப்பட்டு இருந்தது..
திருப்புவனம் அஜித்குமார் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட நிகழ்வுக்கும், தற்போது, நவீன் இறப்புக்கும் பொதுவான ஓரே சந்தேகம், தான் அதை நீதிமன்றத்தின் மூலம் தான் தீர்வு காண வேண்டும்.
கருத்துகள்